Published:Updated:

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 
விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 
விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

வர்த்தக யுத்தம்... இந்தியாவைக் குறிவைக்கும் ட்ரம்ப்..!

சீன அதிபரான ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகிய இருவருக்குமிடையே இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டின்போது நேருக்குநேர் சந்திக்கவிருக்கிறார்கள். கடந்த எட்டு மாதங்களாக உலகையே அச்சுறுத்திவந்த அமெரிக்க - சீன வர்த்தகப் போர் இந்தச் சந்திப்பின்மூலம் முடிவுக்கு வரும் வகையில், புதிய வணிக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருப்பதாகச் செய்திகள் வெளியாக, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் உட்பட பலரும் மகிழ்ச்சியடைந்தனர். 

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

இந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள், இந்தியாவுக்கு வழங்கிவந்த சிறப்புச் சலுகைகளைப் பறிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது, நமது ஏற்றுமதியாளர்களைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.    

அதிரடிகளுக்குப் பஞ்சமில்லாத அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது அடுத்த நடவடிக்கையாக, முன்னுரிமைத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள சலுகைகளைத் திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக அறிவித்திருக்கிறார். இந்தியச் சந்தையைக் குறிவைக்கும் அமெரிக்க நிறுவனங்களிடம் இந்திய அரசு நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டும் ட்ரம்ப் அரசு, குறிப்பாக அந்த நாட்டின் மருத்துவ இயந்திரங்கள் மற்றும் பால்பொருள் ஏற்றுமதியில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. 

- இந்தச் சலுகை பறிப்பு நடவடிக்கையின் விளைவுகள் குறித்து விரிவாகச் சொல்லும் `வர்த்தக யுத்தம்... இந்தியாவைக் குறிவைக்கும் ட்ரம்ப்..!’ எனும் நாணயம் விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

இன்னொரு இசைத்தமிழன்!

அமெரிக்காவில், ரம்மியமான ஒளி படர்ந்த ஓர் இசை அரங்கம்... அங்கு பியானோவில் விளையாடுகின்றன லிடியனின் விரல்கள்.. அந்த ரியாலிட்டி ஷோவுக்கு வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்ட, சின்னப் புன்னகையுடன் அதை ஏற்றுக்கொள்கிறான் தமிழ்ச் சிறுவன் லிடியன் நாதஸ்வரன். இந்த நிகழ்ச்சியின் வீடியோவை அமிதாப்பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து லிடியனுக்கு வாழ்த்துச் சொல்ல, வைரல் ஆனது அந்த வீடியோ. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள லிடியனின் வீட்டுக்குச் சென்றேன்.

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

``...இது கஷ்டமான இசைக் குறிப்பு என்பதால நிறைய பயிற்சி வேணும். நிகழ்ச்சியில் வாசிக்க நான் இதைத் தேர்வு செஞ்சிருக்கேன்னு சொன்னதுமே எல்லோரும் கிளாப்ஸ் பண்ணினாங்க. அடுத்த நொடி 208 பீட்ஸில் அதை இசைக்க, நடுவர்கள் ஷாக்கிங் சர்ப்ரைஸோடு பார்த்தாங்க. தொடர்ந்து அதை நான் 325 பீட்ஸில் வாசிக்க, நடுவர்கள் உட்பட எல்லோரும் எழுந்து கைதட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ டாடி அழுதுட்டே கிளாப் பண்ணினாங்க. இந்த ரியாலிட்டி ஷோவில் அடுத்தடுத்து நிறைய ரவுண்ட்ஸ் இருக்கு. ஒவ்வொரு ரவுண்டிலும் ஒரு புதுத் திறமையைக் காண்பிக்கப்போறேன். நிச்சயமா ஜெயிப்பேன். பரிசுக்காக இல்ல, அப்பாவோட சந்தோஷத்துக்காக!’’ என்று மன உறுதியுடன் கூறிய லிடியன் குறித்த `இதோ இன்னொரு இசைத்தமிழன்! எனும் ஆனந்த விகடன் நேர்காணல் கட்டுரையை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

தேவேந்திர குல வேளாளர்! - பெயர் மாற்றம்... சட்டத்தின் சாத்தியங்கள் என்ன?

"பெயர் மாற்றம் என்பது, அந்தச் சமூகத்தைச் சார்ந்த பெருவாரியான மக்களின் விருப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால், எஸ்.சி பிரிவிலிருந்து பி.சி பிரிவுக்கு மாற்றப்படுவதை அந்தச் சமூக மக்கள் விரும்பமாட்டார்கள், அப்படி நடந்தால் பல காலமாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியிலிருந்து மீண்டெழும் வாய்ப்பை அவர்கள் இழப்பார்கள். தென்மாவட்டங்களில் இன்னும் சாதியக் கலவரங்கள் நடக்கின்றன. அங்கு தீண்டாமை ஒழியவில்லை. ஒருவேளை அவர்களைப் பட்டியலினப் பிரிவுகளில் இருந்து நீக்கிவிட்டால், இந்த சாதியக்கொடுமை குறையும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்த மாற்றத்துக்குச் சிலர் கோரிக்கைவைக்கிறார்கள். ஆனால், இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது சாதிய ஒழிப்புக்கான தீர்வும் கிடையாது..."

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

- ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசியலில் சாதி பேசப்படாமல், சாதிக்காக அரசியல் பேசப்படும் காலம் இது. சாதியக் கட்டுடைப்பு என்பதை முன்னெடுக்காமல், சாதியப் பாதுகாப்பை முன்னிறுத்தும் அரசியல் சூழ்நிலையே இன்று நிலவுகிறது. 'ஆதிதிராவிடர் இனப்பிரிவுகளில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் ஆகிய ஆறு பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் நிபுணர் குழு அமைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது சாத்தியமா, அப்படி மாற்றப்பட்டால் எஸ்.சி பிரிவிலிருந்து பி.சி பிரிவுக்கு உடனே மாற்றப்படுவார்களா,  இதனைச் சட்டரீதியாகச் செயல்படுத்தும் முறைகள் என்ன, இதனால் இடஒதுக்கீட்டில் மாற்றம் வருமா? என்று பல கேள்விகள் எழுகின்றன. இதுகுறித்த விரிவான புரிதலை ஏற்படுத்தும் 'தேவேந்திர குல வேளாளர்! - பெயர் மாற்றம்... சட்டத்தின் சாத்தியங்கள் என்ன?' எனும் ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்!

குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று போக்ஸோ சட்டத்தின் பிரிவு 28-ல் விளக்கப்பட்டுள்ளது. பொதுவாக, நீதிமன்ற சூழலைக் கண்டு குழந்தைகள் பயப்படுவார்கள். அதுவே, சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குக்கு அவசியமான சிலர் முன்னிலையில் மட்டுமே நடத்தப்படும் சூழலில் குழந்தையின் அச்சம் விலகும். மேலும் இதுதொடர்பான வழக்குகள் துரிதமாக நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தர முடியும்.

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

நீதிமன்ற விசாரணையின்போது குழந்தை யின் அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். குழந்தை சாட்சியம் அளிக்கும்போது அடுத்த நிகழ்ச்சியைத் தெரிவிக்க அவகாசம் தேவைப் பட்டால் இடைவெளி எடுத்துக்கொள்ளலாம். ஏழு வருட அனுபவம் வாய்ந்த ஒருவர்தான் பிராசிக்யூட்டராக இந்த வழக்கைக் கையாள வேண்டும். சாட்சியக் கூண்டு இருக்கக் கூடாது. இவையெல்லாம் இந்த நீதிமன்றத்தின் சிறப்பு அம்சங்கள்...

- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் நோக்கம், வரையறை மற்றும் நடைமுறை பற்றி, அவள் விகடன் இதழில் பேசும் வழக்கறிஞர் வைதேகி பாலாஜியின் 'பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்!' கட்டுரையை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

ஒரு வீடு... ஒரு குடும்பம்... ஒரு குழு!

"படத்துல முக்கியக் கதாபாத்திரமாவே வர்ற அந்த வீட்டைக் கண்டுபிடிக்கிறதுதான் பெரும்பாடா இருந்தது. கிட்டத்தட்ட 300 வீடுகளைப் பார்த்து, இந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தோம். குழந்தைக்கு சாக்லேட் எல்லாம் கொடுத்துப் பேசுற ஒரு ஹவுஸ் ஓனரைக் காட்டியிருப்போம்ல... அவங்கதான், இந்த வீட்டின் ஒரிஜினல் ஓனர்ஸ்..."

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

'டுலெட்' படத்தில் ஹவுஸ் ஓனராக அட்ராசிட்டி செய்த ஆதிரா, நிஜத்திலும் ஹவுஸ் ஓனர்! "படத்துல வர்றமாதிரி இல்லைங்க நான். நிஜத்துல, ஹவுஸ் ஓனரா நான்தான் ஏமாளியா இருந்திருக்கேன். ஏன்னா, என் வீட்டுல குடியிருந்தவங்க, 'ஈபி பில்லை ஓனர்தான் கட்டணும்'னு சொல்லி, குடியிருந்தாங்க. பிறகுதான், அதெல்லாம் வாடகைக்கு வர்றவங்கதான் கொடுப்பாங்கன்னு தெரிஞ்சது. நான் துபாய்ல இருந்து சென்னைக்கு வந்திருந்த சமயம் அது. எனக்கென்ன தெரியும்... பல மாசம் இப்படியே ஏமாந்திருக்கேன். பிறகு, வீட்டை வாடகைக்கே விடலையே!" எனச் சிரிக்க, படத்தில் நடித்த அனுபவம் சொன்னார்கள், ஷீலாவும் சந்தோஷும்.

- 'டுலெட்' டீம் உடனான சந்திப்பு அனுபவத்தையும், அப்படக் குழு உருவான விதத்தையும் முழுமையாக விவரிக்கும் 'ஒரு வீடு... ஒரு குடும்பம்... ஒரு குழு!' எனும் ஆனந்த விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

வறுமையைப் போக்கும் சொர்ணசீதை!

கோயில் பழைமையான கட்டடமாக இருந்தது. கோபுரங்கள் இல்லை. கோயிலுக்கு வெளியே கைகூப்பி நின்றருளும் சின்னத் திருவடியின் தரிசனம். கோயிலுக்கு முன்பாக ஒரு கல்மண்டபம். அதன் தூண்களில் நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடர் ஆகியோரின் திருவுருவங்களுடன், பல்வேறு உயிரினங்களின் சிலைகளும் காட்சி தந்தன. வலப்பக்கச் சுவரில் ராமாயணக் காட்சிகளும் நடன மங்கைக் காட்சிகளும் திகழ்கின்றன.

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

இந்தக் கோயிலின் வரலாறு குறித்த கல்வெட்டு எதுவும் காணக்கிடைக்கவில்லை. ஆனாலும், சிற்ப பாணியைக் காணும்போது, கோயில் விஜய நகரப் பேரரசின் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கணிக்கமுடிகிறது. உள்ளே சென்றதும் நமக்கு இடப்புறம் தாயாரின் சந்நிதி. வீரராகவனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பது போல் தெற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்கிறார், வசுமதித் தாயார். 

மேற்கு நோக்கிய சந்நிதியில் பெருமாள் கல்யாண வீரராகவராகக் அருள்பாலிக்கிறார். ஒரு கையால் அன்னையை ஆலிங்கனம் செய்தபடியும் மறுகையால் அபய ஹஸ்தம் காட்டியும் காட்சி கொடுக்கிறார். நாம் சென்றபோது திருமஞ்சனம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அற்புதமான தரிசனம்! அர்த்த மண்டபத்தில் கோதை நாச்சியார்,  ஸ்ரீநிவாசப் பெருமாள், விஷ்வக் சேனர், ராமாநுஜர்  ஆகியோர் அருள்புரிகின்றனர். மூலவருக்கு எதிரில் பெரியதிருவடி கருடாழ்வார்...

- திருவள்ளூருக்கு அருகே ஈக்காடு தலத்துக்கு நம்மை அழைத்துச் செல்வதுடன், 'வறுமையைப் போக்கும் சொர்ணசீதை!' மகிமைகளைச் சொல்லும் சக்தி விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

அரிசிப்பால் அன்னம்

தேவையானவை: பச்சரிசி – அரை கப் | வெல்லம் - கால் கப் (பொடித்தது) | சுக்குத்தூள் - கால் டீஸ்பூன் | ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை

செய்முறை: அரிசியை நன்கு கழுவி, தேவையான தண்ணீர்விட்டு மூன்று மணி நேரத்துக்கு ஊறவைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில், ஊறவைத்த அரிசி, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து, தேவையான நீர்விட்டு, தோசை மாவு பதத்துக்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து அதன் பாலை மட்டும் வடிகட்டிக் கொள்ளவும். இந்த அரிசிப் பாலை தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும். 

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

பொடித்த வெல்லத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் தூசு, மண் இல்லாமல் வடிகட்டவும். இந்த வெல்லக் கரைசலை வடிகட்டிவைத்துள்ள அரிசிப்பாலில் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை வாய் அகன்ற பாத்திரத்தில் மாற்றி, அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கிளறவும். அரிசிப்பாலும் வெல்லமும் சேர்ந்து கூழ் பதத்துக்கு வரும்வரை கிளறவும். கூழ் மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு நீர் சேர்த்துக்கொள்ளலாம். கூழ் நன்கு வெந்ததும் பாத்திரத்தை இறக்கவும்.

குறிப்பு: நிறைவான மாவுச்சத்து, இயற்கையான இரும்புச்சத்து மற்றும் செரிமானப் பொருள்கள் கொண்ட இந்த உணவைக் கைக்குழந்தைகளுக்கு ஆறு மாதம் முதல் மிதமான சூட்டில் கொடுக்கலாம்.

- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினின் வசிக்கும் சமையற்கலைஞர் மதுமிதா, நம் முன்னோர் சுவைத்து மகிழ்ந்த அந்த உணவுகளை நமக்காக மறுஉருவாக்கம் செய்து அளிக்கும் அவள் கிச்சன் பகுதியில் மேலும் பல 'சங்ககால உணவுகள்' குறிப்புகளை அறிய

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

விகடன் ஃப்ளாஷ்பேக்: ( 01/01/2017 தேதியிட்ட விகடன் தடம்)

"மூன்று தலைமுறை மாணவர்களை அவதானித்தவர் என்கிற வகையில், அவர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையேனும் பார்க்க முடிகிறதா?"  

"கல்விமுறையே இங்கு சிக்கலாக இருக்கிறது. கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கானதாக, போட்டி மனப்பான்மையை விதைக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சமூக மாற்றத்துக்கான மனப்பாங்கு உள்ள இளைஞர்களை உருவாக்கும் கல்விமுறையாக இது இல்லை. நான் பணிக்குச் சேர்ந்த எழுபதுகளைக் காட்டிலும் இன்று நிலைமை மோசம். எதிர்காலம் இன்னும் மோசமாக இருக்கும். மாணவர்கள் அவர்களது துறைகளில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். இப்போதைய பாடப்புத்தகங்களும்கூட சிறப்பானவையாக உள்ளன. ஆனால், மாணவர்கள் மத்தியில் சமூகப் பொறுப்பு பெரிதும் குறைந்துள்ளது. சமூகப்பொறுப்பற்ற திறமை எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்? 

விகடன் போஸ்ட்: வர்த்தக யுத்தம், இன்னொரு இசைத்தமிழன், `போக்ஸோ’ புரிதல்கள்! 

"மாணவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?"

 "வராமல் இருக்க முடியாது. வந்துதான் ஆக வேண்டும். ஆனால், எல்லா காலகட்டங்களிலுமே 'அன்றைய' மாணவர்கள் அரசியலுக்கு வருவதை அதற்கு முந்தைய தலைமுறைக்காரர்கள் விரும்பியது இல்லை. புரட்சிக்குப் பிந்தைய காலகட்டம் என்று நினைக்கிறேன்... லெனின் மாணவர்களை நோக்கிச் சொன்னார், "நீங்கள் முதலில் செய்ய வேண்டியது படிப்பு; இரண்டாவது செய்ய வேண்டியது படிப்பு; மூன்றாவது செய்ய வேண்டியதும் படிப்பு!" (சிரிக்கிறார்) ஆட்சியாளர்கள் எப்போதுமே மாணவர்கள் அரசியலுக்கு வருவதை விரும்புவதில்லை. ஆனால் நாம் விரும்பித்தான் ஆக வேண்டும்"

"இந்தச் சமூகச் சூழலில் இனி ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர் உருவாவது சாத்தியமா?"

"அப்படியெல்லாம் ஆருடம் சொல்ல முடியாது. சமூகம் குறித்த ஒரு பரந்த ஆய்வுகளோடு அரசியலுக்குள் வருகிறவர்கள் இன்று யாரும் இல்லை. அது நல்ல தலைவர்கள் உருவாவதை அறவே அழித்துள்ளது."

- சமகாக அரசியல் சூழலுக்குத் திரும்பிப் பார்க்க உகந்தது என்ற வகையில், 01/01/2017 தேதியிட்ட விகடன் தடம் இதழில் வெளியான "மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!" எனும் அ.மார்க்ஸ் நேர்காணலை முழுமையாக வாசிக்க