Published:Updated:

சசிகாந்த் ஷர்மா சிஏஜி-யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு!

சசிகாந்த் ஷர்மா சிஏஜி-யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு!
சசிகாந்த் ஷர்மா சிஏஜி-யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு!
சசிகாந்த் ஷர்மா சிஏஜி-யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு!

புதுடெல்லி: மத்திய தலைமை கணக்கு தணிக்கை (சிஏஜி) அதிகாரியாக சசிகாந்த் ஷர்மா நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2ஜி, காமன்வெல்த் போட்டி மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் உள்ளிட்ட அரசின் பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் நேற்றுடன் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து பாதுகாப்புத் துறை செயலராக இருந்த சசிகாந்த் ஷர்மா அப்பதவியில் நியமிக்கப்பட்டு, பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இந்த நியமனத்திற்கு எதிர்கட்சியான பா.ஜனதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.  சசிகாந்த் ஷர்மா பாதுகாப்புச் செயலராக இருந்த காலத்தில் பல்வேறு ஆயுத கொள்முதல்கள் நடைபெற்றுள்ளன. அப்படி இருக்கையில் அது தொடர்பான கணக்கு தணிக்கையின்போது, ஷர்மா எங்ங்கனம் நியாயமாக செயல்படுவார்? என அக்கட்சி கேள்வி எழுப்பி இருந்தது.

##~~##
இதேப்போன்று வேறு சில கட்சிகளும் சசிகாந்த் சர்மா சிஏஜி பதவியில் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மத்திய தலைமை கணக்கு தணிக்கை (சிஏஜி) அதிகாரியாக சசிகாந்த் ஷர்மா நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இம்மனு வருகிற ஜுலை மாதம் விசாரணைக்கு வர உள்ளது.
இதனிடையே இந்த நியமனம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா தலைவர் அருண் ஜெட்லி, சசிகாந்த் ஷர்மா என்ற தனி நபருக்கு எதிராக தாம் எதுவும் கூறவில்லை என்றும், அதே சமயம் பாதுகாப்புச் செயலராக அவரது பதவி காலத்தில் வாங்கிய ஆயுத கொள்முதலுக்கான கணக்கு வழக்குகளை அவரே தணிக்கை செய்துகொள்வாரா? எனக் கேள்வி எழுப்பினார்.