விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தைப் பயன்படுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்குத் தடை! | Model Code Of Conduct Removes Pilot Abhinandhan's Photo From BJP Leader Om Prakash Sharma's Facebook page

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (13/03/2019)

கடைசி தொடர்பு:15:20 (13/03/2019)

விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தைப் பயன்படுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்குத் தடை!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தைப் பயன்படுத்திய பா.ஜ.க எம்.எல்.ஏ விடமிருந்து படத்தைப் பறித்தது தேர்தல் ஆணையம். கடந்த சில வாரங்களுக்கு முன், இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டவர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அபினந்தன்

பொது மக்கள் பலரும் அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.  பாகிஸ்தான் பிரதமர் அபிநந்தனை பத்திரமாக விடுவிக்கிறோம் என அறிவித்து, அபிநந்தனை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர்.

 

பிஜேபி

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அபிநந்தனைப் பற்றி நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் அபிநந்தனின் புகைப்படத்தைப் பா.ஜ.க எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் ஷர்மா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கி இருக்கிறது. கடந்த ஞாயிறன்று  லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தரப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி 'Model Code Of Conduct' - ன் உத்தரவுப்படி ஃபேஸ்புக் நிறுவனம் இதைச் செய்துள்ளது. பாதுகாப்பு படை வீரர்களை கட்சி சார்ந்தவர்களாக கட்டமைத்தல் கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர். 


[X] Close

[X] Close