Published:Updated:

விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!

விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!
விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!
விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!

வரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் 

``உண்மைதான். '10 கோடி ரூபாய் இருப்பவர்கள் மட்டும்தான் எம்.பி சீட் கேட்க வேண்டும்' என்று மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சொல்லிவிட்டாராம். 'அப்படியென்றால், காலங்காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் எல்லாம் என்னாவது?' என்றுதான் குமுறுகிறார்கள். '89-ம் ஆண்டுக்கு முன்புவரை துரைமுருகன் வெறும் அம்பாஸடர் கார்தான் வைத்திருந்தார். இன்று ஏலகிரி மலையில் பங்களா, விதவிதமான கார்கள் என்று வலம்வருகிறார். விழுப்புரத்தின் பொன்முடி, சில ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு பேராசிரியர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இன்று ஐந்து கல்லூரிகள், 500 ஏக்கர், பி.எம்.டபிள்யு தொடங்கி விதவிதமான கார்கள் என்று வலம்வருகிறார். டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, பழனிமாணிக்கம், பொங்கலூர் பழனிச்சாமி என்று சீனியர்கள் பலரும் செல்வச்செழிப்புடன் இருக்கிறார்கள். அடுத்தகட்டமாக வாரிசுகளைக் களம் இறக்குகிறார்கள். ஆனால், எங்கள் அப்பா காலம் தொடங்கி, இன்னமும் நாங்கள் கட்சிக்கொடி கட்டுவதையும் கூட்டம் சேர்ப்பதையும் மட்டும்தான் செய்துகொண்டே இருக்கிறோம். கொள்கை... கொள்கை என்றே எங்களை வளர்த்துவிட்டார்கள். கொடி கட்டுவதற்கு நாங்கள்; கோடிகளைக் குவிப்பதற்கு அவர்களா?' என்கிற குமுறல் குரல்கள் அறிவாலயத்திலும் எதிரொலித்துள்ளன!"

விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!

``அ.தி.மு.க-விலும் கலகக் குரல்கள் கேட்காமல் இல்லை. துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேனியில் நிற்பது உறுதியாகியிருக்கிறது. நேர்காணலின்போது, `எவ்வளவு செலவழிப்பீர்கள்?' என்று கேட்டதற்கு, `ஜெயிப்பதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு' என்று சொல்லி அதிரவைத்தாராம் வாரிசு."

- இவற்றுடன் இன்னும் ஏராளமான தேர்தல் உள்விவகாரங்களை உருவியெடுத்துத் தந்திருக்கும் 'வரிசைகட்டும் வாரிசுகள், வாள்வீசும் தொண்டர்கள் - கழகங்களில் கலகக் குரல்!' எனும் ஜூனியர் விகடன் 'மிஸ்டர் கழுகு' பகுதியை முழுமையாக வாசிக்க

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க:


*****

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பணம் பறிக்கிறதா போலீஸ்?

விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!

``பொள்ளாச்சி டி.எஸ்.பி-யான ஜெயராம் மீது ஏற்கெனவே ஏராளமான புகார்கள் உள்ளன. கோவையில் உதவி ஆணையராக அவர் இருந்தபோது, மாணவர் போராட்டத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, ஒரு பெண் எஸ்.ஐ–யிடம் அவர் சில்மிஷம் செய்த வீடியோ இன்றும் இணையத்தில் உள்ளது. டாஸ்மாக் போராட்டத்தில் ஒரு பெண்ணை கோவை எஸ்.பி பாண்டியராஜன் அறைந்தது ஊரறிந்த சேதி. இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த வழக்கை விசாரித்தால், அது எப்படி இருக்கும்? ஐ.ஜி–யும் ஆளும்கட்சியினர் சம்பந்தப்பட்டிருப்பதால், கண்டுகொள்ளாமல் அமைதிகாக்கிறார். இவர்கள் சசிகலாவிடம் நெருக்கமாக இருந்தவர்கள். வருவாய் அதிகமுள்ள கோவையில் இவர்கள் அனைவருக்கும் `போஸ்டிங்' போட்டுக்கொடுத்ததன் மூலமாக சசிகலா குடும்பத்தினரிடமும் தங்களுக்கும் உள்ள `மறைமுக நெருக்கத்தை' ஆளும்கட்சியின் முக்கியப் புள்ளிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்..."

- பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்துவந்த விவகாரத்தில் போலீஸாரின் நடவடிக்கைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் சந்தேகங்களைக் கிளப்புகிறார்கள். அதுதொடர்பான `பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பணம் பறிக்கிறதா போலீஸ்?' ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

*********

`அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை!' 

விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!

அரசுக்கு மருந்துகளை சப்ளை செய்யும் நிறுவனங்கள், செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை ஏற்றிய பிறகு சப்ளை செய்யத் திட்டமிட்டுள்ளன. இதற்கு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருக்கிறார்களோ என்கிற சந்தேகம் உள்ளது. ஏனென்றால், கம்பெனிகள் விலையை ஏற்றுவதால் சிலருக்கு கமிஷன் கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே, அரசு இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையிலேயே மூலப்பொருள்கள் தட்டுப்பாடு என்றால், இந்தியாவிலேயே மருந்துகளுக்கான மூலப்பொருள்களைத் தயாரிக்கலாம். 80 சதவிகித மூலப்பொருள்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. ஒருவேளை சீனா - இந்தியா உறவு பாதிக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும்? அப்படியொரு மோசமான சூழ்நிலை உருவானால் என்ன மாற்றுத்திட்டம் வைத்திருக்கிறார்கள்?

- வீதிக்கு வீதி கார்ப்பரேட் மருத்துவமனைகள் முளைத்துக்கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் இன்றும் லட்சக்கணக்கான ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். அத்தகைய அரசு மருத்துவமனைகளில் கடந்த சில வாரங்களாக, அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊழியர்களே குமுறுகிறார்கள். இதுதொடர்பான 'அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை! - அல்லாடும் ஏழை நோயாளிகள்...' எனும் ஜூனியர் விகடன் அலசல் ரிப்போர்ட்டை முழுமையாக வாசிக்க

******

சோறு முக்கியம் பாஸ்!

விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!

எந்த நகரத்தை எடுத்துக் கொண்டாலும் நிரம்பி வழிகின்றன உணவகங்கள். அவற்றில் நல்ல உணவகத்தை எப்படி அடையாளம் காண்பது..?  ஒரு வழி இருக்கிறது. அரசு ஊழியர்கள் தினமும் எந்த உணவகத்தில் சாப்பிடுகிறார்களோ, அங்கு நிச்சயம் சாப்பாடு நன்றாக இருக்கும். தவிர, வயிற்றுக்குத் தொந்தரவும் வராது. அந்த உணவகங்களில் விலை கொஞ்சம் முன்பின் இருந்தாலும் நிச்சயம் அக்கறையோடு சமைப்பார்கள்.

அப்படி, அரசு ஊழியர்களின் தடம்பற்றிச் சென்று ஒரு நல்ல உணவகத்தைக் கண்டறிந்தேன். சிவகங்கை-திருப்பத்தூர் பிரதான சாலையில், மதகுப்பட்டி என்றொரு ஊர். அங்குதான் இருக்கிறது கணேஷ் மெஸ். இந்த மெஸ்ஸை யொட்டி ஏராளமான அரசு வாகனங்களும் அரசியல்வாதிகளின் வாகனங்களும் நின்று கொண்டிருக்கின்றன. 

சாவகாசமாகச் சாப்பிட்டு முடித்து வெளியே வந்த ஒருவரிடம் பேசினேன். அவர் பொதுப் பணித்துறை அதிகாரியாம்.  “காரைக்குடியில இருந்து சிவகங்கையில இருக்கிற ஆட்சியர் அலுவலகத்துக்குப் போனா, மதியச் சாப்பாடு இங்கதான். மீனாம்பா அம்மா சமையல் எல்லா நாளும் ஒரே மாதிரியிருக்கும். வீட்டுச் சாப்பாடு... ஸ்டார் ஓட்டல்ல சாப்பிட்டாலும் இந்த நிறைவும் திருப்தியும் இருக்காது...” என்று சிலிர்த்துக் கொள்கிறார்...

- மதகுப்பட்டியில் உள்ள கணேஷ் மெஸ் குறித்த விரிவான அனுபவத்துக்கு, ஆனந்த விகடன் 'சோறு முக்கியம் பாஸ்!' தொடர் பகுதியை முழுமையாக வாசிக்க

*****

கருவில் தொடங்கட்டும் ஆரோக்கியம்!

* குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி, தாயின் வயிற்றில் கருவாக வளரும்போதிலிருந்தே தொடங்குகிறது என்பதால், கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!

* ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளுக்கு, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும்  தன்மை அதிகம்.  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா போன்ற பழங்களைக் குழந்தையின் உணவுப் பட்டியலில் சேர்க்கவும்.

* ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் உணவுகளான பேரீச்சை, கீரை வகைகள், கேழ்வரகு போன்றவற்றை வாரத்துக்கு மூன்று முறையாவது குழந்தைகளின் உணவுப் பட்டியலில் சேர்க்கவேண்டியது அவசியம்.

- அம்மாக்கள், தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு முதன்மையாகச் செய்யவேண்டியது, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது. அதற்கான அன்றாட உணவுப் பரிந்துரையை வழங்குகிறார், டயட்டீஷியன் பிரியா ராஜேந்திரன். 'கருவில் தொடங்கட்டும் ஆரோக்கியம்!' எனும் டாக்டர் விகடன் வழிகாட்டுதலை முழுமையாக வாசிக்க

******

காமிக்ஸ் ராஜாக்கள், ராணிகள்!

> சிறுவர் இலக்கியத்தின் ஜாம்பவான், முல்லை தங்கராசன் உருவாக்கிய 'திருப்பதி ஏழுமலையானின் வாழ்க்கை வரலாறு' என்ற காமிக்ஸ் புத்தகமே, தமிழில் அதிக முறை பதிப்பிக்கப்பட்ட காமிக்ஸ். தமிழில் அதிகமாக விற்ற காமிக்ஸ் புத்தகம்   (5 லட்சம் பிரதிகள்), அதிக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது (12 மொழிகள்) ஆகிய சிறப்புகளைக்கொண்டது.

விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!

> இத்தாலிய படத் தயாரிப்பாளரான டினோ-டி-லாரண்டிஸ், 'ஃப்ளாஷ் கார்டன்' என்ற காமிக்ஸ் தொடரின் திரைப்பட உரிமையை வைத்திருந்தார். இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ், ஃப்ளாஷ் கார்டனைத் திரைப்படமாக எடுக்க விரும்பி, 1973-ஆம் ஆண்டில் கேட்டார். லாரன்டிஸ் மறுக்க, அத்தொடரை மனதில் வைத்து ஜார்ஜ் லூகாஸ் இயக்கியதுதான், 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படம்.

> அம்புலிமாமா இதழில்  62 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து, 20,000 ஓவியங்களை வரைந்தவர், சங்கர். ஒரு குறிப்பிட்ட கதைத் தொடருக்கு 49 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓவியம் வரைந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர். 1952 முதல் 2013 வரை  வெளியான அதுவே, 'விக்ரமாதித்தியன்-வேதாளம்' கதைத் தொடர்.

- இது வெறும் சாம்பிள்தான். காமிக்ஸ் ராஜாக்கள், ராணிகள், சாதனை படைத்த எழுத்தாளர்கள், சம்பவங்களின் முழுமையான தொகுப்பை சுட்டி விகடன் இதழில் முழுமையாகக் காண

*****

மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்!

> முருகக் கடவுளுக்கு உகந்த திருநாள்களில் பங்குனி உத்திரம் குறிப்பிடத்தக்கது. இந்திரனின் மகள் தெய்வானையை முருகப் பெருமான் திருமணம் செய்துகொண்டதும் வள்ளிக் குறத்தி அவதரித்த பெருமையும் பங்குனி உத்திரத்துக்கு உண்டு. 

> முருகப்பெருமான், சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த நாள் பங்குனி உத்திரம். இந்த நன்னாளை விரத நாளாக அனுஷ்டித்து முருகனை வழிபட்டால், கன்னியருக்கு விரைவில் திருமணம் நடக்கும். மணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.

விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!

> சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் ஸ்ரீபரமேஸ்வரன் காட்சி தந்த நாளும் இதுதான். அன்று திருமழப்பாடியில் நடைபெறும் நந்திதேவர் கல்யாணத்தை தரிசித்தால், திருமணம் ஆகாதவர் களுக்கு விரைவில் திருமணம் நடக்குமாம். 'நந்தி கல்யாணம் கண்டால் முந்தி திருமணம் நடக்கும்' என்பது பழமொழி!

- பங்குனி மாதம், பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். இதன் 25 சிறப்புகளை அடுக்கும் 'மங்கலம் நிறைந்த பங்குனி உத்திரம்!' எனும் சக்தி விகடன் தொகுப்பை முழுமையாக வாசிக்க

*****

விகடன் ஃப்ளாஷ்பேக்: தண்ணீர் கண்ணீர்!

ஒரு குடம் நீருக்கு கையேந்தி அலைகிறார்கள் மக்கள். கோடையின் வெப்பம் அதிகரிக்க... அதிகரிக்க... தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நகரம், கிராமம் என எந்த வேறுபாடும் இல்லை. ''டவுன்லதான் தண்ணீர் பிரச்னை. கிராமத்துல பரவாயில்லை'' என்ற நிலை, பழங்கதையாகிவிட்டது. இட பேதமின்றி எங்கும் வியாப்பித்திருக்கிறது தண்ணீர் தட்டுப்பாடு. குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ மற்றும் இன்னபிற அத்தியாவசியத் தேவைகள் எதற்கும் தண்ணீர் இல்லை. தினசரி குளியல் என்பது குறைந்து, இரு நாள்களுக்கு ஒரு முறை என்று முறைவைத்து குளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். தண்ணீர் சிக்கலின் கோரமுகம் இனியும் சகித்துக்கொள்ள முடியாத நிலையை அடைந்துவிட்டது.

விகடன் போஸ்ட்: கழகங்களில் கலகக் குரல், பொள்ளாச்சி சந்தேகங்கள், அல்லாடும் ஏழை நோயாளிகள்!

நகரங்களில், குடிப்பதற்கு கேன் தண்ணீர்தான் என்பது பல ஆண்டுகளாக மக்களுக்குப் பழகிவிட்டது. இப்போது, வீட்டில் புழங்குவதற்கான நீரைக்கூட காசு கொடுத்து வாங்கவேண்டிய நிலை. ''நிலத்தடி நீர் ரொம்பக் கீழே போயிட்ட தால எங்க அப்பார்ட்மென்டில் போர்வெல் தண்ணீர் சொட்டுச் சொட்டாத்தான் வருது. அதனால் ரெண்டு, மூணு வருஷமா நாங்க லாரி தண்ணீர் வாங்கித்தான் பயன்படுத்துறோம். 12,000 லிட்டர் கொண்ட லாரி தண்ணீர் 1,200 ரூபாய். இங்கே மொத்தம் 16 வீடுகள் இருக்கு. ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் மட்டும் இந்தத் தண்ணீரைத் திறந்துவிடுவோம். ஒரு வீட்டுக்கு ஒரு மாசத்துக்கு 1,000 ரூபாய் செலவாகும்'' என்கிறார் சென்னை கிழக்கு அண்ணாநகர் வ.உ.சி. நகரில் உள்ள ஓர் அடுக்ககத்தின் நிர்வாகி ராஜகோபால்.

- இது இன்றைய நிலை அல்ல. சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. தற்போது மீண்டும் தண்ணீர் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்துள்ள சூழலில், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையைக் கொஞ்சம் பார்ப்போம். இயற்கை மீது பிழையா? செயற்கையான தவறா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கக் கூடும். இதோ 24/04/2014 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான 'தண்ணீர் கண்ணீர்!' எனும் சிறப்பு அலசல் கட்டுரை http://bit.ly/2VXwqga

> விகடனின் 11 இதழ்களையும், உங்களுக்கான சிறப்புச் சலுகையுடன், சப்ஸ்க்ரைப் செய்து வாசிக்க: