8 மணி நேரத்துக்கும் மேல் முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயனாளர்கள் தொடர்ந்து அவதி #FacebookDown | Facebook, Instagram are down for some users around the world

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (14/03/2019)

கடைசி தொடர்பு:08:16 (14/03/2019)

8 மணி நேரத்துக்கும் மேல் முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - பயனாளர்கள் தொடர்ந்து அவதி #FacebookDown

உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைதளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டும் நேற்று இரவு முதல் முடங்கியுள்ளது. 

ஃபேஸ்புக்

இது தொடர்பாக பல தரப்பினரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்குப் புகார் அளித்தும் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டும் வருகின்றனர். நேற்று மாலை நன்றாக இயங்கிய பக்கங்கள் இரவு முதல் செயல்படுவது படிப்படியாகக் குறைந்துள்ளது. முதலில் பராகுவே, இந்தியா, வங்க தேசம், அர்ஜென்டினா போன்ற நாடுகளில்தான் இவை அதிகம் இயங்காமல் இருந்துள்ளன. பிறகு உலக அளவில் இதே நிலை பரவியதாக கூறப்படுகிறது.

விளக்கம்

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம்,  ‘தற்போது சிலருக்கு ஃபேஸ்புக் குடும்ப செயலிகளை (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர்ஸ், வாட்ஸ் ஆப்)  உபயோகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். விரைவில் இது சரிசெய்யப்படும். முடிந்த வரையில் இந்த சிக்கலை விரைவில் சரிசெய்ய நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். ஆனால், இந்தப்  பிரச்னை DDoS தாக்குதலுடன் சம்பந்தப்படவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

விளக்கம்

அதேபோல் இன்ஸ்டாகிராமும் சேவை முடக்கத்துக்கு விளக்கமளித்துள்ளது, ‘ இன்ஸ்டாகிராம் பக்கத்தை இயக்குவதில் மக்களுக்குச் சிக்கல் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இது வெறுப்பூட்டக்கூடியது என்பதும் எங்களுக்குத் தெரியும். விரைவில் இதைச் சரி செய்ய எங்கள் டீம் கடுமையாக உழைத்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம்

இந்த இரு சமூகவலைதள பக்கங்களும் முடங்கி சுமார் 8 மணி நேரங்களும் மேல் ஆகிறது. இருந்தும் இன்னும் பலருக்கு சேவை தொடங்கப்படவில்லை.  பக்கங்களைப் பயன்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. சில இடங்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டதாக பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான சமூக வலைதள பக்கங்கள் முடங்கியதால் பயனாளர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 


[X] Close

[X] Close