``ஏலேய்...PUBG-யா விளையாடுற?!"- பத்துப் பேர் மீது வழக்கு பதிந்த காவல்துறை | 10 booked for playing pubg in Rajkot

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (14/03/2019)

கடைசி தொடர்பு:14:05 (14/03/2019)

``ஏலேய்...PUBG-யா விளையாடுற?!"- பத்துப் பேர் மீது வழக்கு பதிந்த காவல்துறை

கடந்த வாரம் ராஜ்கோட் காவல்துறை பொதுவெளியில் PUBG ஆடுவது ஏப்ரல் 30 வரை  தடைசெய்யப்படுவதாக அறிவிப்பு ஒன்றைவெளியிட்டது. இந்திய அரசியல் சட்டம் 188 பிரிவின் படி இந்த அறிவிப்பை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும். PUBG பலரை அடிமையாக்குவதாகவும், வன்முறையை அவர்களுள் தூண்டும் வண்ணம் இருப்பதாகவும் ராஜ்கோட் காவல்துறை தெரிவிக்கிறது. இந்தத் தடை தற்போது குஜராத்தின் மற்ற சில மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுவருகிறது.

PUBG

இந்நிலையில் PUBG ஆடியதற்காக கடந்த இரண்டு நாள்களில் பத்துப் பேரை பிடித்துள்ளது ராஜ்கோட் காவல்துறை. இதில் ஆறு பேர் இளங்கலை மாணவர்கள். இந்தத் தடையை அறிவித்த காவல்துறை ஆணையர் மனோஜ் அகர்வால், ``இதுவரை 12 வழக்குகள் இதுதொடர்பாக பதிவாகியுள்ளது, இது பிணையில் வெளிவரக் கூடிய வழக்குதான். இது கைதெல்லாம் கிடையாது. தடை அறிவிப்பை பின்பற்றாததற்காக விசாரணையை நீதிமன்றம் மேற்கொள்ளும்" என்றார்.

Ban

இவர்களின் மொபைல்கள் கைப்பற்றப்பட்டு கேம் ஆடியதற்கான ஆதாரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பலரும் போலீஸார் அருகில் வருவதைக்கூட பார்க்காமல் மும்முரமாக கேம் ஆடிக்கொண்டிருந்திருக்கின்றனர். ஏற்கெனவே குஜராத் முழுவதும் ஆரம்பநிலைப் பள்ளிகளில் PUBG-யை குஜராத் அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close