``உங்களுக்கு வீணை வாசிக்கத் தெரியுமானு ஆச்சர்யப்படுறாங்க!" - நடிகை மீரா கிருஷ்ணனின் இசைப்பயணம் | actress meera krishnan talks about her cinema and music journey

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (14/03/2019)

கடைசி தொடர்பு:15:50 (14/03/2019)

``உங்களுக்கு வீணை வாசிக்கத் தெரியுமானு ஆச்சர்யப்படுறாங்க!" - நடிகை மீரா கிருஷ்ணனின் இசைப்பயணம்

மீரா கிருஷ்ணன்

மீரா கிருஷ்ணன், தமிழ் சினிமா அம்மா நடிகைகளில் ஒருவர். தவிர, பாடகியாகவும் வீணைக் கலைஞராகவும் இயங்கிக்கொண்டிருக்கிறார். அந்த அனுபவங்களைப் பகிர்கிறார்.

``சின்ன வயசுல இருந்தே இசையில ஆர்வம் அதிகம். கணவர் சவுண்டு இன்ஜினீயர். அவரின் ஊக்கத்தால், கச்சேரிகளில் பக்திப் பாடல்களைப் பாட ஆரம்பிச்சேன். பிறகு வரவேற்பு அதிகரிக்க, தனியா ஆல்பங்களைத் தயாரிச்சு வெளியிட ஆரம்பிச்சோம். இதுக்கிடையே வீணை வாசிப்பிலும் இப்போ அதிக கவனம் செலுத்துறேன். `உங்களுக்கு வீணை வாசிக்கத் தெரியுமா?'னு பலரும் ஆச்சர்யமா கேட்கிறாங்க. இசைப்பயணம், நடிப்பைப் பாதிக்காம பார்த்துக்கிறேன்" என்பவர், நடிப்புப் பயணம் பற்றிக் கூறுகிறார்.

மீரா கிருஷ்ணன்

 

``சின்னத்திரையில நிறைய சீரியல்களில்  நடிச்சிருக்கேன். `வசீகரா' படத்துல சினேகாவுக்கு அம்மாவா நடிச்சேன். இயக்குநர் தருண் கோபி, என் வீட்டுக்கு வந்து கதைசொல்லி, `திமிரு’ படத்துல விஷாலுக்கு அம்மாவா என்னை நடிக்கவெச்சதெல்லாம் பெரிய கதை. `நையாண்டி' படத்தில் தனுஷ் அம்மாவாக நடிச்சேன். அந்தப் படத்தில் எனக்கு டல் மேக்கப் போட அரைமணிநேரம், மேக்கப்பை நீக்க அரைமணிநேரம் ஆகும். நிறைய படங்கள்ல அம்மா ரோலில் நடிச்சுட்டேன். ஆனாலும், ரொம்ப எமோஷனலான அல்லது 'எம்.குமரன்' நதியா மாதியான அம்மா ரோல்ல நடிக்க ஆசை" எனப் புன்னகைக்கிறார், மீரா கிருஷ்ணன்.


[X] Close

[X] Close