இந்தியாவில் இந்த ஆண்டு `மேக் இன் இந்தியா PHEV’ வரும் - வால்வோ | Volvo to Introduce Make In India PHEV This Year, Could Be XC90 T8

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (14/03/2019)

கடைசி தொடர்பு:17:20 (14/03/2019)

இந்தியாவில் இந்த ஆண்டு `மேக் இன் இந்தியா PHEV’ வரும் - வால்வோ

ஸ்வீடனைச் சேர்ந்த கார் நிறுவனமான வால்வோ, Plug-In ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனத்தை (XC90 T8 லக்ஸூரி எஸ்யூவி) இந்தியாவில் அசெம்பிள் செய்யும் திட்டத்தில் இருக்கிறது. இது நடப்பாண்டின் இரண்டாவது பாதியில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது. மேலும், தனது சந்தை மதிப்பை அதிகரித்துக்கொள்ளும் விதமாக, நகர்ப்புறப் பகுதிகளிலும் டீலர்களைத் திறந்திருக்கிறது (இந்தூர், ராஜ்பூர், கேலிகட், நொய்டா) வால்வோ இந்தியா நிறுவனம். 

 

வால்வோ

 

`இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பாகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி 10 - 15% ஆகக் குறைக்கப்பட்டிருப்பதுடன், FAME 2-வும் வெளியாகியிருப்பது எங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இதனாலேயே இந்தியாவில் PHEV வாகனத்தை (XC90 T8) முதன்முறையாகத் தயாரிக்கப்போகும் நிறுவனம் என்ற பெருமையை வால்வோ பெற உள்ளது. கடந்த ஆண்டில் 15-ஆக இருந்த டீலர்களின் எண்ணிக்கையை 25-ஆக அதிகரித்துள்ளோம். அதேபோல, 2018-ம் ஆண்டில் 2,638 கார்களை இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறோம்; இது 2017 உடன் ஒப்பிடும்போது 30% அதிகம். 2025-ம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் ஒரு மில்லியன் எலெக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டில் இருப்பதே எங்களின் இலக்கு. வாடிக்கையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது என்பதற்காகவே, எங்கள் கார்கள் குறைவான வேரியன்ட்களைக் கொண்டுள்ளன’’ என்றார், வால்வோ இந்தியாவின் நிர்வாக இயக்குநரான சார்லஸ் ஃப்ரம்ப். 

 

PHEV

 

தற்போதைய சூழ்நிலையில் CBU முறையில் இறக்குமதி செய்யப்படும் XC90 T8 லக்ஸூரி எஸ்யூவி, பெங்களூரில் இருக்கும் வால்வோவின் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. அக்டோபர் 2017-ல் தொடங்கப்பட்ட இந்த ஆலையில் XC90 - S90 - XC60 ஆகிய கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் கூடுதலாக 3 டீலர்கள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் முற்றிலும் புதிய S60 செடான், பெட்ரோல் இன்ஜின் மற்றும் PHEV என இரு ஆப்ஷன்களில் வரலாம். இது ஆடி A4, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஜாகுவார் XE, மெர்சிடீஸ் பென்ஸ் C-க்ளாஸ் ஆகிய லக்ஸூரி செடான்களுடன் இது போட்டிபோடும். இதனுடன் Polestar பிராண்டில் எலெக்ட்ரிக் கார்கள், V60 மற்றும் V60 க்ராஸ் கன்ட்ரி ஆகியவை இந்தியாவில் வரிசையாக வெளிவரலாம். Artemis Volvo டீலர், Volvo Personal Service அந்தஸ்தைப் பெற்றுள்ளது. 

 

பெங்களூர்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close