உலக 'பை' தினத்தன்று கூகுள் பணியாளரின் உலக சாதனை! | Google employee breaks the internet in world pi day

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (15/03/2019)

கடைசி தொடர்பு:14:30 (15/03/2019)

உலக 'பை' தினத்தன்று கூகுள் பணியாளரின் உலக சாதனை!

பை மதிப்பு

கூகுளின் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை மூலமாக இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார், கூகுள் பணியாளர் எம்மா ஹரூகா ஐவோ (Emma Haruka Iwao). 3.147 என்று நீளும் பை என்ற நிலையான மதிப்பு எல்லையற்றது. அதைக் கணக்கிட்டால் எண்கள் நீண்டுகொண்டே போகும். ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கணக்கிடும்போது வரும் எண்ணையே பை என்பார்கள்.

ஐவோ, மேகக்கணினி உருவாக்கத்தில் பணிபுரிபவர் (Cloud Developer). மூன்றாண்டுகளாக கூகுளில் பணிபுரியும் அவர் 121 நாள்களாக முயன்று 31 டிரில்லியன் இலக்க எண்ணைக் கணக்கிட்டுள்ளார். இதுவரையிலான 22 டிரில்லியன் இலக்க எண் சாதனையைவிட 9 டிரில்லியன் அதிக இலக்க எண்ணைக் கண்டுபிடித்து அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

கூகுள்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14-ம் தேதி பை நாளாகக் கொண்டாடப்படுகிறது. 3, 1, 4 என்ற வரிசையில் இந்தத் தேதி வருவதால் அதை நாம் பை மதிப்போடு கற்பனை செய்து இந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். எம்மா ஹரூகா ஐவோவின் சாதனையை 2019-ம் ஆண்டின் பை தினமான இன்று காலை கூகுள் வெளியிட்டுள்ளது. தம் சாதனை குறித்துப் பேசிய ஐவோ, ``பை மதிப்பிற்கு முடிவே இல்லை. இன்னும் அதிகமாகக் கணக்கிட நான் இன்னும் ஆர்வமாகத்தான் காத்திருக்கிறேன்" என்றார்.


[X] Close

[X] Close