Published:Updated:

விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'

விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'
விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'
விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'

எது அரசியல் நாகரிகம்?

"அரசியலில், கட்சிகளுக்கிடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது இயல்பான விஷயம்தான். ஆனால், அதை வெளிப்படையாகப் பொதுவெளியில் போட்டுடைப்பது அரசியல் நாகரிகம்தானா?"

விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'

"தமிழகத்தைப் பொறுத்தவரை, ஓர் அரசியல் கட்சி, கூட்டணிக்காக தி.மு.க., அ.தி.மு.க என இரு கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்துவ தென்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்துவருவதுதான். ஒரு கட்சியுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை சரிப்பட்டு வரவில்லையென்றால், அடுத்த கட்சியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார்கள். ஆனால், ஒரே சமயத்தில் இரு கட்சிகளிடமும் ஒரு  கட்சி பேச்சுவார்த்தை நடத்தியதாக எந்த வரலாறும் கிடையாது. 3 மணிக்கு அ.தி.மு.க-வில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, அதே 3 மணிக்கு தி.மு.க-வுடனும் பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்கள் என்றால்... நாங்கள் என்ன இளித்தவாயர்களா? இல்லை இதுதான் அரசியல் நாகரிகமா?"

- 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, 'பழம் நழுவிப் பாலில் விழும்' என்று கூட்டணிக்காகக் காத்து நின்ற தி.மு.க-வுக்கு கடுக்காய் கொடுத்துவிட்டுப்போனது தே.மு.தி.க! ஆனால், இந்தமுறை அப்படியே 'உல்டா.' 'என்னதான் நடந்தது...' என்ற கேள்விக்கு விடைதேடி, தி.மு.க முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான பொன்முடியிடம் மேற்கொண்ட பேட்டிதான்: "அடித்த காற்றில் பறந்து வந்தவர் சுதீஷ்!". தற்போதைய அரசியல் பரபரப்புகள் குறித்து விரிவாகப் பேசியிருக்கும் அவரது நேர்காணலை முழுமையாக வாசிக்க

*******

33% இடஒதுக்கீடு... சாத்தியம் முதல் அசாத்தியங்கள் வரை!

இந்தியாவிலேயே நாம் தமிழர் கட்சி மட்டும்தான், தங்கள் கட்சியில் ஆண், பெண் வேட்பாளர்களுக்கு சரிவிகிதமாக தலா 20 தொகுதிகளைப் பங்கீடு செய்து அறிவித்துள்ளது. பெண்கள் இடஒதுக்கீட்டுக்குக் குரல்கொடுத்து வரும் பெரிய கட்சிகளே மேற்கொள்ளாத நடவடிக்கை இது. பெண் தலைமையேற்று நடத்திய அ.தி.மு.க-வில், ஆண்கள் தலையெடுத் திருக்கும் காலம் இது. 

விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'

சி.பி.எம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, "தேர்தலின்போது மட்டும் பெண் வேட்பாளர்களைத் தேடாமல், அவர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். வெறுமனே மகளிர் அணியில் மட்டுமல்லாமல், கட்சியின் ஒவ்வொரு செயல்பாடு களிலும் அவர்கள் அங்கமாக இருக்கவேண்டும். சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் தொடர்பாக அவர்களைக் களத்தில் அணுகச் செய்யவேண்டும். நாம் தமிழர் கட்சி சரிபாதியாக இடங்களை ஒதுக்கியிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். நாட்டில் 540 சீட்டுகளில் 180 பெண் எம்.பி-க்கள் வரவேண்டும். ஆக, 180 தொகுதிகளும் பெண்களுக்கான தொகுதிகளாக ஆக்கப்பட்டால் தான், இதில் பெண்கள் வர வாய்ப்பிருக்கிறது. பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை சட்டரீதியாகக் கொண்டுவந்தால்தான், 180 பெண் எம்.பி-க்கள் என்கிற 33 சதவிகிதம் நிரந்தரமாக இருக்கும். அரசியல் சாசனம் திருத்தப்படுவது மட்டுமே இதற்கான வழி" என்கிறார்.

- 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெண் பிரதிநிதித்துவம் 11 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. ஆனாலும், சர்வதேச அளவில் பெண் பிரதிநிதித்துவம் 23.4 சதவிகிதம் என்பதுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவு. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. மாறியிருக்கிறதா நிலைமை? என்பதை நோக்கும் 'நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு! - சாத்தியம் முதல் அசாத்தியங்கள் வரை!' எனும் ஜூனியர் விகடன் சிறப்பு அலசலை முழுமையாக வாசிக்க

*****

"காதல், உறவு...தேவைகள் சார்ந்தது அல்ல!"

"காதல், ரிலேசன்ஷிப் என்பது உங்கள் பார்வையில் என்ன?"

"நாம் காதல் பற்றிய சிந்தனையில்தான் வளர்கிறோம். தேவதை, பேரழகி, ஆணழகன் போன்ற வார்த்தைகள் மட்டுமல்ல காதல். ரிலேஷன்ஷிப்பில் ஒருவர் மற்றொருவரை எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும். நாம் எப்போதும் நமக்கான உந்து சக்தியாக இணையரைப் பார்க்கிறோம். அது அவர்களின் வேலையும் கிடையாது. நம்மை காக்கும் ஆபத்பாந்தவனாக காதலிப்பவரை எதிர்பார்த்தல் தவறு. அது தேவையுமற்றது. நாம் இன்னொருவரைக் காதலிக்கும் முன் நம்மை நாமே புரிந்துகொள்ள வேண்டும். நம்மை நாமே அதிகமாக காதலிக்க வேண்டும். தேவைகள் சார்ந்த ஒன்றாக இல்லாமல் விரும்பம் சார்ந்த ஒன்றாக இருப்பதே காதல், உறவு."

விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'

- நடிகை, மேடை நாடகக் கலைஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் கல்கி கோச்சலின். பால் சமத்துவம், தன்பாலின ஈர்ப்பு என, சமூகச் சிக்கல்களின்போதும் குரல் கொடுப்பவர். 'எம்மா அண்டு ஏஞ்சல்' படத்தின் படப்பிடிப்புக்காகக் கோவளம் கடற்கரையில் நடித்துக்கொண்டிருந்தவர் உடனான நேர்காணல்தான் "தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல!". சினிமா தொடங்கி வெப் சீரிஸ் வரை பல விஷயங்களில் கல்கியின் பார்வையைப் பதிந்துள்ள ஆனந்த விகடன் நேர்காணலை முழுமையாக வாசிக்க
---------------

மோடி - மன்மோகன் அரசு... வித்தியாசம் என்ன?

"டாக்டர் மன்மோகன்சிங் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மேதை. ஆனால், அவர் பிரதமராக இருந்த சமயத்தில் மாண்டேக் சிங் அலுவாலியா, கவுசிக் பாசு, சி.ரங்கராஜன் உள்ளிட்ட பல பொருளாதார அறிஞர்கள் இருந்தார்கள். டாக்டர் மன்மோகன் சிங்குடன் பல விஷயங்களைப் பற்றி விவாதித்தார்கள். அந்த அளவுக்கு அறிஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால், தற்போதைய அரசுக்குச் சகிப்புத்தன்மை இல்லை; உரையாட வேண்டும் என்கிற எண்ணமில்லை. அரசு சொல்வதையே அறிஞர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அது எப்படி நடக்கும்?"

விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'

- பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய 'Undaunted - Saving the Idea of India' என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது. மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனில் இந்தப் புத்தக அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கடந்த 220 வாரங்களாக செய்தித்தாள் ஒன்றில் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் ஆகும்.   

பொருளாதாரம், குழந்தைகள், காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிதம்பரம் எழுதிய கட்டுரைகள்  இந்தப்  புத்தகத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், இந்தி, குஜராத்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்தக் கட்டுரை மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப் பட்டுள்ளது. (தமிழில் வெளியாகவில்லை என்பதை சிதம்பரமே மறைமுகமாகக் குறிப்பிட்டார்!) 

இந்தப் புத்தக அறிமுக விழாவில் சிதம்பரம் உரை நிகழ்த்தியது மட்டுமல்லாமல், புத்தகம் தொடர்பான விவாதமும் நடந்தது. அதன் ஹைலைட்ஸை சொல்லும் "கடன், முதலீடு, ஏற்றுமதி உயராமல், ஜி.டி.பி எப்படி உயரும்?" எனும் நாணயம் விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க


*****

முழு நேர இயற்கை விவசாயி

வெளிநாட்டு வேலை, கைநிறையச் சம்பளம் என இருந்தாலும்... இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆசையால், வேலையைத் துறந்துவிட்டு வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருபவர்கள் பலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான், அனுராதா பாலாஜி. தான் பார்த்துவந்த ஆசிரியை வேலையை உதறிவிட்டு முழு நேர இயற்கை விவசாயியாக வலம் வந்து கொண்டிருக்கிறார், அனுராதா.

விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'

"அஞ்சு வருஷமா பீர்க்கன், புடலை, சுரைக்காய், கோவைக்காய்னு பந்தல் காய்கறிகளையும் சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். இப்போ தர்பூசணி, வெண்டை, சுரைக்காய், வாழை, பெருநெல்லி, மிளகாய், கத்திரி, தக்காளி, அவரைனு சாகுபடி பண்ணிட்டுருக்கேன். மா, வாழை மரங்களுக்கிடையில ஊடுபயிரா எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா இருக்கு. இங்க கிடைக்கிற காய்கறிகள், பழங்களை எங்க வீட்டுல வெச்சு விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன். சில இயற்கை அங்காடிகளுக்கும் அனுப்பிட்டுருக்கேன். நெல்லிக்காயை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்றேன்" என்ற அனுராதா பண்ணையைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

- தன் அனுபவத்துடன் வருமானம் குறித்தும் அனுராதா பகிரந்துகொண்ட 'மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், மதிப்புக்கூட்டல்! 8 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.3,00,000 வருமானம்!' எனும் பசுமை விகடன் மகசூல் கட்டுரையை முழுமையாக வாசிக்க

*****

'எக்ஸ்யூவி-யின் சின்னத்தம்பி... சாலைகளில் கும்கி!' 

மஹிந்திரா XUV500-ன் சின்னத்தம்பி XUV300, விற்பனைக்கு வந்துவிட்டது. `வெல்கம் டு கோவா' என்று மஹிந்திரா நிறுவனம், தனது புதிய காம்பேக்ட் எஸ்யூவியோடு நமக்காக கோவாவில் காத்திருந்தது. பிறகு என்ன? XUV300-வின் 17 இன்ச் அலாய் வீல்களை, கோவாவின் எல்லா தெருக்களிலும் பதித்துவிட்டேன். புது எக்ஸ்யூவி, நம் கோவை சின்னத்தம்பி யானை மாதிரி சுறுசுறுப்பாக இருக்குமா... கும்கி மாதிரி வெறித்தனம் காட்டுமா?

விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'

வழக்கம்போல அந்த சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டும் கியர் லீவரும் உயரமாக இருப்பது உறுத்தலாக, இடைஞ்சலாக இருக்கிறது. ஆனால், இடவசதியில் தாராளம். ஏகப்பட்ட பாட்டில் ஹோல்டர்கள், சென்டர் கன்ஸோலில் ஒரு பாக்ஸ், டேஷ்போர்டில் உள்ள க்ளோவ்பாக்ஸ்... இது நல்ல அகலம். இவை தவிர, சீட் பாக்கெட்டுகள் வேறு. எலாஸ்டிக் ஸ்டைல் பாக்கெட், பயன்படுத்த இன்னும் கொஞ்சம் வசதியாக இருந்திருக்கலாம். பூட் இடவசதிதான் குறைத்துவிட்டார்கள். 257 லிட்டர்தான். காருக்குள் பொருட்களை ஏற்றவும் வசதியாக இல்லை. டிக்கியின் உயரம் அதிகமாக இருக்கிறது. டேஷ்போர்டு கன்ட்ரோல்கள் இன்னும் கொஞ்சம் எர்கானமிக்ஸில் முன்னேற வேண்டும்...

- மஹிந்திரா XUV300 ப்ளஸ், மைனஸ்கள் குறித்த ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் வழங்கும் மோட்டார் விகடனின் 'எக்ஸ்யூவி-யின் சின்னத்தம்பி! சாலைகளில் கும்கி!' ஆர்ட்டிகிளை முழுமையாக வாசிக்க

*******

மனத் திடத்தை அடித்து உடைக்கும் வில்லன்கள்!

சென்னை - மேற்கு மாம்பலம் சுப்பா தெருவில் இருக்கிறது 'தஞ்சாவூர் மெஸ்'. 'தஞ்சாவூர் கேட்டரிங் சர்வீஸ்' என்கிற சிறிய பலகை தாங்கிய வீடுதான் அது. ஹாலில் அத்தனை கூட்டம். சாப்பிடுவதற்காகச் சிலர் வெளியில் காத்திருக்கிறார்கள். மணி ஏழரையை நெருங்கிவிட்டதால், இரவு உணவை அங்கேயே முடித்துக்கொள்வதாக வீட்டில் சொல்லிவிட்டேன். `என்ன ஆர்டர் செய்வது?' என்று நான் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க... ஸ்ரீதர், 'தோசை வேண்டும்' என்றார். உள்ளே திரும்பிய சர்வர், `ஒரு மாவேய்…' என்று குரல் கொடுக்க ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். 

விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'

சின்ன சமையலறையிலிருந்து மளமளவென வந்துகொண்டிருக்கின்றன மாவு, ரோஸ்ட், பூரி என்ற குரல்களுடன் விதவிதமான சிற்றுண்டிகள். இங்கு 'முடக்கத்தான் தோசை'  நன்றாக இருக்கும் என்று ஸ்ரீதர் முன்மொழிய, இரண்டு, மூன்று குரல்கள் வழிமொழிந்தன. சாண்ட்விச்சில் விட்ட கலோரியை இதில் பிடித்துவிடலாமென,  இதுவல்லவா 'ஹெல்த்தி' உணவு என்று சிலாகித்தபடி, முடக்கத்தான் தோசை ஆர்டர் செய்தாகிவிட்டது. வெளிர் பச்சை நிறத்தில் தோசையும், அதனுடன் கும்பகோணம் கடப்பா, தேங்காய் சட்னி, சாம்பார் என்று 'சைடிஷ்'கள்  வர, அப்புறம் என்ன? வழக்கம்போல டயட்டை இருட்டு அறையில் அடைத்துவிட்டு, கச்சேரியை ஆரம்பித்தாகிவிட்டது.

- 'மனத் திடத்தை அடித்து உடைக்கும் வில்லன்கள்' எனும் தலைப்பில் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வலம் வரும் அவள் கிச்சன் இதழின் 'உணவு உலா' பகுதியை முழுமையாக வாசிக்க https://www.vikatan.com/avalkitchen/2019-mar-01/traditional/148746-world-traditional-foods.html?utm_source=FBread_content_promo_article


*****

விகடன் ஃப்ளாஷ்பேக் (2013/91118) : பிரதமர் வேட்பாளரா? - குழப்பத்தில் ராகுல்!

அடுத்த வாரத்தில் ராகுல் காந்திக்கு ஒரு புரமோஷன் காத்திருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆவாரா? அல்லது, காங்கிரஸ் கட்சிக்கான பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? இதுதான் டெல்லி கிளப்பும் அந்த புரமோஷன் பரபரப்பு.

விகடன் போஸ்ட்: திமுகவின் 'அரசியல் நாகரிகம்', நாம் தமிழரின் 'மேன்மை', ப.சிதம்பரம் 'பட்டியல்'

 பாரதிய ஜனதா தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்து பிரசாரப் பயணத்தைத் தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியோ இப்போதுதான், எந்த மாதிரியான வியூகங்களை வகுக்கலாம் என்று யோசித்து வருகிறது. அதற்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் வரும் 17-ம் தேதி டெல்லியில் நடக்க இருக்கிறது. இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தயாராக இல்லை. சோனியாவுக்குப் பதவி மீது பற்று இல்லை. அதனால், ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

- 10/01/2014 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த 'கட்சித் தலைவரா.. பிரதமர் வேட்பாளரா? - குழப்பத்தில் ராகுல்!' எனும் செய்திக் கட்டுரையின் ஆரம்பப் பகுதி இது. தற்போதய தேர்தலை எதிர்கொள்ளும் ராகுல் காந்தியையும், 2014 தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்ட சூழலில் ராகுல் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள அந்தச் செய்திக் கட்டுரை முழுமையாக இதோ...