விபரீதம் இல்லா மாற்றம் - டிரெண்ட் ஆகும் #Trashtag சேலஞ்ச்! | People Are Cleaning Up The Planet In Viral #Trashtag Challenge

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (15/03/2019)

கடைசி தொடர்பு:19:55 (15/03/2019)

விபரீதம் இல்லா மாற்றம் - டிரெண்ட் ஆகும் #Trashtag சேலஞ்ச்!

இணைய உலகம் என ஒன்று வந்தப் பிறகு சேலஞ்ச்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இணையவாசிகளால் வருடத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு சேலஞ்ச்களாவது வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த சேலஞ்ச்களாக அறியப்படுகிறது ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ்ச். ஆனால் இவையனைத்தும் தேவையில்லாத, பொழுதுபோக்குக்காகக் கொண்டுவரப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளன. இந்த சேலஞ்ச்களால் சில சமயங்களில் உயிரிழப்புகளும் விபத்துகளும் நேர்ந்துள்ளன. இவற்றுக்கெல்லாம் மாறாக சமூகத்துக்கு நல்லது விளைவிக்கக்கூடிய வகையில் புதிய சேலஞ்ச் டிரெண்ட் ஆகி வருகிறது. #Trashtag என்னும் இந்த சேலஞ்ச் பல்வேறு நாடுகளின் நகரங்களிலும் வைரலாகி வருகிறது. 

#Trashtag

நகரங்களில் வீசப்படும் குப்பைகளை சுத்தம் செய்வதே இந்த சேலஞ்ச். அதன்படி குறிப்பிட்ட ஒரு இடத்தில் உள்ள குப்பைகளை முடிந்தளவுக்குச் சுத்தம் செய்து புகைப்படம் எடுத்து #Trashtag சேலஞ்ச் என்று குறிப்பிட்டு பதிவிட வேண்டும். தங்கள் பகுதிகளில் இருக்கும் குப்பைகளை அகற்றுவதை குறிக்கோளாகக் கொண்டே இந்த சவால் விடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி அதைப் புகைப்படமாக எடுத்து வைரலாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் வைரலான இந்த சேலஞ்ச் தற்போது இந்தியாவிலும் வைரலாகி வருகிறது. 

#Trashtag

இந்திய இளைஞர்கள் பலரும் தங்கள் பகுதிகளில் இருக்கும் குப்பைகளை அகற்றி வருகின்றனர். தனியாக, நண்பர்களுடன் சேர்ந்து, ஊர் மக்கள் இணைந்து சாலைகள், வீடுகள், கடற்கரை ஓரங்களில் உள்ள குப்பைகளை அகற்றி வருகின்றனர். கிகி, மோமோ என உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சேலஞ்ச்களுக்கு மத்தியில் ஆரோக்கியமான, சமூகத்துக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த சேலஞ்ச் அனைவரும் செய்தால் நல்ல மாற்றம் உண்டாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close