டாடா H2X... மாருதி சுஸூகி - ஹூண்டாய் - மஹிந்திராவுக்குப் போட்டி! | Tata H2X to Rival Micro SUV's of Maruti, Mahindra, Hyundai!

வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (17/03/2019)

கடைசி தொடர்பு:19:03 (17/03/2019)

டாடா H2X... மாருதி சுஸூகி - ஹூண்டாய் - மஹிந்திராவுக்குப் போட்டி!

இந்த நிறுவனத்தின் 45X மற்றும் E-Vision கான்செப்ட்களைப் போலவே, இங்கும் மினிமலிச கொள்கைகளின்படியே, கேபின் எதிர்காலத்துக்கான டிசைனுடன் கவர்கிறது!

Hornbill... இந்தப் புனைபெயரைக்கொண்ட மைக்ரோ எஸ்யூவி-யின் டீஸர்களை, ஜெனிவா மோட்டார் ஷோ - 2019 தொடங்குவதற்கு முன்பாகவே வெளியிட்டு, பயங்கர பரபரப்பைப் பற்றவைத்திருந்தது டாடா மோட்டார்ஸ். இந்நிலையில் ஜெனிவாவில் காட்சிப்படுத்தப்பட்ட H2X எஸ்யூவி கான்செப்ட்டைப் பார்க்கும்போது, Hornbill மைக்ரோ எஸ்யூவி எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. H2X-ல் ஹேரியரின் அடிப்படையான H5X கான்செப்ட்டில் இருந்து பல அம்சங்களைப் புகுத்தியுள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.

H2X

LED DRL மற்றும் முன்பக்க பம்பரில் இருக்கும் Tri Arrow Pattern ஆகியவை இதற்கான உதாரணங்கள். கட்டுமஸ்தான முன்பக்க வடிவமைப்பு, காருக்குக் கெத்தான தோற்றத்தைத் தருகிறது. டாடாவின் Impact Design 2.0 கோட்பாடுகளைப் பின்பற்றியிருக்கும் H2X கான்செப்ட், நெக்ஸானைவிட உயரமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. பாக்ஸ் போன்ற தோற்றமிருந்தாலும், எஸ்யூவி பீல் கிடைப்பது ப்ளஸ். பெரிய வீல் ஆர்ச், Diffuser உடனான பம்பர்கள், Floating Roof ஆகியவை அதற்குத் துணைநிற்கின்றன.

Tata Motors

இந்த நிறுவனத்தின் 45X (ஆல்ட்ரோஸ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்) மற்றும் E-Vision (ப்ரீமியம் செடான்) கான்செப்ட்களைப்போலவே, இங்கும் மினிமலிசக் கொள்கைகளின்படியே கேபின் எதிர்காலத்துக்கான டிசைனுடன் கவர்கிறது. டூயல் டோன் ப்னிஷ் ரசிக்கும்படி இருப்பதுடன், ஏசி வென்ட் - சென்டர் கன்சோல் - சீட் Backrest - டோர் பேடு ஆகியவை Turquoise கலரில் இருப்பது செம. ஆங்காங்கே ஸ்டோரேஜ் ஸ்பேஸும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க சீட்களின் ஹெட்ரெஸ்ட்டுக்குப் பின்னால், பின் இருக்கைக்கான ஏசி வென்ட் இருப்பது படுமாடர்ன்.

Geneva Motor Show

விமானத்தில் இருப்பது போன்ற ஸ்டீயரிங் வீல், இரட்டை 10.2 இன்ச் ஸ்க்ரீன்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், மற்றோன்று டச் ஸ்க்ரீன் சிஸ்டம்), டோர் பேனல் மற்றும் க்ளோவ் பாக்ஸில் பேப்ரிக் பட்டை, பெரிய கண்ணாடி ரூப் என, கேபின் முழுக்க விநோதமான டச்கள்தான்! H2X கான்செப்ட் பற்றிக் கேட்டால், ``Exemplary Performance, Future-Ready Connectivity, Outstanding Interior Room” எனச் சொல்கிறது டாடா. 

Design Concept

X445 எனும் குறியீட்டுப் பெயரைக்கொண்ட Hornbill மைக்ரோ எஸ்யூவி, ஆல்ட்ரோஸ் உற்பத்தியாகும் ALFA பிளாட்பார்மில்தான் தயாரிக்கப்படும். ஆனால், இது அந்தக் காரைவிட 50 மிமீ குறைவான வீல்பேஸைக்கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. இதில் டியாகோவில் இருக்கும் 1.2 லிட்டர் Revotron பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். 1.05 லிட்டர் Revotorq டீசல் இன்ஜின் வழங்கப்படுமா என்பது சந்தேகமே. நெக்ஸானுக்குக் கீழே பொசிஷன் செய்யப்படவிருக்கும் Hornbill, மஹிந்திரா KUV 1OO - மாருதி சுஸூகி Future S கான்செப்ட் (டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018) - ஹூண்டாயின் மைக்ரோ எஸ்யூவி (2023 அறிமுகம்) ஆகியவற்றுடன் போட்டிபோடும்.

Micro SUV

H2X கான்செப்ட்டின் Production வெர்ஷன், வருகின்ற 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு BS-6 விதிகளுக்கு ஏற்ப அறிமுகமாகும் என நம்பலாம். ஆனால், கான்செப்ட் காரில் இருக்கும் பல ஸ்டைலான அம்சங்கள் (பில்லர் இல்லாத கதவுகள், சி-பில்லரில் கதவுக் கைப்பிடி, பெரிய அலாய் வீல்கள்) இதில் இருக்குமா என்பது தெரியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close