Published:Updated:

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!
விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

எலெக்‌ஷன் என்கவுன்டர்: 'எடப்பாடி'யை மிரட்டும் 'பொள்ளாச்சி'

சி.பி.ஐ இந்த வழக்கை எடுத்தாலும், அவர்களுக்கு எந்தவோர் ஆதாரமும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, போலீஸார் இத்தனை அவசரமும் ஆத்திரமும் காட்டுகின்றனரோ என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. இந்த விவகாரத்தில், மற்றவர்களைவிட கோவை எஸ்.பி பாண்டியராஜன், டி.எஸ்.பி ஜெயராம் ஆகியோர் மீதுதான் எக்கச்சக்கமான புகார்கள் வாசிக்கப்படுகின்றன. இந்த வழக்கில், முதல் குற்றவாளியே எஸ்.பி பாண்டியராஜன்தான் என்று, தி.மு.க–வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு பகிரங்கமாகவே குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பிரச்னை இவ்வளவு பெரிதாக விஸ்வரூபமெடுத்துள்ள நிலையிலும், தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் கொடுக்கவந்த ஒரு பெண்ணை நாள் முழுவதும் அலைக்கழித்துத் திருப்பி அனுப்பியுள்ளனர், பொள்ளாச்சி பெண் போலீஸார். மொத்தமாக விவகாரத்தை மூடி மறைக்க போலீஸார் முயற்சி செய்வதிலிருந்தே, இதில் ஆளும்கட்சியினருக்குத் தொடர்பு இருக்கும் என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

...பொள்ளாச்சி மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்தக் கோபம், தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற அச்சம், ஆளுங்கட்சிக்கு உருவாகியுள்ளது. தங்களுக்கு சாதகமான பகுதி என்று நினைத்த கொங்கு மண்டலத்தில், வாக்குவங்கியைக் காலிசெய்யும் அளவுக்கு, இந்தப் பிரச்னை பெரிதாக வெடித்திருப்பது, அ.தி.மு.க தலைமையை நிலைகுலைய வைத்துள்ளது...

- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ விவகாரத்தின் அரசியல் - அதிகாரப் பின்புலம், ரகசிய நகர்வுகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் திரட்டி, அவற்றை அப்பட்டமாக மக்கள் முன்பு வைக்கும் "எலெக்‌ஷன் என்கவுன்டர்: 'எடப்பாடி'யை மிரட்டும் 'பொள்ளாச்சி'" எனும் ஜூனியர் விகடன் சிறப்புச் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

*****

''கல்லூரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யாராம்?''

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

''நீட்டா டிசோசா என்கிற மகிளா காங்கிரஸ் நிர்வாகிதான். இதற்காக அவர் ஏற்கெனவே சென்னைக்கு வந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துமுடித்துள்ளார். அது தமிழக காங்கிரஸ் கட்சியினருக்குத் தெரியாமல் நடந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை ராகுல் காந்தியை வைத்து டெல்லியில் இருந்து ஒரு டீம் நடத்தி வருகிறது. கல்லூரி நிகழ்ச்சிக்கு கட்சியினர் யாரும் வரக்கூடாது என்று தெளிவாகச் சொல்லி விட்டார்களாம். 'நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்' என்ற அடையாள அட்டையுடன் மாணிக் தாகூர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்டோர் மட்டும் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை ராகுல் காந்தியின் சமூகவலைதளங்களில் ஒளிபரப்ப, டெல்லியிலிருந்து ஒரு டீம் தனியாக வந்துள்ளது.''

- ராகுல் காந்தியின் தமிழக வருகை, இளைய தலைமுறையிடம் 'ஸ்கோர்' செய்திருப்பதாக உற்சாகத்தில் இருக்கிறது, தி.மு.க கூட்டணி. இந்த வருகையின்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் பெரிதாக உற்சாகத்தைப் பார்க்க முடியவில்லை. இதற்கான பின்னணியுடன் தற்போதைய கூட்டணி பரபரப்புச் சூழலையும் விவரிக்கிறார் மிஸ்டர் கழுகு. 'ராகுல் காந்தி வருகை... அப்செட் காங்கிரஸ் தலைவர்கள்!' எனும் ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பகுதியை முழுமையாக வாசிக்க

*****

ரஃபேல் விவகாரம்... ஆவணங்கள் கொடுத்தது யார்?

"நீங்கள் வெளியிட்ட ஆவணங்கள், 'பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டவை' என்று அட்டர்னி ஜெனரல் கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?"

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

"இந்தக் கூற்றின் வழியாக, அந்த ஆவணங்கள் உண்மையானவை என்பதை அவரே அங்கீகரித்து விட்டார். அதேசமயம், இது திருடப்பட்ட ஆவணம் அல்ல. நாங்கள் இதை விலைகொடுத்து வாங்கவும் இல்லை. எந்தக் காரணத்துக்காகவும், இந்த ஆவணத்தை அளித்த நபர் யார் என்பதை நாங்கள் வெளியிடமாட்டோம்." 

"ஒருவேளை உச்ச நீதிமன்றம் தேசப்பாதுகாப்பை முன்வைத்து, அந்த நபர் யார் என்பதை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டால்?" 

''உச்ச நீதிமன்றத்தால் அப்படி நிர்ப்பந்திக்க முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை. இதற்கு முன்னோடியாக, பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளே உள்ளன. இந்திய அரசியலமைப்பு, எங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது."

- அன்றைக்கு காங்கிரஸ் அரசின் போஃபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டுவந்ததும், இன்றைக்கு ரஃபேல் விமான விவகாரத்தை விவாதமாக்கியதும் பத்திரிகைகள்தான். ஆனால், இரு அரசுகளும் இவற்றை எதிர்கொள்ளும் விதத்தில்தான் எக்கச்சக்க வித்தியாசங்கள். இவை இரண்டையும் எதிர்கொண்ட பத்திரிகையாளர் 'தி இந்து' என்.ராம். அவரிடம் இதுகுறித்து சில கேள்விகளை முன்வைத்தோம். அவற்றுக்கு பதில்களை அளித்ததுடன், ரஃபேல் விவகாரத்தை மக்களுக்குப் புரியும்படி ஐந்து அம்ச குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கும், "உச்ச நீதிமன்றமே எங்களை நிர்பந்திக்க முடியாது" எனும் என்.ராம் அதிரடி பேட்டியை ஜூனியர் விகடனில் முழுமையாக வாசிக்க

******

"ஐரா... என்ன கதை?" 

"ரொம்பத் துடிப்பான ஒரு பொண்ணு பண்ற ஒரு விஷயம், ஏதோ ஒரு மூலையில இருக்கிற இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில என்ன விளைவுகளைக் கொண்டு வருதுங்கிறதுதான் கதை. இதை ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லரா சொல்லியிருக்கோம். பெண்கள் பல இடங்களில் சந்திக்கிற பிரச்னை உருவ கேலி. அதையும் இந்தப் படம் பேசும்."  

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

"நயன்தாரா இதில் என்ன ஸ்பெஷல்?" 

"முதல் முறையா இந்தப் படத்துல டபுள் ஆக்‌ஷன் பண்றாங்க. யமுனா, எல்லாத்தையும் பயமே இல்லாம எதிர்கொள்ளும் கேரக்டர், பத்திரிகையாளர். ரெண்டாவது கேரக்டர், பவானி. வெள்ளந்தியான, பயந்த சுபாவம் உடைய பெண். இந்தக் கதையை நயன்தாரா மேடம்கிட்ட சொல்லும்போது, பவானி கேரக்டர்ல அவங்க நடிக்கிறதா இல்லை. ஏன்னா, ப்ளாஷ்பேக்ல வர்ற சின்ன கேரக்டர் அது. வேற ஒரு நடிகைதான் நடிக்கிறதா இருந்தது. 63 படங்கள் பண்ணியிருக்காங்க, நயன்தாரா. இதுல ஏதாச்சும் ஸ்பெஷலா இருக்கட்டும்னு, 'நீங்களே பவானி கேரக்டரையும் பண்ணுனா நல்லா இருக்கும்'னு சொன்னேன். கொஞ்சம் யோசிச்சிட்டு சம்மதிச்சாங்க. பவானி பெரிய அளவுல பேசப்படுற கேரக்டரா இருக்கும்!"

- சுற்றிலும் தமிழ், ஆங்கில நூல்கள் பரவிக் கிடக்கின்றன இயக்குநர் சர்ஜுனின் அறையில்... 'லக்ஷ்மி', 'மா' குறும்படங்களின் வழி பரவலாக அறியப்பட்டவர். இப்போது நயன்தாரா நடிப்பில் 'ஐரா' என்கிற படத்தை முடித்துவிட்டார். மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தது தொடங்கி 'ஐரா' அனுபவங்கள் வரை பகிரும் 'நயன்தாராவின் டபுள் ஆக்‌ஷன்! - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...' எனும அவரது ஆனந்த விகடன் நேர்காணலை முழுமையாக வாசிக்க


******

கம்ப்ளீட் தேர்வு டிப்ஸ்!

சரிவிகித உணவு என்பது எப்போதுமே அவசியமானது. தேர்வு நேரத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். சாப்பிட வேண்டியதும்... தவிர்க்க வேண்டியதும்!

> காலை உணவு முக்கியம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும், கவனமாகப் படிக்கவும் உதவும். காலை உணவைத் தவிர்க்கையில், உடல் சோர்வடைந்து படிப்பில் கவனம் சிதறும். மூன்று வேளையும் உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். இடைப்பட்ட நேரத்தில் பழச்சாறுகள், சாலட், சூப் வகைகளைச் சாப்பிடலாம்.

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

> கண்டிப்பாக, கடைகளில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்க்கவும். டயரியா, டைபாய்டு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பழச்சாறுகளை வீட்டில் தயாரித்து அருந்துவது நல்லது. பழச்சாற்றில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கட்டும்.

> கேழ்வரகுக் கஞ்சியில் கால்சியம், புரோட்டீன் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. உடல் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத்தீனிகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

> தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் அருந்தலாம். இது, ஆழ்ந்த உறக்கத்தைத் தருவதுடன் மனஅழுத்தத்திலிருந்து விடுபட உதவும்.

> குளிர்பானங்களைத் தவிர்க்கவும். ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். மோர் அருந்துவது உடலுக்குப் புத்துணர்ச்சி தரும். 

- காலையில் கண் விழிப்பதில் தொடங்கி, உணவு, உடற்பயிற்சி, மனநலம், ஒவ்வொரு பாடப்பிரிவுக்குமான தனித்துவ விஷயங்கள் என்று கவனித்து உருவாக்கப்பட்டுள்ளது சுட்டி விகடனின் தேர்வு டிஸ்ப் இணைப்பிதழ். 'இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்!' எனும் அந்தப் பகுதியை முழுமையாக வாசித்துப் பயன்பெற

*******

வன்முறை எண்ணம் போக்கும் 'தாலாட்டு'

'`அம்மாவின் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே தூங்கும் ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் முதல் நன்மை 'நான் தனியா இல்லை' என்கிற பாதுகாப்பு உணர்வு. குழந்தைகளுக்குப் பேச்சைவிட பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதுவும் அதிகச் சத்தமில்லாமல், அம்மாவின் மென்மையான குரலில் பாடப்படும் தாலாட்டை, குழந்தைகள் ரசிப்பார்கள். அதனால்தான் அழுகிற குழந்தைகளைத் தாலாட்டு சமாதானப்படுத்துகிறது; அவர்களின் பிடிவாதத்தைக் குறைக்கிறது; சந்தோஷப்படுத்துகிறது; தூங்கவும்வைக்கிறது.

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

இன்றைய அம்மாக்கள் ஆங்கில ரைம்ஸ் போட்டுக் குழந்தைகளைத் தூங்கவிடுகிறார்கள். அதில் ஒலிப்பது அம்மாக்களின் குரல் கிடையாது என்பதால், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உணர்வு கிடைக்காது. அடுத்து, அம்மா பேசுவது தாய்மொழி; ரைம்ஸில் ஒலிப்பது வேறு மொழியாக இருக்கும். குழந்தை தாய்மொழியைச் சரளமாகப் பேச வேண்டுமென்றால், அம்மாக்கள் தாலாட்டுப் பாட வேண்டும்...

- தாலாட்டால் குழந்தைகளுக்குத் தூக்கத்தைத் தாண்டி வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை விரிவாக விவரித்து முழுமையாக வழிகாட்டும் 'ஆராரோ ஆரிரரோ... உயிரைக் காக்கும்!' எனும் டாக்டர் விகடன் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க


*****

சமீப காலத்தில், காய்கறிக்கடைகளில் அரைக்கிலோ அளவு தக்காளி கேட்டால்... 'கிலோவே ஏழு ரூபாய்தான். ஒரு கிலோவா வாங்கிக்கோங்க சார்' என்று கடைக்காரர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. சில்லறை விலைக்கு விற்கும் காய்கறிக் கடைகளிலேயே ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகி வரும் சூழ்நிலையில்... விவசாயிகளிடம் என்ன விலைக்கு வாங்குவார்கள் என்று யோசித்துப் பாருங்கள். 

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

... "கர்நாடகாவுல மழை வளமும், மண் வளமும் நல்லா இருக்கு. மானாவாரியிலயே ஏக்கருக்கு 40 டன் வரை மகசூல் கிடைக்குது. விளைச்சல் அதிகமாக இருக்குற ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு விளைபொருள்களை அனுப்புவது இயல்பா நடக்கிற விஷயம்தான். ஒரு சில நேரங்கள்ல தமிழ்நாட்ல இருந்து கர்நாடகாவுக்குத் தக்காளி போறதும் உண்டு. ஆனா, தொடர்ந்து ஏற்படுற விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தற வகையில அரசாங்கம் திட்டம் தீட்டணும்."

- எப்போதும் விலை வீழ்ச்சி ஏற்பட்ட ஒருசில வாரங்களிலேயே மீண்டும் தக்காளி விலை படிப்படியாக அதிகரிக்கத்தொடங்கி ஒரு நிலையான விலைக்கு வந்துவிடும். ஆனால், கடந்த சில மாதங்களாகவே தக்காளி மிகக்குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருவதுதான் வேதனை. இதன் பின்னணியை அலசும் 'தக்காளி விலை வீழ்ச்சி... காரணம் என்ன?' எனும் பசுமை விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

30 வகை கீரை ரெசிப்பி..!

க்ரீம் ஆஃப் பாலக் சூப்

தேவை: பாலக்கீரை - ஒரு கட்டு  வெங்காயம் (நடுத்தர சைஸ்) - ஒன்று  பூண்டு - 4 பல்  ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  ஃப்ரெஷ் க்ரீம் - 1/3 கப்  மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து தண்டுகளோடு நறுக்கவும். வெங்காயத்தைச் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டை நசுக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெயைக் காயவைத்து, சீரகத்தைத் தாளித்து, வெங்காயம், கீரை, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். மீண்டும் இதைக் கடாயில் ஊற்றி, ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கொதிவந்தவுடன் இறக்கி, சூப் பவுல்களில் ஊற்றிப் பரிமாறவும்.

- ``கீரையை மசியல், பொரியல் என்று மட்டும் செய்யாமல், கீரையைப் பயன்படுத்தி பீட்சா, பர்கர், நாண், கபாப், மக்ரோனி, பிரெட் டோஸ்ட், ஸ்மூத்தி எனக் குழந்தைகள் விரும்பும் டிஷ்களையும், பிரியாணி, வடை, பக்கோடா, டோக்ளா என அனைவரும் விரும்பும் உணவு வகைளையும் செய்து பரிமாறலாம்" என்று சொல்லித் தருகிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையற்கலைஞர் அகிலா விமல். அவள் விகடன் இணைப்பாக வெளிவந்துள்ள '30 வகை கீரை ரெசிப்பி'களை முழுமையாகத் தெரிந்துகொள்ள

******

விகடன் ஃப்ளாஷ்பேக் (25/02/2014): திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்கிறதா..?

சென்னையிலும் அதே நிலைதான். மெத்த படித்த வர்கள் நிரம்பிய ஏரியா, துணிச்சலோடு இருக்கும் பெண்கள் என்ற அடையாளப்படுத்தப்பட்டி ருக்கும் சென்னை பெண் கள்... 'தயங்கோ தயங்கு' என்று தயங்கினார்கள். சென்னையைப் பொறுத்த வரை, 'தாம்பத்யம் பெரும்பாலும்?' என்ற கேள்விக்கு 'இருவரின் விருப்பம்' என்ற ஆப்ஷனையே அதிகம் டிக் செய்தார்கள்.

விகடன் போஸ்ட்: 'பொள்ளாச்சி' அப்டேட்ஸ், ராகுல் 'கல்லூரி' சீக்ரெட்ஸ், 'ரஃபேல்' விளக்கும் என்.ராம்!

'திருமணத்துக்கு முன்போலவே, தற்போதைய வாழ்வில் இயல்பாக இருக்க முடிகிறதா?' என்ற கேள்விக்கு 'இல்லை' என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல பதில் சொல்லி இருந்தார்கள் பல வாசகிகள். திருமணத்துக்குப் பிறகு சினிமா, கோயில், ஷாப்பிங் என்று மனைவிக்காக கிட்டத்தட்ட 50 சதவிகித கணவர்கள் நேரம் செலவழிப்பதில்லை என்கிற அதிர்ச்சியும் தாக்கியது இந்த சர்வேயில்!

சர்வே முடிவுகள் ஏறக்குறைய இருந்தாலும், தாம்பத்ய வாழ்க்கை, திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை என்று பலவற்றிலும் பெண்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லை என்பதையே காட்டுகின்றன!

- 'அவள் விகடன்' 400-வது இதழுக்காக, 'திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது?' என்பது பற்றி தமிழகப் பெண்களிடம் ஒரு சர்வே எடுத்தது. இது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. அந்த சர்வே முடிவுகளுடன், கேள்விகள் பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த சர்வே முடிவுகளையும் பார்ப்போம். கேள்விப் பகுதிகளையும் பார்ப்போம். இந்த ஐந்து ஆண்டுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா என்பதை நம் அனுபவ ரீதியில் புரிதல் கொள்வோம். 25/02/2014 தேதியிட்ட அவள் விகடன் இதழில் வெளியான 'திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்கிறதா..? - தமிழக பெண்களிடம் ஒரு அதிரடி சர்வே!' எனும் பகுதியை முழுமையாக வாசிக்க

அடுத்த கட்டுரைக்கு