Published:Updated:

விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!

விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!
விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!
விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!

பங்குச் சந்தை... ஏற்றம் தொடருமா?

அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இரண்டு அண்டை நாடுகளாகிய இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இந்த பதற்றமான சூழல் மேற்கொண்டு வளர்ந்தால், அது இரு நாட்டின் பொருளாதாரத்துக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என  முதலீட்டாளர்கள் நினைத்ததால், இந்தியப் பங்குச் சந்தைகள் இறக்கம் காணத் தொடங்கின. ஆனால், பாலக்கோட்டில் தீவிரவாதிகள் முகாம்மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதும், இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்ததன்மூலம் போர் பதற்றம் நன்றாகவே தணிந்தது. இதனால் பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கின.

விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!

மேலும், பாலக்கோட் தாக்குதலுக்குப்பிறகு ஆளும்கட்சிக்கான ஆதரவு அதிகரித்திருப்பதாகக் கருத்துகள் வெளியாகத் தொடங்கின. ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இந்த சம்பவம் ஒரு காரணமாக அமையும் என்றும், அப்படி பா.ஜ.க ஆட்சி மீண்டும் அமையும்பட்சத்தில் இந்தியப் பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றம் காணத் தொடங்கும். அப்போது பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டும் எனப் பலரும் நினைத்ததால், பங்குச் சந்தையை நோக்கி புதிய முதலீடுகள் வர ஆரம்பித்தன. இதனால் பங்குச் சந்தைகள் ஏற்றம் காணத் தொடங்கின...

- இந்தியப் பங்குச் சந்தை, கடந்த ஆறு மாதங்களின் இல்லாத உச்ச அளவைக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (மார்ச்-15, 2019) எட்டியுள்ளது. இந்த ஏற்றம் இன்னும் தொடருமா அல்லது சந்தை திடீரென்று சரியுமா என்கிற கேள்வி முதலீட்டாளர்களின் மனதில் நங்கூரமிட்டிருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லும் 'ஆறு மாத உச்சத்தில் பங்குச் சந்தை... ஏற்றம் தொடருமா?' எனும் நாணயம் விகடன் அலசலை முழுமையாக வாசிக்க

*****

தெறிக்கவிடும் பஞ்சாயத்து இளைஞர்கள்!

இன்று சாதியாலும், மதத்தாலும் கட்சிகளாலும் கிராம மக்கள் பிரிக்கப்பட்டு அரசியல் கட்சிகளுக்கான ஓட்டுகளாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். அரசாங்கத்துக்கு அந்த மக்கள் பயனாளியாக, மனுதாரராக, வாக்காளராகத்தான் கருதப்படுகின்றனர்.  இந்தச் சூழல் மாற வேண்டும். கிராமம் என்பது மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை, உரிமைகளை, சேவைகளை சுயமரியாதையுடன் பெறும் இடமாக மாற வேண்டும்.

விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!

இவற்றை அந்த இளைஞர்கள் அழகாக விளக்கினார்கள். அவர்களிடம் உணர்ச்சி வேகம் இல்லை. 'கேள்வி கேட்கிறோம் என்கிற உரிமையில் அரசாங்கத்தை எதிரியாகப் பாவிக்கக்கூடாது. பொறுப்பை உணரவைக்க வேண்டும். எந்தச் சூழலிலும் வன்முறையை அனுமதிக்கக்கூடாது. அரசாங்கம் என்பது அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல. குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் அங்கத்தினர்தான்' என்றெல்லாம் எடுத்துரைத்தார்கள். 

- தேர்தல் நேரம் இது. அனைவரின் கவனமும் அரசியல் கட்சிகளின் மீதே இருக்கும். சமீபத்தில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. தமிழகம் முழுவதுமிருந்து சுமார் 60 இளைஞர்கள் ஒன்றுகூடினர். 'கிராம விடுதலைக்காக பஞ்சாயத்துகளை வலுப்படுத்துவோம்' என்ற குறிக்கோளுடன் ஜே.சி.குமரப்பா குடிலில் திரண்டவர்கள், தமிழகத்தில் முன்மாதிரியாகச் செயல்படும் பஞ்சாயத்துகள் குறித்து, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். கொட்டாம்பட்டி ஒன்றியத்தின் கம்பூர் பஞ்சாயத்து இளைஞர்கள்தான், இப்படியான ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கவனிக்கத்தக்க நிகழ்வு குறித்த 'நாம் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகளே!' எனும் ஜூனியர் விகடன் சிறப்புச் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

*****

இது வடகொரிய தர்பார்!

எதிர்க்கட்சிகள், எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் என யாரும் இல்லாமல் வடகொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. வாக்களிப்பது கட்டாயம் என்றாலும், வாக்காளர்களுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உரிமை இல்லை; அதற்கான வாய்ப்பும் இல்லை. வாக்களிக்க மறுக்கும் உரிமைகூட கிடையாது. ஆனாலும், ஜனநாயக முறையில் தேர்தல் நடந்ததாக அரசு சொல்கிறது!

விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!

... அந்நாட்டு சட்டப்படி, 17 வயது பூர்த்தியான அனைவரும் வாக்களிக்க வேண்டியது கட்டாயம். ஓட்டுப் போடாமல் யாரும் வீட்டில் இருக்க முடியாது; எவ்வித மறுப்பும் ஏற்றுக்கொள்ளப்படாது. மருத்துவமனையில் முடியாமல் படுத்திருக்கிறார்களா? வேறுவழியில்லை, அலைபேசி மூலம் வாக்களிக்க வேண்டும். அடடே அவ்வளவு விழிப்பு உணர்வா என்று அதிசயிக்க வேண்டாம். ஓட்டு போடலாம்தான்... ஆனால், வேட்பாளரைத் தேர்வுசெய்யவோ, யாருக்கு ஒட்டுப் போடுவது என்று முடிவு எடுக்கும் உரிமையோ வாக்காளருக்கு இல்லை...

- உலக நாடுகளுக்காக ஜனநாயகத்தின் பெயரைச் சொல்லி நடத்தப்படும் ஒரு வினோத சடங்கு குறித்து நமக்கு விவரிக்கும் 'எதிர்த்து நிற்க யாருமில்லை... ஆனாலும் அதன் பெயர் எலெக்‌ஷன்! - இது வடகொரிய தர்பார்!' எனும் ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

*****

சினிமா... சீரியல்... சயின்டிஸ்ட்!

''சினிமாவில் நடித்துக்கொண்டே சீரியலிலும் கவனம் செலுத்துகிறீர்களே... எப்படி?" 

''சீரியல் ஷூட்டிங், மாதத்தில் பத்து, பதினைந்து நாள்கள் இருக்கும். மற்ற நாள்களில் சினிமாவில் நடிக்கலாம் என்பதுதான் என் விருப்பம். சீரியல், சினிமா ஷூட்டிங் இல்லாத நாள்களிலும் வேலைக்குப் போகிறேன்."

விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!

''என்ன வேலை?''

"நான் ஒரு தனியார் கண் மருத்துவமனையில் ஜூனியர் சயின்டிஸ்ட். என் ஆய்வுகள் எல்லாம் கண்கள் பற்றியது. ஓக்குலர் கன்ஸ்ட்ரிக்டிவ் டிஸ்ஸாடர் (Ocular Constrictive Disorder) பிரச்னை உள்ளவர்கள் பற்றிய அனலைசேஷன் பற்றிப் படித்திருக்கிறேன். என்னுடைய ஸ்பெஷலை சேஷன், ஸ்டெம்செல் பயாலஜி (Stem Cell Biology). இது பார்ட் ஆப் பயோ டெக்னாலஜி (Part of Biotechnology Stem Cells). என் ஆய்வை முடிக்க இன்னும் ஒரு மாத காலம் தேவையாக இருக்கிறது. அதற்குள் விளம்பரம், படங்கள், சீரியல் என ஓடிக்கொண்டே இருக்கிறேன்.''

- 'வித்தியாசமான போலீஸ் கேரக்டரில் 'தடம்' படத்தில் நடித்து அசத்தியிருந்தார் வித்யா பிரதீப். இதற்கு முன் 'சைவம்', 'பசங்க 2', 'களறி' , மாரி 2 போன்ற படங்களில் நடித்திருந்தாலும் 'தடம்' படமே வித்யாவுக்கு அழுத்தமான தடம் பதிக்க உதவியிருக்கிறது. வித்யா,  'நாயகி' நெடுந்தொடரின் நாயகியும்கூட. அவருடனான சுருக்கமானதும் சுவாரஸ்யமானதுமான 'சினிமா... சீரியல்... சயின்டிஸ்ட்!' எனும் ஆனந்த விகடன் பேட்டியை முழுமையாக வாசிக்க

******

அனைத்து வகையான சலுகைகளும் பரிசீலனைக்குரியவைதான். என்றாலும், பெரும்பான்மை சம்பளதாரர்கள் கோரும் வீட்டு வாடகை அலவன்ஸுக்கான சலுகை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம், ஏற்கெனவே ரூ.27,000-ஆக இருந்த அதிகபட்ச வீட்டு வாடகை அலவன்ஸ், ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையின்படி, மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.60,000 என உயர்ந்துவிட்டது. அதாவது, முந்தைய வீட்டு வாடகை அலவன்ஸை விட 122% அதிகம். இந்த உயர்வு காரணமாக பணவீக்கம் 0.35% அதிகரித்ததாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!

ரூ.2.5 லட்சம் மாதாந்திர அடிப்படைச் சம்பளத்துடன் சென்னையில் பணிபுரியும்  மத்திய அரசு அதிகாரி, அதிகபட்ச வீட்டு வாடகை அலவன்ஸாக மாதம் ரூ.60,000 பெறலாம். இதன்படி, ஒரு நிதியாண்டு முழுவதும் பெறக்கூடிய வீட்டு வாடகை அலவன்ஸ் ரூ.7.2 லட்சமாக இருக்கும். இந்த ரூ.7.2 லட்சம் முழுவதையுமே வீட்டு வாடகை அலவன்ஸுக்கான வரிச் சலுகையாகப் பெறலாம். 

- வீட்டு வாடகை அலவன்ஸுக்கு வரிச் சலுகை பெறுவதற்கான கணக்கீட்டை செய்வது மிக எளிது. இதன் ஃபார்முலாவுடன் உரிய வழிகாட்டுதல்களையும் வழங்கும் 'நெருங்கும் மார்ச் 31 - வீட்டு வாடகை அலவன்ஸுக்கு சரியான வரிக் கணக்கீடு!' எனும் நாணயம் விகடன் கைடன்ஸ் கட்டுரையை முழுமையாக வாசிக்க

********

தோல்வி பக்குவத்தைத் தரும்!

நம் பிரச்னைக்கு நாம்தான் முதல் காரணமாக இருப்போம். நாம் ஒன்றை எதிர்பார்த்திருந்திருப்போம். ஆனால், வேறொரு விஷயம் நடக்கும். ஒருவரை நம்பியிருப்போம். அவர் நம்மை ஏமாற்றியிருப்பார். அது தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். அதுதான் நமக்குத் தீராத மனஅழுத்தத்தை உருவாக்குகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் ஏற்படும் டென்ஷனை, வரவேற்று ஓர் ஓரமாக ஸ்டூல் போட்டு உட்காரவைத்துவிட வேண்டும். பிறகு அந்தப் பிரச்னையே பொறுமை இழந்து கிளம்பிப் போய்விடும். மனஅழுத்தம் ஏற்படும்போது  கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்துவிடுவேன். பிரச்னையை அதன் போக்கிலேயே விட்டுவிடுவேன். 

விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!

- "துப்பாக்கியால் நம்மைச் சுட நினைப்பவர்களின் முன்னால் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு சரணடைவதுபோல் மனஅழுத்தம் வந்தால், அதனிடம் சரணடைந்துவிடவேண்டியதுதான். அதைச் சரி செய்வதற்காக, 'இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்று போனால், அவை வேறு மாதிரியான பிரச்னைகளைக் கொண்டுவந்துவிடும்'' என்று தேர்ந்த மனநல ஆலோசகர்போலப் பேசுகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. மனஅழுத்தம் ஏற்படும் தருணங்களைக் கடப்பது குறித்து "வெற்றி உயர்வைத் தரும் தோல்வி பக்குவத்தைத் தரும்!" எனும் 'மனசே மனசே' டாக்டர் விகடன் பகுதி மூலம் அவர் பகிர்ந்ததை முழுமையாக வாசிக்க

*******

கிராண்ட் மாஸ்டர் கில்லிகள்!

களத்தில் ஒருவருக்கொருவர் சவாலாக இருக்கும் இந்த இளம் கிராண்ட் மாஸ்டர்கள், நேரில் தோள் மீது கை போட்டு நண்பர்களாக சிரித்து விளையாடுகிறார்கள்.

``நாங்க எப்போ மீட் பண்ணினாலும், செஸ்ஸில் இருக்கும் சந்தேகங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் விவாதித்து உதவி செஞ்சுப்போம்" என்கிறார், இவர்களில்  சீனியரான நிஹல் சரின்.

``இந்த மாதிரி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சேர்ந்து விளையாடுவோம். நட்பும் வளரும்; செஸ் டிரெய்னிங் பண்ணின மாதிரியும் இருக்கும். இப்பவே, நாலஞ்சு கேம் ஓவர்'' என்று புன்னகைக்கிறார் பிரக்ஞானந்தா.

விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!

செஸ் கேமைப் பொறுத்தவரை தன்னுடைய பலவீனத்தை பிறர் அறியாமல் வைத்திருந்தால் மட்டுமே, ஒருவரால் சிறப்பாக விளையாட முடியும். ஆனால், நண்பர்களின் பலவீனங்களை அறிந்திருந்தாலும், அதை தங்கள் வெற்றிக்குப் பயன்படுத்தாமல், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள்.

- சர்வதேச செஸ் அரங்கில், இந்தியாவின் சுட்டி ஜீனியஸ்கள் சாதித்துவருகிறார்கள். கடந்த ஓராண்டில் கேரளாவைச் சேர்ந்த நிஹல் சரின், தமிழகத்தின் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர், `கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வென்று அசத்தியுள்ளனர். சுட்டி விகடனுக்காக மூன்று பேரையும் சந்திக்க வைத்தோம். 'கிராண்ட் மாஸ்டர் கில்லிகள்!' எனும் அந்தப் பகுதியை முழுமையாக வாசிக்க


*******

விகடன் ஃப்ளாஷ்ப்கே: 1952-ல் ஜெனரல் ஆஸ்பத்திரி!

முன்னெல்லாம் நாற்பது ரூபாய் சம்பளம் என்றாலே ஜெனரல் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலித்தார்கள். இப்போது விலைவாசி உயர்ந்துவிட்டதால் நூறு ரூபாய் வாங்கினால்தான் கட்டணம் வசூலிக்கிறார்கள். பட்டணத்தில் வேலை பார்க்கும் குமாஸ்தாக்களைத்தான் ஜெனரல் ஆஸ்பத்திரிக்காரர்களால், ஆளைப் பார்த்தே சம்பளத்தை நிதானிக்க முடிகிறது. அல்லது காரியாலயத்தில் இருந்து கடிதம் கொண்டு வா என்று கேட்க முடிகிறது.

விகடன் போஸ்ட்: பரபரக்கும் பங்குச்சந்தை, தெறிக்கவிடும் இளைஞர்கள், தடம் பதித்த வித்யா!

ஆனால், கிராமங்களில் இருந்து வரும் கிராமவாசிகளிடம் இந்த யுக்தி பலிக்குமா? மாதம் நூறு ரூபாய் சம்பாதிக்கிறவர்கள் ஆனாலும் சரி, ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவர்கள் ஆனாலும் சரி, கிராமவாசிகள் எல்லாரும் ஒரே மாதிரியாக இருப்பதால், அவர்கள் வருமானத்தை அவர்கள் தோற்றத்தைக்கொண்டு கண்டுபிடிக்க முடியாது. போதாக்குறைக்கு, கிராமத்தில் இருந்து வருகிற வர்கள் வருமானத்தைக் குறைத்துச் சொல்லுங்கள் என்று சொல்லிக் கொடுப்பதற்காகச் சிலர் எழும்பூர் ஸ்டேஷனுக்கும், சென்ட்ரல் ஸ்டேஷ னுக்கும் போய்விடுகிறார்களாம். இதையே அவர்கள் தொழிலாக வைத்துக்கொண்டு கிராம வாசிகளிடம் இருந்து பணம் பறிக்கிறார்களாம்...

- விகடன் ஃப்ளாஷ்பேக் தேடலில் ஈடுபடும்போது கிட்டியது ஓர் அசத்தலான விகடன் பொக்கிஷம் மேட்டர். 1952-ல் சென்னை அரசுப் பொது மருத்துவமனை எப்படி இருந்தது என்பதை நம் கண்முன்னே காட்டும் 'சென்னை ஆஸ்பத்திரிகள் நாடோடி' எனும் ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியை முழுமையாக வாசிக்க