Published:Updated:

'ஃபீஸ் கட்ட உதவுவீங்களா அண்ணா?' - துரையரசன்

'ஃபீஸ் கட்ட உதவுவீங்களா அண்ணா?' - துரையரசன்
'ஃபீஸ் கட்ட உதவுவீங்களா அண்ணா?' - துரையரசன்

புதுக்கோட்டை மாவட்டம், வணக்கங்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் துரையரசன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த துரையரசன் கடைசிப்பிள்ளை, இவருக்கு நான்கு அக்காக்கள். மூவருக்குத் திருமணமாகிவிட ஒரு சகோதரி ஜெராக்ஸ் கடையொன்றில் பணிபுரிந்து வருகிறார். துரையின் தந்தை திருமையா விவசாயக் கூலி வேலை செய்துவருகிறார். திருமையா வாங்கும் 300 ரூபாய் தினக்கூலி வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாகிவிடும். லட்சுமி இல்லாத இடத்தில் சரஸ்வதி குடிகொண்டதைப் போல, இந்த ஏழைக்குடும்பத்தின் ஆறுதலாக அமைந்த ஒரே விஷயம் துரையரசனின் கல்வியார்வம்.

'ஃபீஸ் கட்ட உதவுவீங்களா அண்ணா?' - துரையரசன்

2016ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 1200க்கு 1151 மதிப்பெண் எடுத்த துரையரசனுக்கோ மருத்துவம் படிக்கவே ஆசை. இருந்தும் சில மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி வாய்ப்பைத் தவறவிட்டார். 2016ஆம் வருடம்  கவுன்சிலிங்கில் இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம்  அன்னை மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்கப்பட்டது. வருடத்துக்கு சுமார் 3.50 லட்சம் ரூபாய் கல்விக்கட்டணம் என்பது துரையரசனின் குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் மூலம் முதல் வருடப் படிப்பை வெற்றிகரமாக முடித்த துரைக்கு காத்திருந்தது ஒரு பேரிடி.

துரை படித்துவந்த அன்னை மருத்துவக்கல்லூரி இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை எனும் காரணத்தால், அக்கல்லூரிக்குத் தடை விதித்துக் கழகம் உத்தரவிட்டது. அந்நேரத்தில் அங்கு படித்துவந்த 144 மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. இதுசம்பந்தமாக, 2017 இல் மாணவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், மாணவர்களை தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யக்கோரி தீர்ப்பு வழங்கியது. துரையரசன் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார், இருப்பினும் தீர்ப்புப் படி தனியார் கல்லூரிக்குச் செலுத்திய அதே கல்விக் கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலை...

'ஃபீஸ் கட்ட உதவுவீங்களா அண்ணா?' - துரையரசன்

உடனடியாக தேவைப்படும் ஒரு லட்ச ரூபாய்!

இரண்டாம் வருடக் கல்வியையும் முடித்துவிட்ட துறையரசனுக்கு ஏற்கனவே கல்விக்கடன் மற்றும் இதரக் கடன்கள் 4.50 லட்சத்துக்கும் மேல் உள்ளன. இதுதவிர, இன்னும் மூன்று வருடப் படிப்பைத் தொடர கிட்டத்தட்ட 10 லட்ச ருபாய் தேவைப்படுகிறது. இந்த வருடத்துக்கான கல்விக்கடன் மற்றும் கல்வி உதவித்தொகை கிடைத்தாலும், இந்த வருட வகுப்பில் சேர ரூபாய் 1 லட்சம் உடனடியாகத் தேவைப்படுகிறது.கட்டணம் செலுத்த கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவான மார்ச் 15 ஆம் தேதி கடந்துவிட்ட நிலையில், இன்னும் முழுக் கட்டணத்துக்கான பணம் கிடைக்காமல் செய்வதறியாது தவித்துவருகிறார் துரையரசன்.

பல சிக்கல்களுக்குப் பின்னரும், மருத்துவர் ஆகும் கனவோடு படித்துவரும் ஏழை மாணவரான துரையரசனுக்கு உதவவும், அவரின் மூன்று வருட படிப்புக்கு ஸ்பான்சர் செய்யவும் விருப்பமுள்ளோர், https://www.edudharma.com/fundraiser/durai-mbbs-education - இந்த லிங்கிற்குச் சென்று தங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம். இவ்வருட வகுப்புகளில் சேர, உடனடியாக துரையரசனுக்கு லட்ச ரூபாய் தேவைப்படுவதால், இச்செய்தியை உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் & சமூக வலைத்தளங்களிலும் பகிருமாறு, துரைக்காக நிதி திரட்டும் Edudharma.com கேட்டுக்கொள்கிறது.

உதவி செய்வோம், ஏழை மாணவரின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்!

'ஃபீஸ் கட்ட உதவுவீங்களா அண்ணா?' - துரையரசன்

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma - வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.