Published:Updated:

ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு

ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு

மும்பை: பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலக ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றி வரும் நிலையில், ராஜினாமா செய்யாவிட்டால் அவரை பதவி நீக்கம் செய்ய பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான குருநாத் மெய்யப்பன், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கி கைதாகி உள்ளார்.

இதனையடுத்து சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரீனிவாசன் குடும்பத்துக்கு சொந்தமானது என்பதால் அவர், தான் வகிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் தலைவர் பதவியிலிருந்து விலக ஸ்ரீனிவாசன் மறுத்து வருகிறார்.

##~~##
இந்நிலையில் ஸ்ரீனிவாசன் பதவி விலகாவிட்டால் அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இதர நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாகவும், அவருக்குப் பதிலாக 'க்ளீன் இமேஜ்' கொண்டவரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான ஷஷாங் மனோகரை அப்பதவியில் நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் வரை பிசிசிஐ தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள மனோகர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம் இது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் யாரும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் நெருக்கடி முற்றுவதால், ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்றே கூறப்படுகிறது.

பிசிசிஐ தலைவராக அருண் ஜெட்லி நியமனம்?

இதனிடையே பிசிசிஐ தலைவராக பா.ஜனதாவை சேர்ந்த அருண் ஜெட்லி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்களை மேற்கோள்காட்டி மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீனிவாசன் விலக கமல்நாத் வலியுறுத்தல்

இந்நிலையில் ஸ்ரீனிவாசன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும், எனவே அவர் பிசிசிஐ-யின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கமல்நாத் வலியுறுத்தி உள்ளார்.

ராஜினாமா இல்லை: ஸ்ரீனிவாசம் பிடிவாதம்

ஆனால் இன்று மதியம் மதுரையிலிருந்து விமானம் மூலம் மும்பை வந்த ஶ்ரீனிவாசன், தாம் பதவி விலகப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "  எனக்கு அழுத்தம் கொடுத்து ராஜினாமா செய்ய வைக்க முடியாது. எனது மருமகன்  குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதற்கு நான் பதவி விலக வேண்டும் என்று நிர்பந்திப்பது தவறு" என்றார்.