Published:Updated:

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'
விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

பாலியல் வன்கொடுமை... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி?' 

"பொள்ளாச்சி குற்றத்தில் தொடர்புடைய வக்கிர ஆண்களைப் போன்றவர்களைக் கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு ட்ரிக் சொல்லித் தர்றேன். பொதுவா, ஆண்களுக்கு அழகாகப் பேசத் தெரியாது.  அவங்க மூளையில் இருக்கிற மொழி மையத்தோட அமைப்பு அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கு. அதனால, ஓர் ஆண், நீங்க எப்படி கேள்வி கேட்டாலும் துல்லியமாகப் பேசுறான்னா, அவனுக்கு நிறைய பெண்களிடம் பேசிய அனுபவம் இருக்குன்னு அர்த்தம். அவன்கிட்ட உஷாரா இருக்கணும். அவனைத் தவிர்க்கிறதுதான் பாதுகாப்பு" என்கிறவர், பாலியல் சிக்கல், ஆபாச வீடியோ போன்ற பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் பெண்களின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களையும் விவரிக்கிறார் மனநல ஆலோசகர் ஷாலினி.

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

"காவல்துறையில் 'இன்வெஸ்ட்டிகேஷன் யூனிட் பார் க்ரைம் அகைன்ஸ்ட் வுமன் அண்டு சில்ட்ரன்' என்று பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க தனித்துறையே இருக்கு. காவல்துறையில் இப்போ நிறைய பெண் அதிகாரிகளும் இருக்கோம். நாங்களும்  உங்களுக்கு அம்மாதான், அக்காதான். 24 மணி நேரமும் எங்ககிட்ட நீங்க பேசலாம். தமிழ்நாடு காவல்துறையின் அத்தனை உயரதிகாரிகளின் நம்பரும் இணையத்தில் இருக்கு. நீங்க நடுராத்திரியில் போன் செய்தாலும் எடுப்போம். உங்க பிரச்னையும் ரகசியமாவே வைக்கப்படும். அதனால துணிந்து காவல்துறையை நாடுங்க..." என்கிறார் வனிதா ஐபிஎஸ். 

- பொள்ளாச்சியில், அப்பாவிப் பெண்கள் ஆபாச வீடியோக்களில் சிக்கியது போன்ற ஆபத்துகளில் பெண்கள் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான பாதுகாப்பு வழிகளை நிபுணர்கள் சொல்கிறார்கள். இதுகுறித்த 'தேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி?' எனும் அவள் விகடன் சிறப்பு அலசலை முழுமையாக வாசிக்க

********

''எங்களுடைய ஒரு ஏக்கர் நிலத்தை நம்பிதான் எங்க குடும்பமே இருக்கு. 15 மாடுகள், 16 ஆடுகளும் வளர்க்குறோம். இந்த நிலத்தைப் பிடுங்கிட்டா, எங்க நிலைமை என்னாகும்னு இந்த அரசு ஏன் யோசிக்கலை? பிரதமருக்கும் முதல்வருக்கும் ஏன் இது புரியலை? எங்க குடும்பத்துல மட்டும் 60 ஓட்டுகள் இருக்கு. இதுல ஒரு ஓட்டுகூட அ.தி.மு.க., பி.ஜே.பி கூட்டணிக்குப் போகாது..."

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

- சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் வேலைகளின்போது சேலத்தில் அதிகாரிகளின் நடவடிக்கையைத் தடுக்க முயன்ற உண்ணாமலை பாட்டியை போலீஸார் சுற்றி வளைத்த காட்சியை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. தமிழகமே அதிர்ந்த தருணம் அது. திட்டத்திலிருந்து அரசுகளும் பின்வாங்குவதாகத் தெரியவில்லை. மக்களும் தங்களின் எதிர்ப்பைக் கைவிடுவதாக இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது... சரி, என்ன சொல்கிறார்கள் அந்த மக்கள்? நேரில் சென்றோம். அது தொடர்பான 'அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு இல்லை! - எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் போர்க்கொடி' எனும் ஜூனியர் விகடன் சிறப்புச் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

******

இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!

"மாற்றுத்திறனாளியா இருந்துட்டு எதுக்கு இந்த த்ரில், டிராவல் எல்லாம்? ரிஸ்க் எடுக்காதீங்க. ஸ்டே அட் ஹோம்" - இந்த அறிவுறுத்தல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுச் சலித்துப்போனவர்தான் விசாகன். மூன்று வயதில் போலியோ அட்டாக். கழுத்துக்குக் கீழே உடலின் ஒரு பக்கம் முற்றிலுமாகச் செயலிழந்தது. ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தை, மாற்றுத்திறனாளியானதைக் கண்டு அதிர்ந்தாலும் விசாகனின் பெற்றோர்,  மன தைரியத்துடன் அவரை வளர்த்துள்ளனர். சிறுவயதிலிருந்தே ஒரு கை கால்தான் விசாகனின் பலம். எம்.பி.ஏ படித்துள்ள விசாகனின் வாழ்க்கையை மாற்றியது `பயணங்கள்.' ஆமாம்... அவர் ஒருபோதும் 'ஸ்டே அட் ஹோம்' அறிவுறுத்தல்களைக் காதுகளுக்குள் நுழையவிட்டதில்லை!

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

"மாற்றுத்திறனாளியா இருந்தா, பல விஷயங்கள்ல சமரசம் செஞ்சுக்கணும். அதுல டிராவல் ரொம்பக் கொடூரமானது. என் உடல்நலக் குறைபாடுகளைக் காரணம்காட்டி, டிராவல் பண்ணக் கூடாதுன்னு சொல்றதை என்னால ஏத்துக்கவே முடியலை. வெளி உலகத்தைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்... கிளம்பிட்டேன். டிராவல், என் வாழ்க்கையை மாத்திடுச்சு" எனும் விசாகன் இந்தியா முழுவதும் பயணப்பட்டிருக்கிறார். ஆனால், அவரது தன்னம்பிக்கையை உச்சத்துக்கு எடுத்துச் சென்றது, கயிலை மலையில் உள்ள மானசரோவர் பயணம்தான். - ஹைதராபாத் சென்ற விசாகனுக்கு, லைப் பார்ட்னர் மட்டுமல்ல... டிராவல் பார்ட்னரும் ஷாலினிதான். இவர்களது பயண அனுபவங்களை விவரிக்கும் 'இதயம் இணைந்தால் எங்கும் போகலாம்!' ஆனந்த விகடன் நெகிழ்ச்சிக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

"ஓட்டுநர்-நடத்துநர் நட்பு ஆத்மார்த்தமானது!"

"இரவு நேரப் பயணத்தில் ஓட்டுநர் தூங்காமல் வாகனத்தை ஓட்ட வேண்டும். பேருந்திலிருக்கும் அத்தனை பேரின் உயிர்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஓட்டுநருக்கு உண்டு. அவர் தூங்காமல் இருப்பதற்காக நடத்துநரும் விழித்திருந்து பேசிக்கொண்டோ, பாடல்களை ஒலிக்கவிட்டபடியோ பயணம் செய்ய வேண்டும். இரவு நேரப் பயணங்கள் அதிகமாக இருப்பதால் சரியான தூக்கம் இருக்காது. பயணித்துக்கொண்டே இருப்பதால் உடல் சூடாகிவிடும். சூடு அதிகரிப்பதால், வெடித்துவிடும் அளவுக்கு சில நேரம் தலைவலிக்கும். சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்குச் சூடு பிடித்துக்கொள்ளும். பணியில் இருக்கும்போதே கிடைக்கும் உணவை சாப்பிட்டுக்கொள்வேன். இரவு நேரப் பயணம், சரியில்லாத சாப்பாடு, சுகாதாரமற்ற சூழல் எல்லாம் சேர்ந்து மனதையும் சோர்வாக்கிவிடும்...

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

ஒரு பேருந்தில் பணிபுரியும் ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் இடையேயான நட்பு, ஆத்மார்த்தமாக இருந்தால்தான் பயணம் பிரச்னையில்லாமல் நடக்கும்..."

- 'அவருக்கென்ன... அரசு வேலை, டிக்கெட் போட்டாலும் போடாட்டியும் கைநிறைய சம்பளம்'  என்பது போன்ற பார்வைதான் நடத்துநர்கள் குறித்து நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால் அருகே சென்று பார்த்தால், அந்த பிம்பம் சுக்குநூறாக உடைகிறது. ஓசூரிலிருந்து கோவை செல்லும் வழித்தடத்தில் அரசுப் பேருந்து ஒன்றில் நடத்துநராகப் பணியாற்றுபவர் கே.பிரபாகரன். 28 ஆண்டுகளாகப் பேருந்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து வாழ்க்கையில் பயணம் செய்துகொண்டிருக்கும் அவர் தன் அனுபவங்களைப் பகிர்கிறார். டாக்டர் விகடன் இதழின் 'உடலுக்கும் தொழிலுக்கும்' தொடர் பகுதியில் அவரது பகிர்வுகளை முழுமையாக வாசிக்க  

300 வான்கோழிகள்... ரூ. 2,40,000 வருமானம்!

விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டால்... தண்ணீர்ப் பற்றாக்குறை, விலையின்மை, ஆள் பற்றாக்குறை போன்ற பலவிதப் பிரச்னைகளையும் எளிதாகச் சமாளித்து வருமானம் ஈட்டிவிட முடியும். அதனால்தான், பெரும்பாலான விவசாயிகள் தோட்டத்தின் ஒரு பகுதியில் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு எனக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். அந்தவகையில், தண்ணீர்ப் பற்றாக்குறையால் தரிசாகக் கிடந்த நிலத்தில் வான்கோழிப் பண்ணை அமைத்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சாலமன். 

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

"தாத்தா காலத்துல இருந்தே விவசாயம் செய்றோம். மொத்தம் எட்டரை ஏக்கர் நிலமிருக்கு. அதுல நாலரை ஏக்கர் வானம்பார்த்த பூமி. நானும் சின்ன வயசுல இருந்து அப்பாகூட சேர்ந்து விவசாயம் செய்துக்கிட்டிருந்தேன். காலேஜ் முடிச்சபிறகு அப்பாவுக்கு ஓய்வு கொடுத்துட்டு, நான் விவசாயத்துல இறங்கிட்டேன். மானாவாரி நிலத்துல போர்வெல் போட்டும் தண்ணீர் போதுமான அளவுக்குக் கிடைக்கலை...

... இதுவரை 300 வான்கோழிகளை (ஒரு கோழி 3 கிலோவிலிருந்து 6 கிலோ எடை என்ற கணக்கில்) உயிர் எடைக்குக் கிலோ 200 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 2,40,000 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு..."

- தண்ணீர்ப் பற்றாக்குறையால் தரிசாகக் கிடந்த நிலத்தில் வான்கோழிப் பண்ணை அமைத்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சாலமன். அவரது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் தரும் 'வளமான வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு! - 300 வான்கோழிகள்... ரூ. 2,40,000 வருமானம்!' எனும் பசுமை விகடன் பகுதியை முழுமையாக வாசிக்க

*******

ரூ.8 லட்சம் பட்ஜெட் கார்?

எனது பட்ஜெட் 8 லட்சம். முதல் கார் வாங்கவிருக்கிறேன். எனக்கு ஹோண்டா ஜாஸின் டிசைன் மிகவும் பிடித்திருக்கிறது. எனது தேர்வு சரியானதா?

- ஹெச்.கணேசன், இமெயில்.

உங்கள் முதல் காரிலிருந்து நீங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் தெரிவிக்காவிட்டாலும், ஜாஸ் வாயிலாக அதைச் சொல்லிவிட்டீர்கள். மினி எம்பிவி போன்ற தோற்றம், அதிக இடவசதி, பேடில் ஷிஃப்ட்டர்களுடன்கூடிய CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், டச் ஏசி கன்ட்ரோல்கள் என பல மாடர்ன் அம்சங்களைக் கொண்டது ஜாஸ். இருப்பினும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிக விலை, பெட்ரோல் இன்ஜினின் பவர் டெலிவரி, டல்லான கேபின், பேஸ்லிஃப்ட் மாடலில் காணாமல் போயிருக்கும் மேஜிக் சீட்ஸ் என சில மைனஸ்களும் ஜாஸில் உண்டு. மாருதி சுஸூகியின் பெலினோ பேஸ்லிஃப்ட் மாடலையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

- இதுபோலவே 'எலெக்ட்ரிக் டூ-வீலர் வாங்கலாமா?', 'டூ வீலர் டயர்களில் எது நல்ல ஸ்டெபிலிட்டி மற்றும் ரோடு கிரிப்பைத் தரும்?', 'FMSCI 4W Rally License வாங்குவது குறித்து விளக்கம்', 'புதிதாக ரைடிங் ஜாக்கெட் வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?' 'எனக்கு இடது கண் மட்டுமே தெரிகிறது. இருப்பினும், அனைத்து வாகனங்களையும் நன்றாகவே ஓட்டுவேன். என்னால் லைசென்ஸ் எடுக்க முடியுமா?' ஆகிய சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் தரும் மோட்டார் விகடனின் 'மோட்டார் கிளினிக்' கேள்வி - பதில் பகுதியை முழுமையாக படிக்க

ஊறுகாய் - சரித்திர விலாஸ்

ஜூலியஸ் சீஸர், கிளியோபாட்ராவை மட்டுமன்றி ஊறுகாயையும் அவ்வளவு காதலித்திருக்கிறார். அவரது தினசரி உணவில் சில விதமான ஊறுகாய்கள் இருந்திருக்கின்றன. ஜூலியஸ் சீஸரின் படை வீரர்களும் ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறார்கள். 

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனுக்கு ஊறுகாய் என்றால் மிகவும் விருப்பம். அவர் எங்கே படையெடுத்துச் சென்றாலும் அவருக்கும் படை வீரர்களுக்கும் கொண்டு செல்லப்படும் உணவில் ஊறுகாயும் தவறாமல் இடம்பெற்றிருந்தது. ஆனால், சீக்கிரமே ஊறுகாய் கெட்டுப் போகும் பிரச்னை தொடர்ந்தது. 'ஊறுகாயை நீண்ட காலம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் நபருக்கு 12,000 ஃபிராங்க் பரிசு' (இன்றைய மதிப்பில் இரண்டரை லட்சம் டாலர்) என்று நெப்போலியன் அறிவித்தார். பலரும் அதற்கு முயற்சி செய்து தோல்வியடைந்தார்கள். நிக்கோலஸ் அப்பெர்ட் என்பவர் அதற்கான தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகக் கண்டறிந்தார். ஊறுகாய் வைக்கப்படும் குடுவையை அடைக்கும் முன்பு அதிலிருக்கும் காற்றையெல்லாம் வெளியேற்றிவிட்டு, அதை இறுக்கமாக மூட வேண்டும்.

- சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கிளியோபாட்ரா காலம் தொடங்கி தற்போது வரை ஊறுகாயின் சுவையான சரித்திரப் பக்கங்களை அடுக்கும் அவள் கிச்சன் இதழின் சரித்திர விலாஸ் பகுதியை முழுமையாக வாசிக்க


*****

தேவதைகளின் டிரஸ் திருவிழா!

அம்மாவும் பொண்ணும் ஒரே மாதிரியாக உடை அணியும் கான்செப்ட் ட்ரெண்டாகி வருகிறது. அம்மா தேர்வுசெய்யும் உடைக்குப் பொருந்தும் வகையில் மகளின் உடையை எப்படி மிக்ஸ் மேட்ச் செய்வது, எந்தவிதமான அவுட் லுக்குக்கு என்னென்ன உடைகளைத் தேர்வு செய்யலாம் என்பது தொடர்பான தகவல்களைத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த உடை வடிவமைப்பாளர் வினோதினி.

இண்டோ - வெஸ்டர்ன்:

> இண்டோ - வெஸ்டர்ன் உடைகளை விரும்பும் மம்மீஸ்... மேக்ஸி, சில்க் மெட்டீரியலில் டிசைன் செய்த லாங் கவுன், லெஹெங்கா போன்றவற்றைத் தேர்வுசெய்யலாம். 

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

> ஆறு வயதுக்கு மேல் உள்ள குழந்தை எனில் உங்களின் உடையின் டிசைனிலேயே உங்கள் குழந்தையின் உடையையும் வடிவமைத்துக் கொள்ளலாம். 

> ஆறு வயதுக்குக் குறைவான குழந்தைக்குப் பெரியவர்களின் உடைகளைப் போன்றே இண்டோ  - வெஸ்டர்ன் உடைகளை இமிடேட் செய்தால் எடுப்பாக இருக்காது. எனவே, நீங்கள் தேர்வு செய்யும் உடையின் நிறம் மற்றும் அதே போன்ற மெட்டீரியலில் குழந்தைக் கான உடையை வடிவமைத்துக் கொள்ளலாம். 

> உங்கள் சாய்ஸ் கவுன் எனில் குழந்தைக்கு லேயர் கவுன், பப் ஸ்லீவ் கவுன், சில்க் மெட்டீரியல் பார்டர் கவுன் ஆகியவை அழகாக இருக்கும். 

> மேக்ஸியில் அசிமெட்ரிகல் ஸ்கர்ட் அண்டு டாப், அசிமெட்ரிகல் கவுன் போன்றவை உங்களையும் குழந்தையையும் கலக்கலாகக் காட்டும்.

- இதேபோல் ட்ரெடிஷனல் லுக், வெஸ்டர்ன் லுக் மற்றும் கேஷுவல் லுக் உடைகளைத் தேர்வு செய்வது தொடர்பான தகவலுக்கு, அவள் விகடன் இதழின் 'தேவதைகளின் டிரஸ் திருவிழா!' எனும் பகுதியில் முழுமையாக அறிய

******

விகடன் ஃப்ளாஷ்பேக் : 01/01/2014  "டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!"

...வழக்கம் போல காங்கிரஸை வறுத்தெடுத்தார் மோடி. ''டீ-யை விற்பது தவறில்லை. நாட்டை விற்பதுதான் தவறு.  ஃபெக்கி ஆண்டு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'ஊழல் மக்களின் ரத்தத்தை உலரவைக்கும்' என்று பேசியிருக்கிறார். டெல்லியில் ஊழலை எதிர்த்துப் பேசும் காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்ட்ராவில் ஊழல் தலைவர்களைக் காப்பாற்றுகிறார்கள். இதுதான் காங்கிரஸ். ஓட்டுக்காக மொழியாலும் வகுப்புவாதத்தாலும் நாட்டைப் பிரித்தது காங்கிரஸ்தான்.

விகடன் போஸ்ட்: ஆபாச வீடியோ... தேவை அதிக கவனம், 'அ.தி.மு.க அணிக்கு ஓட்டு இல்லை!'

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'சிறுபான்மையினர் வசிக்கும் 90  மாவட்டங்களுக்கு பிரதமர் சிறப்புத் திட்டங்களை அறிவித்திருந்தாரே அந்தத் திட்டத்துக்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டது? என்பது அந்தக் கேள்வி. 'ஒரு பைசாகூட செலவழிக்கப்படவில்லை' என்பது பதில். இவர்கள்தான் சிறுபான்மையினர் பற்றிப் பேசி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி என்பது சர்க்கரை வியாதிக்கு உள்ளான மாதிரி. ஒரு முறை சர்க்கரை வியாதிக்கு உட்பட்டுவிட்டால் உடலின் மற்ற பாகங்களும் மோசமாகிவிடும்.

இப்படியாகிவிட்ட டயாபெட் ஆட்சியை அகற்ற 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற இயக்கத்தை இங்கே தொடங்குகிறோம். காந்தி இதே மும்பையில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைத் தொடங்கியது மாதிரி நாமும் இந்த 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' இயக்கத்தை இங்கே தொடங்கி சர்க்கரை வியாதி ஆட்சிக்கு முற்றுவைப்போம். 2014 தேர்தலுக்காக நான் வாக்கு கேட்கவில்லை. 'வோட் ஃபார் இந்தியா'வுக்காகத்தான் கேட்கிறேன்'' என்று உரையை முடித்தார் மோடி...

- இது சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. தற்போது நாட்டின் பாதுகாவலராக 'அவதாரம்' எடுத்துள்ள மோடி, அப்போது தன்னை எப்படி முன்னிறுத்தி கவனத்தை ஈர்த்தார் என்பதைச் சொல்லும் 'டீ விற்கலாம்.. நாட்டை விற்கக் கூடாது!'' எனும் 01/01/2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க

அடுத்த கட்டுரைக்கு