`இனி எங்கள் ஆப் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்!' - #GooglePay-ன் புதிய முயற்சி | Now you can book train tickets on Google pay

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (21/03/2019)

கடைசி தொடர்பு:15:47 (21/03/2019)

`இனி எங்கள் ஆப் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்!' - #GooglePay-ன் புதிய முயற்சி

பிரபல UPI பேமன்ட் சேவை ஆப்பான கூகுள் பேயில் இனி ரயில் டிக்கெட்களும் புக் செய்ய முடியும். இந்த சப்போர்ட்டை ஐ.ஆர்.சி.டி.சி-யின் உதவியுடன் சேர்த்திருக்கிறது கூகுள். இது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் என இரண்டு ஆப்களிலும் கிடைக்கும். ரயிலில் காலியிடங்கள் இருக்கிறதா, இரு ரயில் நிலையங்கள் இடையே என்னென்ன ரயில்கள் இருக்கின்றன என அனைத்தையும் இனி கூகுள் பே தளத்திலேயே பார்க்கலாம். ஆனால், இவற்றுக்கு ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு இருப்பது அவசியம். இதில் முன்பதிவு செய்வதற்குக் கூடுதல் தொகை எதுவும் வசூலிக்கப்படாது. 

கூகுள் பே ரயில் முன்பதிவு வசதி

ஏற்கெனவே பேடிஎம், கிளியர்ட்ரிப் இதைச் செயல்படுத்தியிருக்கின்றன. அவற்றில் இருப்பதுபோல் இதிலும் `Genera’ மற்றும் மகளிர் பிரிவு டிக்கெட்கள் மட்டும்தான் முன்பதிவு செய்ய முடியும். இந்த வசதியை `Businesses’ பகுதியில் உள்ள `Trains’-க்கு சென்றால் பார்க்கலாம்.

கூகுள் பே வசதி

2017-ம் ஆண்டு கூகுள் டெஸ் என்ற பெயரில் கூகுளால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவை இன்று மக்களிடையே பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மெட்ரோ நகரங்களைத் தாண்டி மற்ற நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் இப்போது கூகுள் பே பிரபலமடையத் தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் இதில் நடக்கும் மூன்றில் இரண்டு பண பரிவர்த்தனைகள் அங்கிருந்துதான் வருகிறது. ஏற்கெனவே இருக்கும் ஆன்லைன் பேமன்ட், ரீசார்ஜ், பில் செலுத்தும் வசதிகளுடன் இந்த புதிய வசதியும் மேலும் பல மக்களைக் கவரும் என நம்புகிறது கூகுள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க