வாழ்க்கைச் செலவு அதிகம் உள்ள உலகின் முதல் 10 நகரங்கள்! #VikatanInfo | Cost of Living top 10 highest and lowest cites in the world.

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (22/03/2019)

கடைசி தொடர்பு:19:40 (22/03/2019)

வாழ்க்கைச் செலவு அதிகம் உள்ள உலகின் முதல் 10 நகரங்கள்! #VikatanInfo

இந்தியாவை பொறுத்தவரை மூன்று நகரங்கள் செலவு குறைந்த முதல் பத்து நகரங்கள் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. பெங்களூரு ஐந்தாவது இடத்தையும்; சென்னை எட்டாவது இடத்தையும்; புது டெல்லி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது...

வாழ்க்கைச் செலவு அதிகம் உள்ள உலகின் முதல் 10 நகரங்கள்! #VikatanInfo

லகில் உள்ள அனைவரின் அன்றாடத் தேவை, உண்ண உணவு, உடுத்த உடை, தங்க ஓர் இருப்பிடம். இவை தவிர்த்து மருத்துவம், கல்வி, போக்குவரத்து போன்ற சில அத்தியாவசிய செலவுகளும் உண்டு. இவை தவிர்த்துதான் மற்ற செலவுகள் எல்லாம். இந்தச் செலவுகள் அனைத்துமே இடத்துக்கு இடம் மாறுபடும். காரணம், அந்த இடங்களின் விலைவாசி வேறுபாடு. உதாரணமாக, அமெரிக்காவில் வசிப்பவரின் ஒரு நாள் செலவும், இந்தியாவில் வாசிப்பவரின் ஒரு நாள் செலவு விகிதமும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.

எக்கனாமிக் இன்டெலிஜென்ட் என்னும் சர்வதேச தனியார் அமைப்பு, ஆண்டுதோறும் 180 நாடுகளில் உள்ள நகரங்களின் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவச் செலவு, கல்வி, போக்குவரத்து போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகளில் பல கட்ட ஆராய்வை மேற்கொண்டு, வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள மற்றும் குறைந்த நகரங்களின் பட்டியலை வெளியிடும். இந்த ஆண்டுக்கான பட்டியலை, சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 

கீழ் உள்ள படத்தில் வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள மற்றும் குறைவாக உள்ள உலகின் முதல் பத்து நகரங்களைக் காணலாம்:

பல வருடங்களாகத் தொடர்ந்து முதல் இடம் வகிக்கும் சிங்கப்பூர், தொடர்ந்து இந்த வருடமும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூரைத் தொடர்ந்து இந்த வருடம் மேலும் பாரிஸ், ஹாங்காங் நகரங்களும் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிக் நான்காவது இடத்தையும், ஜெனிவா  ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

வாழ்க்கை செலவு குறைந்த மற்றும் அதிகமுள்ள டாப் 10 சிட்டிஸ்

அதைத் தொடர்ந்து செலவுகள் குறைந்த நகரங்களின் பட்டியலில் வெனிசுலாவில் உள்ள கரகாஸ் நகரம் முதல் இடத்தையும்; கொரியாவில் உள்ள  டமாஸ்கஸ் நகரம் இரண்டாவது இடத்தையும்; உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கந்து நகரம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியாவின் மூன்று நகரங்கள் முதல் பத்து தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. பெங்களூர் ஐந்தாவது இடத்தையும், சென்னை எட்டாவது இடத்தையும், புதுடெல்லி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. மேலும், பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரம் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை, செலவுகள் குறைந்த நகரங்கள் என்று மூன்று நகரங்களில் பெயர்கள் இடம்பிடித்தாலும், அந்த நகரங்களில் வாழ்பவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம், அந்த நகரங்களின் விலைவாசி நிலை அப்படி. ஆனால், இந்தக் கருத்துக்கணிப்பு பல்வேறு காரணிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அந்தக் காரணிகள் அனைத்து நகரங்களுக்கும் பொதுவானவை.