Published:Updated:

சம்மர் வந்தாச்சு... தாய்லாந்து சுற்றுலா போலாமா!

சம்மர் வந்தாச்சு... தாய்லாந்து சுற்றுலா போலாமா!
சம்மர் வந்தாச்சு... தாய்லாந்து சுற்றுலா போலாமா!

குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடனும், நண்பர்கள் படையுடனும், டிராவல் பிரியர்கள் தன்னிச்சையாகவும், ஜோடியாகவும் இந்தக் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வது பற்றிய பல பிளான்கள் மனதில் தோன்றியிருக்கும். கோடை விடுமுறையில் வெளிநாட்டு சுற்றுலா செல்ல ஆசை இருந்தும், சிலருக்கு பட்ஜெட் முட்டுக்கட்டையாக நிற்கும். கவலை வேண்டாம், நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல, நாம் பார்த்து ரசிக்க எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் மற்றும் கேளிக்கைகள் கொண்ட நாடாக அமைந்திருக்கிறது தாய்லாந்து!

சம்மர் வந்தாச்சு... தாய்லாந்து சுற்றுலா போலாமா!

தாய்லாந்தை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது, நேரில் கண்டு மனதார ரசித்து அதன் அழகை உணர்ந்தால் மட்டுமே எந்தச் சுற்றுலாவாக இருந்தாலும் திருப்திகரமாக நிறைவடையும். தாய்லாந்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய அதிமுக்கியமான சில இடங்களை முதலில் பார்ப்போம்... 

தி கிராண்ட் பேலஸ், பாங்காக் (The Grand Palace, Bangkok)

தாய்லாந்தின் பிற இடங்களைக் கண்டுகளிக்கும்போது, தலைநகரான பாங்காக்கில் ஓரிரு நாள்கள் நேரத்தை செலவிட மறக்காதீர்கள். கிராண்ட் பேலஸில் இருந்து இங்கு பயணத்தைத் தொடங்குவது சிறப்பு. அந்த நகரத்திலேயே நாம் பார்த்து ரசிக்கவேண்டிய நம்பர் ஒன் இடம் இது, இங்குள்ள பிரமாண்ட அரண்மனைகள் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துவிடக்கூடியவை!

சண்டே வாக்கிங் ஸ்ட்ரீட் - சியாங் மை (Sunday Walking Street - Chiang Mai)

மலிவு விலையில், அசத்தலான உணவுகள் மிகுதியாக கிடைக்கும் இடம் சியாங் மை சண்டே ஸ்ட்ரீட். கிராப் கேக்ஸ், ஃபிரைடு பானானாஸ், ஸ்வீட் ரோட்டீஸ், பிரஷ் ப்ரூட் ஷேக்ஸ், சிக்கன் சட்டே, பேட் தாய், இவையனைத்தும் தாய்லாந்தில் எப்போதும் மலிந்த விலையிலேயே கிடைக்கக் கூடியவை. இதனால், அன்றாடம் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் சந்தையாக சண்டே வாக்கிங் ஸ்ட்ரீட் திகழ்கிறது.

ரயிலே பீச் (Railay Beach)

தாய்லாந்து நாட்டின் கிராபி மாகாணத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பீச்களில் ஒன்றாக 'ரயிலே' இருக்கிறது. அந்தக் கடற்கரையில் அமைந்திருக்கும் வெள்ளை மணல், தெளிந்த நீல நிறக் கடல் நீர், நிச்சயம் நாம் சொர்க்கத்தை கண்டுவிட்டது போன்ற உணர்வைக் கொடுக்கும். 

சம்மர் வந்தாச்சு... தாய்லாந்து சுற்றுலா போலாமா!

கோஹ் ஃபி ஃபி (Koh Phi Phi)

தாய்லாந்தின் மிகவும் பிரபலமான ரிசார்ட் இடங்களில் ஃபி ஃபி  தீவு புகழ்பெற்றதாகும். அங்கு மங்கி பீச் வேடிக்கை இடங்களில் ஒன்றாகும். வாடகைப் படகு மூலம் வழிகாட்டியுடன் இங்கு செல்லலாம். இங்கு நீங்கள் வாங்கும் சுவையான பலகாரங்கள் மற்றும் பழங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், இல்லையேல் அவை குரங்கு நண்பர்களின் வசம் சென்றுவிடும்!

கோ யாய் நேஷனல் பார்க் (Khao Yai National Park)

யானைகளைப் போற்றும் நாடாக தாய்லாந்து உள்ளது. அதன் சிலைகளையும், ஓவியங்களையும் இங்கு எங்கு சென்றாலும் பார்க்க முடியும். அங்குள்ள சுற்றுலா அமைப்புகள் மற்றும் கேம்ப்களில் யானைகளுடன் நேரத்தை செலவிட அனுமதிக்கின்றனர். காட்டுக்குள் ட்ரெக்கிங், யானைக் குளியல், உணவுகளை வழங்கல் போன்றவற்றை செய்து மகிழலாம். அருவிகள் அருகே யானைகள் உலா வருவதைப் பார்க்க முடியும், தவிர பறவைகள், குரங்குகள் மற்றும் இதர விலங்குகளை அங்கே பார்க்கலாம். 

'இலவச விசா', தவறவிடாதீர்கள்!

வெளியூரில் சுற்றுலா செல்வதற்கு விசா கட்டாயம்.. சுற்றுலாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தாய்லாந்து, இந்தியர்களுக்கு கட்டணமில்லா `இலவச வீசா ஆன் அரைவல்' வசதியை ஏற்படுத்தித் தருகிறது. இதன்மூலம் விசாவை  அந்நாட்டுக்குச் சென்ற பிறகு எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த இலவச வசதியை ஏப்ரல் 30, 2019 வரை வழங்குகிறது அந்நாட்டு அரசு. 

வெளிநாட்டுச் சுற்றுலா என்றாலே லிஸ்டில் முதலிடத்தைப் பிடிப்பது பட்ஜெட். அந்த வகையில் 'ஏர் ஏசியா' நிறுவனத்தின் விமான சேவை தாய்லாந்து செல்ல மிகக் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. மற்ற விமான சேவைகளை ஒப்பிடுகையில் ஏர் ஏசியா நிறுவனத்தின் தாய்லாந்து டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவு. இந்தியாவில் இருந்து பாங்காக்கிற்கு தினசரி விமான சேவையை வழங்குகிறது ஏர் ஏசியா.  AirAsia மொபைல் ஆப் மூலமாக டிக்கெட்களைப் பெறலாம்.எனவே, குறைந்த கட்டணத்தில் நிறைவான சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்ள தாய்லாந்தை உங்கள் ஆப்ஷனில் முதல் சாய்ஸாக வைத்துக்கொள்ளலாமே!