Published:Updated:

``பீஸ் கட்ட காசில்ல, காலேஜ் போகல" - வருங்கால டாக்டர்!

``பீஸ் கட்ட காசில்ல, காலேஜ் போகல" - வருங்கால டாக்டர்!
``பீஸ் கட்ட காசில்ல, காலேஜ் போகல" - வருங்கால டாக்டர்!

``பீஸ் கட்ட காசில்ல, காலேஜ் போகல" - வருங்கால டாக்டர்!

துரையரசன் மூன்றாமாண்டு செல்லவிருக்கும் மருத்துவ மாணவர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம், வணக்கங்காடு கிராமத்தைச் சேர்ந்த துரையரசன் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த கடைசிப் பிள்ளை ஆவார், இவருக்கு நான்கு அக்காக்கள். பன்னிரண்டாம் வகுப்பில் 95% (1151/1200) மதிப்பெண் எடுத்து அசத்திய துறையரசனுக்கு மருத்துவ படிப்பின்மேல் கொள்ளை விருப்பம், இருப்பினும் ஒரு சில மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி வாய்ப்பைத் தவறவிட்ட துரைக்கு கவுன்சலிங் மூலம் காஞ்சிபுரம் அன்னை மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்க, தன் குடும்பத்தின் சக்திக்கும் மீறி வருடம் 3.50 லட்சம் கட்டணம் செலுத்தி மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.

``பீஸ் கட்ட காசில்ல, காலேஜ் போகல" - வருங்கால டாக்டர்!

நன்றாக படிக்கும் மாணவர் என்பதால் துறைக்கு முதலாமாண்டு கல்விக் கடனும், கல்வி உதவித் தொகையும் கிடைத்தது, இருந்தாலும் பிரச்னை வேறு விதமாக துரையை அடித்தது. 2017-ல் துரையின் முதல் வருட படிப்பு முடிந்தபோது, விதிமீறலுக்காக அன்னை மருத்துவக் கல்லூரியை மூட உத்தரவிட்டது இந்திய மருத்துவக் கழகம். எந்தத் தவறும் செய்யாத மாணவர்கள் படிப்பை பாதியிலேயே இழந்து பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் மாணவர்கள். இறுதியாக பாதிக்கப்பட்ட 144 மாணவர்களை அரசுக் கல்லூரிகளில் மாற்றக்கோரி உத்தரவிட்டது நீதிமன்றம். 

மாணவர்கள் அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டாலும் தனியார் கல்லூரியில் கட்டிய அதே கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட பின்னரும் துரையரசன் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.

முதல் வருடம் தனியார் கல்லூரியிலும், இரண்டாம் வருடம் மதுரை மருத்துவக் கல்லூரியிலும் படிப்பை முடித்துவிட்ட துரையரசன் தற்போது மூன்றாமாண்டு வகுப்புகளுக்குச் செல்வதற்காக காத்துள்ளார். இதற்காக மூன்றரை லட்ச ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்த பலரது உதவியையும் நாடி வருகிறார். இது தொடர்பாக சென்ற வாரம் இங்கு கொடுக்கப்பட்டிருந்த செய்தியைப் பார்த்து பல நல்ல உள்ளங்கள் துரையரசனுக்கு நிதி உதவியை அளித்துள்ளனர். இருப்பினும் முழுக் கட்டணமான மூன்றரை லட்சம் இன்னும் கைக்கு வராத நிலையில், மூன்றாம் ஆண்டு வகுப்புகள் துவங்கப்பட்ட நிலையிலும் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளார் துரையரசன்.

இவரின் தந்தை திருமையா விவசாயக் கூலியாவார், 300 ரூபாய் மட்டுமே இவரது தினக்கூலியாகும். இதைக்கொண்டு தன்னுடைய குடும்பத்தை நடத்துவதே பெரிய சிரமமாக இருந்து வரும் நிலையில், தன் மகனின் படிப்புக்கான கல்விக் கட்டணத்தைத் திரட்ட பலரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுளார் திருமையா. இதையறிந்து, நிதி திரட்டும் தளமான Edudharma.com இவர்களுக்காக fund raising நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மருத்துவராகும் கனவோடு அயராது உழைத்து வரும் ஏழை மாணவரான துரையரசன் மூன்றாம் ஆண்டு படிப்பில் தொடரவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து படிக்கவும் நம்மாலான உதவியை உடனடியாக செய்யுமாறு Edudharma கேட்டுக்கொள்கிறது. https://www.edudharma.com/fundraiser/durai-mbbs-education எனும் இந்த லிங்கிற்குச் சென்று உங்களாலான உதவியைச் செய்யலாம், அறிந்த தெரிந்தவர்களிடம் இச்செய்தியைப் பகிர்ந்தும் உதவலாம்.

உதவி செய்வோம், ஏழை மாணவரான துரையரசனின் மருத்துவக் கனவை நனவாக்குவோம்!

``பீஸ் கட்ட காசில்ல, காலேஜ் போகல" - வருங்கால டாக்டர்!

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma - வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.

அடுத்த கட்டுரைக்கு