Published:Updated:

மீட்டர் கட்டணம்; கலக்கும் M-Auto சேவை!

மீட்டர் கட்டணம்; கலக்கும் M-Auto சேவை!
மீட்டர் கட்டணம்; கலக்கும் M-Auto சேவை!

மீட்டர் கட்டணம்; கலக்கும் M-Auto சேவை!

நம் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக இருப்பது பயணம். ஒரு மனிதன் பிறக்கும் முதல் அவன் இறக்கும் தருவாய் வரை பயணங்களோடு ஒன்றியே வாழ்க்கை அமைகிறது. பயணங்கள் பல விதமான வாகனங்களில் நிகழ்கின்றன. இவற்றுள், நமது வாழ்வோடு கலந்து, தெருமுனை திரும்பினால் எப்போதும் கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய ஒரே வாகனமாக இருப்பவை 'ஆட்டோக்கள்'. 'உங்களின் வழிப் பயணத்தில் எங்களின் வாழ்க்கைப் பயணம் தொடங்கும்' என்னும் தாரக மந்திரத்திலே தங்களது வாழ்வாதாரத்தைப் பிணைத்தவர்கள் ஆட்டோக்காரர்கள். 

மீட்டர் கட்டணம்; கலக்கும் M-Auto சேவை!

'சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே', 'வேகம் அதிக இஷ்டம், சோகம் அதைவிட கஷ்டம்' என்கிற சிரிக்க, சிந்திக்க வைக்கும் வாசகங்களால் நம்மை கவர்பவர்கள். மனிதாபிமானத்துடன் உதவி செய்வதிலும், ஆட்டோக்காரர்களுக்குப் பிரச்னை என்றால் போராட்டம் செய்வதிலும் நம்மூர் ஆட்டோக்காரர்களை அடிச்சுக்கவே முடியாது. 'அண்ணா லேட் ஆகுது கொஞ்சம் சீக்ரம் போங்க' என சொல்லி முடிப்பதற்குள் ஸ்பீடை ஏற்றி, டாக்சி, கேப் ட்ரைவர்களுக்கு டஃப் கொடுப்பவர்கள் ஆட்டோக்காரர்களே. 

ஏன்? நாம் பார்த்து வியக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தல அஜித், தளபதி விஜய், காமெடியன்கள் வடிவேலு, விவேக் வரை ஆட்டோக்காரர்கள் வேடமிட்டு நம்மை திரையில் மகிழ வைத்தவர்கள் ஏராளம். அது வெறும் வேடமாக மட்டுமன்று அதற்குப் பின்னால் இருக்கும் சிரிப்பு, சந்தோஷம், சோகம், கவலை, வலி, வேதனை என அத்தனையும் காண்பித்திருப்பார்கள். இவ்வாறு கொண்டாடப்பட்ட ஆட்டோக்களும், ஆட்டோக்காரர்களும் தற்போது நம்மிடம் இருந்து மறைந்துபோவது எதனால்... கர்றாரான பேரம், 'பெட்ரோல் விலை ஏறிடுச்சு தெரியும்ல' என்பன போன்ற ஆட்டோக்காரர்களின் வார்த்தைகள் அவர்களைக் கடந்து செல்ல வைக்கின்றன. 

M-Auto சேவை

`மீட்டர்' ஆட்டோக்கள் இருந்தவரை இவ்வாறான பிரச்னைகள் வந்ததில்லை. அதற்கு தீர்வு காணும் வகையிலும், நடுத்தர குடும்பங்களின்தானியங்கி பல்லக்கை திருப்பிக்கொடுக்கவும், ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் களமிறங்கியிருக்கிறது 'M-Auto'. இங்கு ஆட்டோக்காரர்களும், வாடிக்கையாளர்களும்தான் உரிமையாளர்கள். மக்கள் ஆட்டோ அவர்களை இணைக்கும் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. மீட்டர் கட்டணத்தில் சேவையை வழங்கி, அதிலிருந்து வரும் லாபம் முழுவதும் ஆட்டோக்காரர்களுக்கே சொந்தம். நடுவில் மக்கள் ஆட்டோ நிறுவனம், கருவியாக மட்டுமே பணியாற்றுகிறது. ஜி.பி.எஸ். வசதி, மொபைல் ஆப் மூலம் ஆட்டோ புக் செய்யும் வசதி, டிஜிட்டல் மீட்டர், ஆபத்து நேரத்தில் உதவும் பேணிக் பட்டன் என பலதரப்பட்ட அம்சங்களுடன் தனது சேவையை அளித்து வருகிறது மக்கள் ஆட்டோ. 

மீட்டர் கட்டணம்; கலக்கும் M-Auto சேவை!

பெண்கள் கால்பதித்து சாதிக்காத துறைகளே இல்லை. அதை நிரூபிக்கும் வகையில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களை பெருமளவு உருவாக்கி உள்ளது மக்கள் ஆட்டோ நிறுவனம். ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில், அவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சியளித்து பல பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தியிருக்கிறது மக்கள் ஆட்டோ. இதனால் பெண் வாடிக்கையாளர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பிரத்யேகமாக 'Women Pride' என்கிற ஆப்ஷனையும் வழங்குகிறது M-Auto. 

இனி 'நோ' பேரம்

M-Auto Pride மீட்டர் கட்டணத்தைப் பின்பற்றுவதால், முதல் 1.8 கிலோமீட்டருக்கு கட்டணம் ரூ.30 மட்டுமே. அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.14 செலுத்தினால் போதுமானதாகும். அதனால் M-Auto வாடிக்கையாளர்கள் புக் செய்து ஆட்டோவில் ஏறினால் போதும், பேரம் என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை!

விகடன் வாசகர்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.100 மதிப்பிலான இலவச சலுகையும் காத்திருக்கிறது. சலுகையைப் பெறுவதற்கு இந்த லிங்கை, கிளிக் செய்யுங்கள். உங்களின் பயணம் இனிக்கட்டும்!

அடுத்த கட்டுரைக்கு