Vivo IPL 2019 தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்றது YuppTV | YuppTV bags the digital broadcast rights for VIVO IPL 2019

வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (27/03/2019)

கடைசி தொடர்பு:19:52 (27/03/2019)

Vivo IPL 2019 தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்றது YuppTV

தெற்காசிய நிகழ்ச்சிகளை ஆன்லைனில் ஒளிபரப்பிவரும் உலகின் தலைசிறந்த OTT  பிளாட்ஃபார்ம்களில் ஒன்றான YuppTV தற்போது Vivo IPL 2019 தொடரை இந்தியா தவிர்த்த பிற உலக நாடுகளுக்கு டிஜிட்டலில்  ஒளிபரப்புவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. இதனால் இந்தியர்கள் மட்டுமல்லாது இனி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் 12-வது ஐ.பி.எல் சீசனை உடனுக்குடன் கண்டுகளிக்க முடியும்.

ஆஸ்திரேலியா, காண்டிநெண்டல் யூரோப், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தெற்கு & மத்திய அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியா & மத்திய ஆசிய நாடுகளில் உள்ள YuppTV வாடிக்கையாளர்கள் இதன் மூலம் ஐ.பி.எல் தொடரைக் கண்டுகளிக்க முடியும்.

``ஐபிஎல்-லின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை YuppTV பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஐபிஎல் போட்டியை, போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஒளிபரப்பவும், இதை வெவ்வேறான சாதனங்கள் மூலம் கண்டுகளிக்கவும் பல நடவடிக்கைகளை YuppTV செய்துள்ளது", என YuppTV-யின் நிறுவனர் மற்றும் CEO உதய் ரெட்டி தெரிவித்தார்.

கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் மார்ச் 23 முதல் தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, மிகவும் பரபரப்பான 60 ஆட்டங்களில் 8 அணிகள் மோதவுள்ளன. சுவாரஸ்யமான இந்தப் போட்டிகளை ஆஸ்திரேலியா, காண்டிநெண்டல் யூரோப், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தெற்கு & மத்திய அமெரிக்கா மற்றும் மத்திய & தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள மக்கள் கண்டுகளிக்க முடியும்.

https://www.yupptv.com/cricket/ipl-2019/live-streaming எனும் லிங்கின் மூலம் லாக் இன் செய்து, ஐ.பி.எல் தொடரை YuppTV சேவை வாயிலாக ஸ்மார்ட் ப்ளூ-ரே பிளேயர்ஸ், ஸ்ட்ரீமிங் மீடியா பிளேயர்ஸ், கேமிங் கன்சோல்ஸ், ஸ்மார்ட்போன்ஸ் மற்றும் டேப்ளட்ஸில் கண்டுகளிக்கலாம். 

Yupp TV பற்றி...

Yupp TV தெற்காசிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடிய இணையத்தை அடிப்படையாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சியாகும். 200-க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை 14 மொழிகளில் வழங்குகிறது. 

ஆசியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் எமரால்டு மீடியா நிறுவனம் Yupp TV-க்கு நிதி முதலீடு அளித்துள்ளது. இந்நிறுவனம், சர்வதேச முதலீட்டு நிறுவனமான KKR-இன் சிறுபான்மைப் பங்குகள் மூலம் செயல்படுகிறது. இந்நிறுவனம், மீடியா, பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் மீடியா நிறுவனங்களுக்கு முதலீட்டை வழங்குவதில் கவனம் செலுத்திவருகிறது. Yupp TV, அதன் முதல்கட்ட நிதித் திரட்டலை Poarch Creek Indian Tribe of Alabama மூலம் செய்தது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் இன்டர்நெட் பே டிவி-யாக விளங்குகிறது YuppTV. அதிகமாக தரவிறக்கப்பட்ட இந்திய ஸ்மார்ட் டிவி ஆப் YuppTV தான். 4.0 ரேட்டிங் கொண்ட இந்த ஆப், இதுவரை 13 மில்லியன் மொபைல் டவுன்லோடுகளைக் கண்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு https://www.yupptv.com

நீங்க எப்படி பீல் பண்றீங்க