உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இப்படிச் செய்யுங்க... | How to reduce body weight.

வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (27/03/2019)

கடைசி தொடர்பு:13:41 (28/03/2019)

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இப்படிச் செய்யுங்க...

பொதுவாக நம் நாட்டு பருவநிலைக்கு ஏற்ற, எளிமையாக செரிமானமாகும் உணவு வகைகளையும், காய் கனிகளையும் உண்ணுவதே சிறந்த 'டயட்' ஆகும். உங்களின் எடை ஆரோக்கியமானதா என அறிய உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index - BMI) எனப்படும் முறையைப் பயன்படுத்தலாம். கூகுள் BMI கால்குலேட்டரில் உங்களின் எடை மற்றும் உயரத்தைப் பதிவு செய்து, உங்களின் BMI எண்ணைக் கணக்கிடுங்கள். உங்களின் BMI 18.5-க்கு குறைவாக இருந்தால் எடை குறைவு என்றும், 25க்கு மேல் இருந்தால் எடை அதிகம் என்றும் அர்த்தமாகும்.

`கலோரி’ ஏன் முக்கியம்?

நாம் உண்ணும் உணவு தரும் சக்தியை 'கலோரி' எனும் அளவீட்டில் அளக்கின்றனர். உதாரணத்துக்கு, அரை லிட்டர் பாலில் 300 கலோரிகள் உள்ளன, ஒரு முட்டையில் 60 கலோரிகள், 1 கப் வடித்த சோறில் (160 கிராம்) 206 கலோரிகள்... ஆரோக்கியமான BMI கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், தனது உடல் எடையைப் பராமரிக்க சராசரியாக 2000 கலோரிகள் தேவைப்படுகிறது (குறிப்பு: ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த அளவு மாறுபடும், உங்களுக்குத் தேவையான கலோரியை அறிய தேர்ந்த டயட்டீஷியனை நாடவும்). இதில் 50 - 60% மாவுச்சத்து, 30 - 20% புரதம் மற்றும் 25 - 10% கொழுப்பு அடங்கியிருப்பது அவசியம்.

1 கிராம் புரதம் மற்றும் மாவுச்சத்தில், தலா 4 கலோரிகள்தான் உள்ளன, ஆனால் 1 கிராம் கொழுப்பில் 9 கலோரிகள் உள்ளன! உடல் எடையைக் குறைக்க டயட் இருப்பவர்கள், தங்களின் எடைக்குத் தகுந்தவாறு கலோரிகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும். எடை அதிகம் உள்ளவர்கள், சராசரி அளவைவிட 200 - 400 கலோரிகள் குறைவாக உண்ணலாம். கொழுப்பில் அதிக கலோரிகள் உள்ளதால், மிதமான அளவு மட்டுமே கொழுப்பை உண்ண வேண்டும். 

உங்களின் எடை ஏன் குறையவில்லை?

உடலுக்குத் தேவையான அளவைவிட அதிக கலோரிகள் உண்ணும்போது, உடல் எடை குறையாமல் அப்படியே இருக்கிறது. உடல் எடையைக் குறைப்பது என்பது, உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதே ஆகும். தேவையில்லாமல் டயட் என்கிற பெயரில் பட்டினி கிடப்பதாலும், சத்தில்லாத குறைந்த அளவு உணவு உண்ணுவதாலும் தேவையற்ற உடல் உபாதைகளும், சோர்வுமே ஏற்படும்... ஏற்கனவே உடலில் தேங்கியிருக்கும் கொழுப்போடு, நாம் உண்ணும் உணவிலிருந்தும் கொழுப்பை உடலுக்கு அனுப்பக்கூடாது, இதுவே டயட்டின் முதல் விதி!

கொழுப்பை முற்றிலுமாக தவிர்க்கலாமா?

நிச்சயமாகக் கூடாது! மனிதர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கொழுப்பு மிகவும் அவசியமான சத்து. உடலில் ஹார்மோன் உற்பத்திக்கு கொழுப்பு பேருதவியாய் விளங்குகிறது. கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் சீஸ், அதிக சர்க்கரை உள்ள உணவுகள், மது வகைகள், இவற்றைத் தவிர்ப்பது நலம்.

மரச் செக்கு எண்ணெய்

சமையலில் நாம் பயன்படுத்தும் எண்ணெய்யிலேயே நமக்கு வேண்டிய கொழுப்புச் சத்து கிடைக்கக்கூடும். இவற்றிலும், ரசாயனங்கள் பயன்படுத்தி சக்கையாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை உபயோகிப்பதைவிட பாரம்பர்ய முறையில் தயாராகும் மரச்செக்கு எண்ணெய்யை சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது’. இதனால் சமையலின் தரம், மணம் மற்றும் சுவை அதிகரிப்பதோடு, நம் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.

செக்கோ மரச்செக்கு எண்ணெய்

நமது பாரம்பர்யமான முறையைப் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய்களை 'செக்கோ' நிறுவனம் வழங்குகிறது. மரச்செக்கில் ஆட்டி எடுக்கப்படும்  'செக்கோ'  எண்ணெய், எந்தவொரு செயற்கை விஷயங்களும் கலக்காமல் சூரிய ஒளியில் நேரடியாக வடிகட்டி எடுக்கப்படுகிறது. இதனால் செக்கோ எண்ணெய் அடர்த்தி அதிகமானதாகவும், நல்ல கொழுப்புச் சத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், விளக்கெண்ணெய் வகைகளை செக்கோ விற்பனை செய்கிறது. பிளாஸ்டிக் பயன்படுத்தாமல், உலோக கேன்களில் எண்ணெய்யை வழங்குவதால், அதன் தரம் மேன்மேலும் உயர்ந்திருக்கிறது. சமையலின் சுவை மாறாமல், சுவையைக் கூட்டி உடலுக்கு வலு சேர்க்கும் மரச்செக்கு எண்ணெய்யை உபயோகித்து, உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வோம்!

மேலும் விவரங்களுக்கு: +91 9176 679 154 / contact@agaramfoods.com

விவரங்களைப் பெற

நீங்க எப்படி பீல் பண்றீங்க