`எல்லாமே எடிட்டிங் சார்!' இன்ஸ்டாவில் மட்டும் பணக்காரனாக வாழ்ந்து காட்டிய ஜாலி இளைஞர் | Youngman who used editing images in Instagram and cheating his followers

வெளியிடப்பட்ட நேரம்: 21:52 (29/03/2019)

கடைசி தொடர்பு:21:52 (29/03/2019)

`எல்லாமே எடிட்டிங் சார்!' இன்ஸ்டாவில் மட்டும் பணக்காரனாக வாழ்ந்து காட்டிய ஜாலி இளைஞர்

நம் வாழ்வின் அங்கமாகவே சமூக வலைதளங்கள் மாறிவருகின்றன. நம் வாழ்வில் நடைபெறும் அத்தனை நிகழ்வுகளையும் முன்பின் தெரியாத புதியவர்கள் வரை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன இந்த சமூக வலைதளங்கள். இதில் பிறரின் புகைப்படங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்களே அதிகம். இதேபோல ஒரு சுவாரஸ்ய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

ஓர் இளைஞன் தன்னை கோடீஸ்வரனாக காட்டிக்கொண்டு பொய்யான ஒரு வாழ்க்கையை சமூக வலைதளங்களின் மூலம் வாழ்ந்து வந்திருக்கிறான். அதுவும் மிக எளிமையாக! எவ்வாறு இது சாத்தியமானது என்பது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். லண்டனைச் சேர்ந்த பைரன் டென்டன் எனும் சிறுவன் tbhbyron என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறான். ஒரு வார காலமாக எடிட் செய்த புகைப்படங்களை பதிவிட்டு தன்னுடைய பாலோயர்களை ஜாலியாக ஏமாற்றியிருக்கிறார் இவர். ஒரு தனி பிரைவேட் ஜெட்டில் சென்றுகொண்டிருப்பதாக அந்தச் சிறுவன் பகிர்ந்த புகைப்படம் 7 விநாடிகளில் 7,000 லைக்ஸ் அள்ளியிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் இளைஞர்

பிராண்டட் நிறுவனங்களின் ஆடைகளை அணிந்து அந்த சிறுவன் பகிர்ந்த பல புகைப்படங்கள், எடிட் செய்யப்பட்டவை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இப்படி எடிட் செய்வதற்கு ஃபேஸ் டியூன், பிக்ஸ் ஆர்ட் போன்ற பல ஆப்புகளை பயன்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்களை `உண்மை’ என நம்பி அவரைப் பின்தொடர்ந்து வந்த பலர், அவர் உண்மையிலேயே பணக்காரர் என நம்பியிருக்கின்றனர். அதன் காரணமாக அவர் பகிரும் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸும், கமென்ட்ஸும் வந்திருக்கின்றன.

எடிட் செய்த போட்டோ

``நான் பிராண்டட் பொருள்களுக்கும் மற்ற பொருள்களுக்கும் மக்கள் கொடுக்கும் வரவேற்பை அறிய நினைத்து இதைச் செய்தேன். ஏற்கெனவே நான் பழைய டீ- சர்ட் உடன் எடுத்த புகைப்படத்துக்கு 2000 லைக்ஸும் 40 பின்னூட்டங்களும் வந்திருந்தன. ஆனால், அதே புகைப்படத்தை நான் எடிட் செய்து பிராண்டாக மாற்றிப் பகிர்ந்தபோது அது 12,000 லைக்ஸைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. பிராண்டட் டீசர்ட் உடன் நான் பகிர்ந்த புகைப்படங்கள் எனக்குப் பத்தாயிரம் லைக்குகளை அதிகமாக பெற்றுத் தந்திருக்கின்றன. இதன் மூலம் மக்களின் வரவேற்பு எதில் இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது” என்று கூலாகச் சொல்கிறார் பைரன். 

சமூக வலைதளங்களில் பகிரப்படும் அனைத்து புகைப்படங்களும் உண்மையாகவே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதை உணர்த்தும் விதமாக பைரன் எடிட் செய்து பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன.