எர்த் ஹவர்... இன்று இரவு ஒரு மணி நேரம் விளக்குகள் அணைக்க வேண்டுகோள்! | today earth hour

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (30/03/2019)

கடைசி தொடர்பு:18:00 (30/03/2019)

எர்த் ஹவர்... இன்று இரவு ஒரு மணி நேரம் விளக்குகள் அணைக்க வேண்டுகோள்!

லக இயற்கை நிதியம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை `எர்த் ஹவர்' எனப்படும் பூமி நேரம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று அந்த நிகழ்வு நடக்கிறது. 

power

வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள மின்விளக்குகளையும் அங்கிருக்கும் மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படும் அனைத்துலக நிகழ்வே `எர்த் ஹவர்' (Earth Hour) எனப்படும் பூமி நேரம் ஆகும். உலக இயற்கை நிதியம் சார்பில் 2007-ம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

பூமியின் வெப்பநிலை மாற்றத்தை அனைவருக்கும் உணர்த்துவதுடன் மின் சேமிப்பை ஊக்குவிப்பது, கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது, ஒளி மாசடைவதைக் குறைப்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் உலகம் முழுவதும் நடத்தப்படும் இந்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற உள்ளது. 

electricity


இதன்படி பல இடங்களில் விளக்குகள் அணைத்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகள் கலந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் 27 லட்சம் மின் நுகர்வோர் மின் இணைப்பைத் துண்டித்து இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு தரப்போவதாக மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனவே, இன்று இரவு ஒரு மணி நேரம் அனைவரும் மின் இணைப்பைத் துண்டித்து ஒத்துழைக்குமாறு உலக இயற்கை நிதிய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.