ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ் அறிமுகம்... என்ன ஸ்பெஷல் இந்த மாடலில்? | Royal Enfield Launches Trials Works Replica, Pays Homage to 1948 Trials

வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (31/03/2019)

கடைசி தொடர்பு:20:04 (31/03/2019)

ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ் அறிமுகம்... என்ன ஸ்பெஷல் இந்த மாடலில்?

ட்ரையல்ஸ் சீரிஸ் பைக்கின் ஆஃப் ரோடு பொசிஷனிங்கை மனதில் வைத்து, முன்பக்க மற்றும் ஃபின்பக்க ஃபெண்டர்கள் சிறிதாகியுள்ளன. ஹேண்டில்பாரின் உயரம் அதிகரித்துள்ளது.

நீண்ட நாள்களாக இதன் ஸ்பை படங்கள் இணைய உலகில் வைரலாகப் பரவி வந்த நிலையில், தனது ட்ரையல்ஸ் சீரிஸ் பைக்குகளைத் தடாலடியாக அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு. முறையே 1.62 லட்சம் (Trials Works Replica 350) மற்றும் 2.07 லட்சம் (Trials Works Replica 500) இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைக்கு இவற்றை வாங்கலாம். காலம்சென்ற 1948-ம் ஆண்டு ட்ரையல்ஸ் சீரிஸ் பைக்குகளை நினைவுகூரும் விதமாகவே, புல்லட் பேட்ஜுடன் இவை வெளிவந்துள்ளன. இதில் மற்ற புல்லட் பைக்குகளில் இருக்கும் அதே கார்புரேட்டர் உடனான 346சிசி/ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் உடனான 499சிசி Pushrod இன்ஜின்கள் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே பொருத்தப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு

எனவே இது வெளிப்படுத்தும் 20bhp - 2.8kgm டார்க்/27.5bhp - 4.13kgm டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றமுமில்லை. க்ளாஸிக் 350/500 பைக்கைவிட ட்ரையல்ஸ் சீரிஸின் விலை 6-9 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகம். UK பைக் சந்தையில் ட்ரையல்ஸ் EFi எனும் பெயரில், இதேபோன்ற டிசைனுடன் கூடிய பைக்கை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்தது என்றாலும், அது விற்பனையில் பெரிதாக சாதிக்கவில்லை. 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க், பக்கவாட்டுப் பாடி பேனல்கள், ஹாலோஜன் ஹெட்லைட், ஸ்விட்ச்கள், க்ரோம் ரியர் வியூ மிரர்கள், டிஸ்க் பிரேக்ஸ்,  Spring Loaded சிங்கிள் பீஸ் சீட், அனலாக் ஸ்பீடோமீட்டர் ஆகியவையும் புல்லட் க்ளாஸிக் பைக்குகளில் இருந்தே பெறப்பட்டுள்ளன.

Trials Works Replica

ஆனால் ட்ரையல்ஸ் சீரிஸ் பைக்கின் ஆஃப் ரோடு பொசிஷனிங்கை மனதில்வைத்து, முன்பக்க மற்றும் ஃபின்பக்க ஃபெண்டர்கள் சிறிதாகியுள்ளன. ஹேண்டில்பாரின் உயரம் அதிகரித்துள்ளதுடன், அதில் Enduro பைக்குகளைப் போலவே Cross-Brace இணைக்கப்பட்டுள்ளது. டெயில் லைட் மற்றும் இண்டிகேட்டர்கள், இன்டர்செப்டர் 650 பைக்கில் இருப்பவைதான்! ட்ரையல்ஸ் 350 பைக்கின் ஃப்ரேம் சிவப்பு நிறத்தில் இருப்பதுடன், ட்ரையல்ஸ் 500 பைக்கின் ஃப்ரேம் பச்சை நிறத்தில் உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு என்பதுடன், பின்பக்க சீட்டுக்குப் பதிலாக Luggage Rack வழங்கப்பட்டிருக்கிறது.  

ட்ரையல்ஸ் சீரிஸ்

மற்ற புல்லட் பைக்குகளைப் போலவே இதன் டயர் சைஸ் மற்றும் ஸ்போக் வீல்கள் அமைந்திருக்கிறது என்றாலும், சியட் நிறுவனத்தின் Pro Gripp டயர்கள் (முன்: 90/90-19, பின்: 110/80-18) பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டுமே சில்வர் நிறத்தில் மட்டுமே கிடைக்கின்றன என்றாலும், ட்ரையல்ஸ் 500 பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் கூடுதலாக க்ரோம் ஃப்னிஷ் இருக்கிறது. தவிர இவற்றுக்கு எனப் பிரத்யேகமாக ஆக்ஸசரீஸ்களும் (Headlight Lens Protector, Cross-Brace Padding, Engine Guard, Bash Plate, Plate with Race Number) இருப்பதாகத் தெரிகிறது. 350சிசி மாடலின் எடை 187 கிலோ என்றால், 500சிசி மாடலின் எடை 192 கிலோ.

Royal Enfield

தவிர எக்ஸாஸ்ட் பைப் மேல்நோக்கி வைக்கப்பட்டிருப்பது, ஆஃப் ரோடிங்கின் போது உதவும். முன்பக்க ஃபோர்க்கில் Rubber Gaiters இடம்பெற்றுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ட்ரையல்ஸ் சீரிஸ் பைக்குக்குப் போட்டியில்லை என்றாலும், புல்லட் க்ளாஸிக் சீரிஸ் மற்றும் ஹிமாலயன் பைக்குக்கு இடையே ட்ரையல்ஸ் சீரிஸ் பொசிஷன் ஆகியிருக்கிறது. இதன் Factory Custom பாணியிலான தோற்றம் மற்றும் ஒற்றை டிரைவர் சீட், சிலருக்குப் பிடிக்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்