`ஷியோமியின் ஸ்மார்ட் குக்கர்' - மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது | xiaomi launch soon smart Cooker in inida

வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (01/04/2019)

கடைசி தொடர்பு:20:55 (01/04/2019)

`ஷியோமியின் ஸ்மார்ட் குக்கர்' - மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

ஷியோமி

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷியோமி பல இந்தியச் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து சில வீட்டு உபயோகப் பொருள்களையும் விற்பனை செய்து வருகிறது. ஆனால், இவை பெரும்பாலும் சீனாவில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரம் அண்மைக் காலமாக படிப்படியாக இந்தியாவிலும் சில வீட்டு உபயோகப் பொருள்களை ஷியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக டிவி, காற்றைச் சுத்தப்படுத்தும் ஏர் ஃபில்ட்டர் போன்றவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் புதிதாக ஸ்மார்ட் குக்கர் வகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஷியோமி திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் வெளியிட்டுள்ளார்.

Mijia ஸ்மார்ட் குக்கர்

அதன்படி Mijia ஸ்மார்ட் குக்கர் ஒன்றும் மற்றும் இண்டக்ஷன் குக்கரில் இரண்டு வேரியன்ட்கள் என மொத்தம் மூன்று குக்கர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இவை ஏற்கெனவே சீனாவில் விற்பனையில் இருப்பவை அதோடு மட்டுமன்றி பெரிய அளவில் விற்பனையாகுபவை. இதில் ஸ்மார்ட் குக்கர் இந்திய ரூபாய் மதிப்பில் 6000 ரூபாய்க்கும், இண்டக்ஷன் குக்கர் 2,000 ரூபாய்க்கும் சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே, அதே விலையில் இங்கும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது