Published:Updated:

ஒன்றிணைந்த மூன்று வங்கிகள்!

ஒன்றிணைந்த மூன்று வங்கிகள்!
ஒன்றிணைந்த மூன்று வங்கிகள்!

பேங்க் ஆஃப் பரோடா, விஜயா மற்றும் தேனா வங்கிகள் இனி ஒன்றாக செயல்படும்... 

பொதுத்துறை வங்கிகளை முன்னேற்றும் அரசின் நடவடிக்கைகளின் பகுதியாக, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி (Dena Bank)-களை, பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைக்கும் ஒப்பந்தத்துக்கு நடுவணரசு இவ்வருடம் ஜனவரி 2ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒருங்கிணைப்பு ஏப்ரல் 1, 2019 முதல் அமலுக்கு வருகிறது.

ஒன்றிணைந்த மூன்று வங்கிகள்!

"இந்த ஒருங்கிணைப்பு மூலம், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாகவும், மூன்றாவது பெரிய நிதியளிக்கும் நிறுவனமாகவும் பேங்க் ஆஃப் பரோடா உயர்ந்துள்ளது. மூன்று வங்கியின் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பார்ட்னர்கள் மற்றும் வங்கியின் வளர்ச்சியில் சம்பத்தப்பட்ட அனைவருக்கும் இந்த ஒருங்கிணைப்பு பயனளிப்பதாக அமையும். இச்செயல்பாடு  இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட உதவும். மூன்று வங்கிகளும் இணைந்துள்ளதால், இவ்வங்கிகளின் ஊழியர்களுக்கு இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது, மேலும் இந்நடவடிக்கை அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தையே  வழங்கும்", என பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பி.எஸ். ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பேங்க் ஆஃப் பரோடா 9500+ கிளைகளையும், 85000+ ஊழியர்களையும், 12 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும் கொண்ட மிகப்பெரும் வங்கியாக உருவெடுத்துள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட இவ்வங்கிகளின் சொத்து மதிப்பு ரூ. 10 லட்சம் கோடியாகவும், வைப்பு நிதி ரூ. 8.75 லட்சம் கோடியாகவும், கடன் மதிப்பு ரூ. 6.25 கோடியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் ஒருங்கிணைப்பு - நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை!

பேங்க் ஆஃப் பரோடா, விஜயா மற்றும் தேனா வங்கிகள் ஒருங்கிணைந்துள்ளதால், இவ்வங்கிகளின் தனிப்பட்ட சிறப்பான செயல்பாடுகளை ஒருங்கிணைந்த பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் வாயிலாக எதிர்பார்க்கலாம்.

ஒன்றிணைந்த மூன்று வங்கிகள்!

ஒருங்கிணைப்புக்குப் பின்னரும், வழக்கம்போல விஜயா & தேனா வங்கி கணக்குதாரர்கள் தொடர்ந்து தங்களின் வங்கிக் கிளைகளில் பரிவர்த்தனைகளைச் செய்யலாம். தற்போதைய வங்கிக் கணக்கு, பாஸ் புக், செக் புக், IFSC & MICR கோட்கள், ஏடிஎம் கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஏப்ரல் 2019 முடிவிற்குள், பணம் போடுதல், எடுத்தல், குறிப்பிட்ட அளவிலான பணப் பரிவர்த்தனை, பேலன்ஸ் என்கொயரி, ஸ்டாப் பேமெண்ட் ஆர்டர் மற்றும் ஸ்டேட்மென்ட், ஆகிய வசதிகளை ஒருங்கிணைக்கப்பட்ட பேங்க் ஆஃப் பரோடா வங்கி வாயிலாக பெறமுடியும். இம்மூன்றில் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் பிற இரு வங்கியின் ஏடிஎம்களில், இனிக் கட்டணம் ஏதுமின்றி பணம் எடுக்கமுடியும்!

மூன்று வங்கிக் கிளைகளில் இனி எங்கிருந்தும், வாடிக்கையாளர்கள் தாம் விரும்பிய சேவையைப்  பெறும்  வகையில், ஐ.டி. சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது, இதற்கு 12 முதல் 18 மாத காலம் ஆகலாம் என பேங்க் ஆஃப் பரோடா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுவரை தத்தம் வங்கிக் கிளைகளில் வழக்கமான சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். சில முக்கிய சேவைகளை மட்டும் ஆரம்பத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பெறமுடியும், இதனை மூன்றில் எந்த வங்கியில் இருந்தும் பெறலாம்!

www.bankofbaroda.com/amalgamation.htm எனும் தளத்தில் வாடிக்கையாளர்களின் பல கேள்விகளுக்கு  விடையளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வாடிக்கையாளர்களை பல வழிகளில் தொடர்புகொண்டு ஒருங்கிணைப்பு குறித்த செய்தியைத் தெரிவிக்க ஒருங்கிணைக்கப்பட்ட வங்கி நிர்வாகம் ஏற்uபாடு செய்துள்ளது.