இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... MG Hector-ல் என்ன ஸ்பெஷல்?! | MG Hector iSmart Infotainment System - What's Special?

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (04/04/2019)

கடைசி தொடர்பு:18:45 (04/04/2019)

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்... MG Hector-ல் என்ன ஸ்பெஷல்?!

காரின் கதவுகள் மற்றும் டெயில்கேட்டை லாக்/அன்லாக் செய்ய, காரை ஸ்டார்ட் செய்து ஏசி ஆன் செய்ய, சர்வீஸ் கெடுவை நினைவுபடுத்த எனப் பயங்கர யூஸர் ஃப்ரெண்ட்லியான அம்சங்கள் இதில் இருக்கின்றன.

மார்வெல்லின் `டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' படப்புகழ் Benedict cumberbatch, MG ஹெக்டர் எஸ்யூவி-யின் விளம்பரத்தில் வந்தது ஒருபுறம் ஆச்சர்யமான விஷயமாக இருந்தாலும், மறுபுறத்தில் `It's a Human Thing - Arriving This Summer' என்ற டேக்லைன், பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. மோரிஸ் Garages நிறுவனத்தின் இந்திய வருகை ட்ரெண்டாகியிருக்கும் சூழ்நிலையில், காரின் கனெக்ட்டிவிட்டி குறித்து இந்த நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் சிலநாள்களாகப் பேசிக்கொண்டிருந்தது.

MG Hector

`இன்டர்நெட் ஆன் கார்ஸ்' என்பது உலக அளவில் ஏற்கெனவே இருந்தாலும், இந்தியாவுக்கு இது புதிதுதான். எனவே, மோரிஸ் Garages டெல்லியில் நடத்திய டிரைவ்-இன் நிகழ்ச்சிக்கு, மிகுந்த எதிர்பார்ப்புடனே சென்றிருந்தேன். iSmart தொழில்நுட்பத்துடன்கூடிய ஹெக்டரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இருக்கும் வசதிகள் என்னென்ன? 

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

*MG ஹெக்டரின் கனெக்ட்டிவிட்டி அம்சங்களில் மிகமுக்கியமானது, வாய்ஸ் அசிஸ்ட்தான். சர்வதேச அளவில் பிரபலமான Nuance நிறுவனம் தயாரித்திருக்கும் இது, இந்தியர்கள் பேசும் விதத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், செயற்கை நுண்ணறிவு மற்றும் Natural Language Understanding Learning இருப்பதால், காலத்துக்கு ஏற்ப இது தன்னை தகவமைத்துக்கொள்ளும். `Hello MG' என்பதன் மூலமாக ஹெக்டரின் வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம் ஆன் ஆகிவிடும்.

வாய்ஸ் அசிஸ்ட்

கிட்டத்தட்ட 100 செயல்பாடுகள், இதன் வாயிலாகச் செய்யலாம் என்பது ப்ளஸ். அதாவது, காரின் கதவுக் கண்ணாடி மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றைத் திறந்துமூடுவது, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி செட்டிங், சாட்டிலைட் நேவிகேஷன் ஆகியவை இதற்கான உதாரணங்கள். மிகவும் சுமாரான நெட்வொர்க்கொண்ட பகுதியிலும் இது சிறப்பாகப் பணிபுரியும் என்பது பெரிய ப்ளஸ்.

5G Ready

*ஹெக்டரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் Machine to Machine-னுடனான ஏர்டெல் சிம் கார்டு உள்ளதுடன், Internet Protocol Version 6 (IPv6) இணைக்கப்பட்டுள்ளது. எனவே, 5G தொழில்நுட்பத்துக்கு இது ஏற்றது என்பதுடன், நமது ஸ்மார்ட்ஃபோன் போல இதன் இயங்கு தளத்தை Over-The-Air (OTA) முறையில் அப்டேட் செய்துகொள்ளலாம். மற்ற கார்களைப்போல, இதற்காக சர்வீஸ் சென்டர் வரவேண்டாம் என்கிறது மோரிஸ் Garages. மேலும், உலக அளவில் சாட்டிலைட் நேவிகேஷனுக்குப் பெயர்பெற்ற TomTom நிறுவனத்தின் IQ Maps நேவிகேஷன், வானிலை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள AccuWeather, பயணத்தின்போது பாடல்களைக் கேட்க, ப்ரீமியம் அக்கவுன்ட் உடனான Gaana என அசத்துகிறது ஹெக்டர். 

OTA Update

*இந்த காருக்கெனப் பிரத்யேகமாக iSmart எனும் அப்ளிகேஷனைக் களமிறக்கியுள்ளது MG. இதை ஸ்மார்ட்ஃபோனில் வைத்துக்கொண்டால் காரின் இருப்பிடம், டயர் பிரெஷர் (TPMS), Geo-Fencing போன்ற பல தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இதனுடன், காரின் கதவுகள் மற்றும் டெயில்கேட்டை லாக்/அன்லாக் செய்ய, காரை ஸ்டார்ட் செய்து ஏசி ஆன் செய்ய, சர்வீஸ் கெடுவை நினைவுபடுத்த எனப் பயங்கர யூஸர் ஃப்ரெண்ட்லியான அம்சங்கள் இதில் இருக்கின்றன. தவிர, eCall எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சிஸ்டம் வாயிலாக, விபத்துகால சேவைகள் கிடைக்கும்.

Emergency call

அதாவது, விபத்தின்போது காரின் காற்றுப்பைகள் வெளியே வந்துவிட்டால், PulseHub எனும் MG-யின் வாடிக்கையாளர் Management சென்டர் பிரிவுக்குத் தகவல் போய்விடும். பிறகு, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்களுக்கு மெசேஜ் சென்றுவிடும். இடையே, காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படும். அதற்கு, காருக்குள்ளே இருப்பவர்கள் பதிலளிக்காவிட்டால், அவசர எண்ணுக்கு அழைப்பு செல்லும். ஆம்புலன்ஸ், போலீஸ் போன்ற அவசரகால உதவிகள் கிடைக்கவும் வழிவகை செய்யப்படும்.

Service Schedule

*இந்த எஸ்யூவி-யைத் தயாரித்த நிறுவனம், அதன் டீலர்கள் - சர்வீஸ் சென்டர்கள் - வாடிக்கையாளர்கள் தொடர்பான விவரங்கள், MG-யின் Magnet Dealer Management System-ல் (Magnet DMS) பதிவுசெய்யப்படும். இதனால், வாடிக்கையாளர்களைப் பற்றி எளிதாகத் தெரிந்துகொள்ள முடிவதுடன், காருக்கான விற்பனை மற்றும் பராமரிப்புகுறித்த சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என மோரிஸ் Garages தெரிவித்துள்ளது. ஹெக்டரின் 10.4 இன்ச் Full HD டச் ஸ்க்ரீன் சிஸ்டம், போட்டி கார்களைவிடப் பெரியது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

TPMS

இதில் முன்னே சொன்னவை தவிர, 360 டிகிரி கேமரா, Harman Infinity ஆடியோ சிஸ்டம் ஆகிய வசதிகளும் உள்ளன. `Find My Car’ வசதி வேறு இருப்பதால், ஷாப்பிங் மால் போன்ற பெரிய இடங்களில் காரை நிறுத்தியிருந்தாலும், அதன் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்வது சுலபம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, `India's First Internet Car' என்ற வார்த்தைக்கு முழு நியாயம் சேர்த்திருக்கிறது MG ஹெக்டர்.

Morris Garages

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்