"என் குழந்தைய இழந்துடுவேனோனு பயமா இருக்கும்மா" - பரிதவிக்கும் தாய்!  | help 2 year to fight against leukemia

வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (04/04/2019)

கடைசி தொடர்பு:21:25 (04/04/2019)

"என் குழந்தைய இழந்துடுவேனோனு பயமா இருக்கும்மா" - பரிதவிக்கும் தாய்! 

குழந்தையைப் பெற்றெடுத்து, வளர்த்து, ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவந்து, அதன் வளர்ச்சியைப் பார்ப்பதில்தான் பெற்றோரின் பேரின்பம் அடங்கியிருக்கிறது. ஆனால் எங்கே நமக்கு முன் தனது குழந்தையை இழந்துவிடுவோமோ என்று ஒவ்வொரு நிமிடமும் நெஞ்சு பதைபதைக்க வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர் பர்னாவின் பெற்றோர். 

பர்னா பிறந்த பின்பு துப்புரவு பணியாளரான தந்தை சுகுமார் பர்மனுக்கு சம்பள உயர்வு கிடைத்தது. இதனால் பர்னா அவர்களின் அதிர்ஷ்டமாகத் திகழ்ந்தாள். பிறக்கும்போது ஒரு குறையுமில்லாமல் பிறந்த பர்னாவின் உடல் எடை எளிதில் கூடுவதாகத் தெரியவில்லை. இதனிடையே, பர்னாவின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு பிரச்னைகள் ஆரம்பமானது. உணவு உண்ணக்கூட பர்னா போராடவேண்டியிருந்தது. தனது காலால் ஒரு நிமிடத்திற்கு மேல் அவளால் நிற்க முடியாத சூழ்நிலை உருவானது. 

ஒருநாள் மாலை பர்னாவை சமாதானப்படுத்த முயன்ற அவளது தாய், தனது பெண்ணின் உடல் வெளிரிப்போய்இருப்பதைக் கண்டு அதிர்ந்து, மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். அங்கு பர்னா, இரத்த சோதனைக்காக உட்படுத்தப்பட்டாள். பரிசோதனை முடிவை வாங்கச் சென்றவர்களின் இதயம் சுக்குநூறானது. பர்னா புற்றுநோயால் அவதிப்படுவதாக மருத்துவர் தெரிவித்தார். சென்னைக்குச் சென்று பர்னாவுக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறியதால், நகையை விற்றும், கடன் பெற்றும் சென்னைக்கு வந்துசேர்ந்தனர். 

2 வயதாகும் பர்னா, பி செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுக்கேமியா (B cell Acute Lymphoblastic Leukaemia) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 7-9 மாதங்கள் பராமரிப்பு தெரப்பி சிகிச்சை பெற வேண்டும். அதன் பின் Allogeneic எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றனர் மருத்துவர்கள். பர்னாவின் தந்தை தனது எலும்பு மஜ்ஜையை தானம் செய்யத் தயாராக இருக்கிறார். சென்னையில் சிகிச்சை எடுத்துக்கொண்டுவருகிறாள் பர்னா. இதனால் சொந்த ஊரில் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு, சென்னையில் சாலையோரம் ஒரு சிறிய கடை வைத்து நடத்திவருகிறார் பர்னாவின் தந்தை. 

அந்த சிறிய கடையில் வரும் வருமானம் எல்லாம் பர்னாவின் சிகிச்சைக்கு எள்ளளவும் போதாது. பர்னாவின் சிகிச்சைக்கு ரூ. 20 லட்சம் தேவையாக இருக்கிறது. "பர்னாவுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று கனவில்கூட நினைத்தது கிடையாது. எங்களிடம் இதற்குமேல் விற்க நகையும் இல்லை, சேமிப்புமில்லை. எங்கே, பணம் இல்லாமல் அவளை இழந்துவிடுவோமோ என்று எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அவளுடன் வீடு திரும்ப வேண்டும், வலிமையுடன் அவள் நடக்க வேண்டுமென்று மனம் விரும்புகிறது", என்கிறார் பர்னாவின் தாய் அழுகுரலுடன்.

நிதி திரட்டும் இணையதளமான 'Ketto'-வுடன் இணைந்து பர்னாவுக்கு நீங்கள் உதவி செய்ய நினைத்தால் இந்த லிங்கிற்குச் https://www.ketto.org/stories/helpbarna?utm_campaign=helpbarna&utm_medium=position_1&utm_source=external_vikatan  சென்று உதவலாம். உங்களது சிறு உதவி பர்னாவுக்கு கிடைக்கும் பேருதவி! பர்னாவை மீட்க தானம் செய்வோம்... மற்றவர்களையும் தானம் செய்ய அழைப்போம்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர், வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க