Published:Updated:

மதுரை-கச்சேகூடா வாராந்திர விரைவு ரயில் சேவை நாளை தொடக்கம்

Vikatan Correspondent
மதுரை-கச்சேகூடா வாராந்திர விரைவு ரயில் சேவை நாளை தொடக்கம்
மதுரை-கச்சேகூடா வாராந்திர விரைவு ரயில் சேவை நாளை தொடக்கம்

மதுரை: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மதுரை-கச்சேகூடா ரயிலின் தொடக்க விழா நாளை மதுரையில் நடக்கிறது.

மதுரையிலிலிருந்து ஆந்திர மாநிலம், கச்சேகூடாவுக்கு புதியதாக வாராந்திர ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நாளை மதுரையில் தொடங்கப்படுகிறது. இந்த ரயில் நாளை மதியம் 12.00 மணிக்கு மதுரை வருகிறது. மீண்டும் இங்கிருந்து 2.30 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

##~~##
கச்சேகூடா - மதுரை விரைவு ரயிலின் நிரந்தர சேவை ஜுன் மாதம் 1ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 6.05 மணிக்கு கச்சேகூடாவிலிருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7.00 மணிக்கு மதுரையை வந்தடைகிறது. மீண்டும், அன்று மதியம் 12.50 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.05 மணிக்கு கச்சேகூடாவுக்கு சென்றடையும்.
நாளை இயக்கப்படும் முதல் ரயிலுக்கான பயணச்சீட்டின் முன்பதிவு தற்பொழுது நடந்து வருகிறது. ஜுன் 1ஆம் தேதி முதல் இயங்கும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
இந்த ரயில், மதுரையிலிருந்து, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, சித்தூர், பாகாலா, பில்லர், மதனபள்ளி சாலை, தர்மாவரம், அனந்தபூர், டோனே, கர்னூன்டவுன், மகபூப்நகர் வழியாக கச்சேகூடாவை சென்றடைகிறது.