டெஸ்ட்டிங்கில் புதிய தார்... என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறது மஹிந்திரா? | All New Thar Spotted Testing... What Can We Expect From Mahindra?

வெளியிடப்பட்ட நேரம்: 08:29 (08/04/2019)

கடைசி தொடர்பு:08:29 (08/04/2019)

டெஸ்ட்டிங்கில் புதிய தார்... என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறது மஹிந்திரா?

முழுக்க அலுமினியத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய இன்ஜின், 140bhp பவர் - 30kgm டார்க்கை வெளிப்படுத்தும். இதனால் ஆஃப் ரோடிங் தவிர நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ற பவரை புதிய தார் கொண்டிருக்கும்.

இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகமான தார் ஜீப் (2015-ல் பேஸ்லிஃப்ட்), ஆஃப் ரோடு ஆர்வலர்களுக்குத் தீனியாக அமைந்திருப்பது தெரிந்ததே. இந்நிலையில் அடுத்த தலைமுறை மாடலைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா, அதை அடுத்த ஆண்டில் விற்பனைக்குக் கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இதை டெஸ்ட்டிங்கில் இருக்கும்போது படம்பிடித்திருக்கிறார், மோ.வி வாசகரான சாரு க்ரிஷ்.

2019-ம் ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் அமலுக்கு வரப்போகும் புதிய விதிகளுக்கு ஏற்ப தற்போதைய தார் மேம்படுத்தப்பட மாட்டாது. எனவே, அதன் உற்பத்தி மற்று விற்பனை நிறுத்தப்படலாம். இதில் BS-6 மாசு விதிகளுக்குட்பட்ட 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்படும்.

தார்

தற்போதைய மாடலில் இருக்கும் 2.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் - 4WD கூட்டணி, 105bhp பவர் - 24.7kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. முழுக்க அலுமினியத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய இன்ஜின், 140bhp பவர் - 30kgm டார்க்கை வெளிப்படுத்தும். இதனால் ஆஃப் ரோடிங் தவிர, நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ற பவரை புதிய தார்கொண்டிருக்கும். இதே டர்போ டீசல் இன்ஜின், 185bhp பவரைப் புதிய XUV500 எஸ்யூவி-யில் தரும் எனத் தகவல் வந்துள்ளது. இந்த மாற்றங்களால், ஃபோர்ஸ் கூர்க்காவுக்குச் சவால்விடும்படியான பர்ஃபாமன்ஸை, மஹிந்திராவின் புதிய தார் வழங்கலாம். ஆன் ரோடுக்கு ஏற்றபடியான புதிய முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் அகலமான Track காரணமாக, பவர் மட்டுமல்லாமல் ஓட்டுதல் மற்றும் சொகுசிலும் இந்த ஆஃப் ரோடர் பெரிய முன்னேற்றங்களைக்கொண்டிருக்கும். 

மஹிந்திரா

அதேபோல புதிய தாரின் தோற்றத்திலும் மாற்றம் இருக்கும் என்றாலும், அது காரின் அடையாளத்தை மாற்றாமல் மாடர்ன் அம்சங்களுடன்கூடிய டிசைனாக இருக்கும். இதற்காக தனது டிசைன் அணியுடன் பினின்ஃபரினா மற்றும் ஸாங்யாங் உடனும் இணைந்து பணியாற்ற இருக்கிறது மஹிந்திரா. எனவே, இந்திய கார் சந்தைக்கு மட்டுமல்லாது, சர்வதேச கார் சந்தைகளுக்கும் ஏற்றபடி புதிய தார் வடிவமைக்கப்படும். ஸ்கார்ப்பியோ மற்றும் TUV 3OO ஆகிய எஸ்யூவிகள் தயாரிக்கப்படும் Gen 3 Modular லேடர் சேஸியில், புதிய தார் கட்டமைக்கப்பட இருக்கிறது. இதனால் அந்த கார்களைப்போலவே, இதுவும் க்ராஷ் டெஸ்ட்டுக்கு ஏற்றபடியான கட்டுமானத்தைக்கொண்டிருக்கும்.

டீசல் எஸ்யூவி

தவிர இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரி-மைண்டர், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் போன்றவை கட்டாயப்படுத்தப்படும். தற்போதைய மாடலின் சேஸியைவிட புதிய மாடலின் சேஸி 10% குறைவான Wheel Articulation கொண்டிருப்பதால், புதிய தார் தனது ஆஃப் ரோடிங் திறனில் கொஞ்சம் சமரசம் செய்யவேண்டியிருக்கும். முன்னே சொன்ன தொழில்நுட்ப மேம்பாடுகள் அதற்கான காரணியாகும்.

கேபினைப் பொறுத்தவரை, தற்போதைய மாடலைவிட தரமான மெட்டீரியல்கள் பயன்படுத்தப்படும். மேலும், டச் ஸ்க்ரீன் போன்ற லேட்டஸ்ட் அம்சங்களும் அதில் இடம்பெற்றிருக்கும். தற்போதைய தார் எஸ்யூவி-யைவிட புதிய மாடல், அதிக நீளம் மற்றும் அகலத்தைக்கொண்டிருக்கும் என்பதால், முன்பைவிட அதிக இடவசதி கிடைக்கலாம். ஆனால், தற்போதைய மாடலைவிட புதிய மாடலின் விலை, நிச்சயம் அதிகமாகவே இருக்கும். 

ஆஃப் ரோடர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்