ஸ்லீவ் முதல் மெட்டீரியல் வரை... மெல்லிய உடலமைப்புக்கு ஏற்ற சரியான ஆடைகள்! | From sleeves to materials tips to groom for slim body types

வெளியிடப்பட்ட நேரம்: 00:27 (09/04/2019)

கடைசி தொடர்பு:10:52 (09/04/2019)

ஸ்லீவ் முதல் மெட்டீரியல் வரை... மெல்லிய உடலமைப்புக்கு ஏற்ற சரியான ஆடைகள்!

ஸ்லீவ் முதல் மெட்டீரியல் வரை... மெல்லிய உடலமைப்புக்கு ஏற்ற சரியான ஆடைகள்!

த்தனை முறை கண்ணாடி முன் நின்று பார்த்தாலும், `உடையில் ஏதோ சரியில்லையே!' என்ற எண்ணம் பெரும்பாலான பெண்களுக்குத் தோன்றாமல் இருக்காது. உயரம், உடல் எடை, நிறம் இப்படி எந்தப் பண்பாக இருந்தாலும், என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி உடுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துவைத்திருந்தாலே பாதி வேலை முடிந்துவிடும். முக்கியமாக, மெல்லிய உடலமைப்புக் கொண்டவர்களுக்கு ஆப்ஷன்ஸ் மிகவும் குறைவு. இவர்களுக்குப் பிடித்த உடைகள் பெரும்பாலும் அதிகப்படியான அளவுடையதாகவே இருக்கும். ஆனால், சரியான சில அடிப்படைகளைப் பின்பற்றினால், மெலிதான உடலமைப்பை சற்று தடித்தது போன்ற மாயையை உருவாக்கலாம்.

மெல்லிய உடலமைப்பு

சரியான அளவு விகிதம்கொண்ட உடலமைப்பு:

மெலிதான தேகத்தை சற்று பருமனாகக் காண்பிக்க, உடையின் வடிவமைப்பில் ஆங்காங்கே சிறு மாறுதல்களைச் செய்தாலே போதும். தோள்பட்டை மற்றும் இடைப் பகுதிகளில் `வால்யூம்' அல்லது அதிகப்படியான லேயர்கள் சேர்ப்பதால், மெல்லிய உடலமைப்பு கனமானதுபோல் தோன்றும். எனவே, தேர்ந்தெடுக்கும் உடைகளில் தோள்பட்டையிலும், இடைப் பகுதியிலும் எம்ப்ராய்டரி, சீக்வன்ஸ் முதலிய வேலைப்பாடுகள் இருந்தால் நிச்சயம் இது உங்களுக்கான ஆடைதான்.

Outfit for slim body type

ஸ்லீவ்ஸ்:

மெலிதான கைகளை மறைக்கவும், கனமான தோற்றம் பெறவும் `பாட் விங் (Bat Wing)', `பெல் ஸ்லீவ் (Bell Sleeve)' போன்ற ஸ்லீவ் வகை இணைத்த உடைகள் நிச்சயம் கைகொடுக்கும். முழுநீள பிரின்டட் ஸ்லீவ் மற்றொரு சரியான சாய்ஸ். பூமர் ஜாக்கெட், முழுநீள கை பிளேஸர் போன்றவை தேர்வுசெய்யலாம். இவற்றோடு அடர் நிற ஷூ, சுடிதார், ஸ்கர்ட்ஸ் அணிந்து மேட்ச் செய்துகொள்ளலாம். `டக்-இன்' செய்வதன்மூலம் இவர்களின் மெல்லிய இடையை மறைத்துக்கொள்ளலாம்.

Bell Sleeves top

கழுத்து டிசைன்:

பிளீட்ஸ் (Pleats), ரஃபுல்ஸ் (Ruffles), ட்விஸ்ட்ஸ், நாட்ஸ் (Knots) போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த ஷர்ட், டீ-ஷர்ட், சல்வார் கமீஸ் போன்றவை மெல்லிய உடலமைப்புக் கொண்டவர்களுக்கு சிறந்த தேர்வு. கழுத்துப் பகுதியில் அதிகப்படியான சீக்வன்ஸ் மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் இருந்தால், அவற்றை யோசிக்காமல் வாங்கலாம். Low-neck, `V' கட் டிசைன் போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

Ruffles Top

சிறந்த உடை:

ஒல்லியான உடலமைப்பு உடையவர்கள் Low Rise ஜீன்ஸ் மற்றும் ஸ்கர்ட் போன்றவற்றை உடுத்துவது, மிடுக்கான தோற்றத்தைத் தரும். High அல்லது Mid rise ஆடைகள் இவர்களுக்கானதல்ல. பூட்-கட், அதிக அடுக்குகள்கொண்ட ஸ்கர்ட் போன்றவை இவர்களுக்கு பருமனான தோற்றத்தைத் தரும். பலாஸோ அல்லது பாரலல் (Parallel) பேன்ட் வகை ஆடைகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஜெக்கிங் ஜீன்ஸ் கால்களை மேலும் மெலிதாகக் காண்பிக்கும். எனவே, இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேக்ஸி, Baggy ஸ்டைல் அதாவது தளர்வான ஸ்கர்ட் அல்லது பேன்ட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

Tuck in for perfect outfit

கூடுதல் டிப்ஸ்:

இவர்கள் அனார்கலி வகை சல்வார் கமீஸ், முழுநீள டிரஸ் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இது மெலிதான இடையிலிருந்து கணுக்கால் வரை நீண்டு படர்வதால் மெல்லிய கால்களை மறைத்து, பருமனான தோற்றத்தைத் தரும்.

காட்டன், சில்க் போன்ற மெட்டீரியல்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. சாட்டின், ஷிபான், ஜார்ஜெட் போன்ற மெட்டீரியல்களைத் தவிர்க்க வேண்டும். இவை உடலோடு இணைத்து மேலும் மெலிதான தோற்றத்தைத் தரும்.

துப்பட்டா, ஸ்டோல், ஷ்ரக் (Shrug), ஜாக்கெட், கோட் போன்ற லேயர் தரும் இணை ஆடைகளை உபயோகிப்பதால், மெல்லிய தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதி மறைக்கப்படும்.

பிளெயின் அல்லது சாலிட் வகை ஆடைகளைத் தவிர்ப்பது சிறந்தது. பிரின்ட், எம்ப்ராய்டரி, பேட்ச் வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளே இவர்களுக்கான சரியான தேர்வு.


டிரெண்டிங் @ விகடன்