Published:Updated:

கோடைக்கால விடுமுறையை எங்கு, எப்படி கொண்டாடுவது..?!

கோடைக்கால விடுமுறையை எங்கு, எப்படி கொண்டாடுவது..?!
கோடைக்கால விடுமுறையை எங்கு, எப்படி கொண்டாடுவது..?!

கொளுத்தும் வெயிலில் இருந்த தப்பிக்க கோடை விடுமுறையைப் பயன்படுத்தி நம் அன்றாட பணிகளிலிருந்து விலகி சுற்றுலா செல்ல ஆயத்தமாக இருப்போம். சுற்றுலா, நம் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கிறது. அதனால், சுற்றுலா பிரியர்களுக்கு கோடை வந்தாலே கொண்டாட்டம்தான். இந்தக் கோடை விடுமுறைக்கு எங்கே சுற்றுலா செலவதென்று பலர் குடும்பத்துடன் ஆலோசித்து பட்ஜெட்டை தயார் செய்து கொண்டிருப்பார்கள். அவ்வாறு பட்ஜெட் மற்றும் மனம் திருப்தியுடனும் குடும்பத்துடன் இக்கோடை விடுமுறையை செலவிட ஏற்ற இடமாக 'தாய்லாந்து' அமைந்துள்ளது.                   

சுற்றுலா செல்கையில் சில இடங்களைவிட்டு விரைவில் வருவதற்கு மனமிருக்காது. அவ்வாறான இடங்களில் தாய்லாந்தும் ஒன்று. அங்கு சுற்றிப்பார்த்து ஆச்சரியப்படுவதற்கு நிறைய இடங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக சுற்றிப்பார்க்க பல வாரங்கள் ஆகலாம். இருப்பினும் தாய்லாந்தின் தலைநகர் 'பாங்காக்'கில் இருக்கும் முக்கியமான இடங்களை வாரயிறுதியான இரண்டு நாட்களில் சுற்றிப் பார்ப்பதற்கான அட்டவணையினைக் காண்போம்!

கோடைக்கால விடுமுறையை எங்கு, எப்படி கொண்டாடுவது..?!

முதல் நாள் - கோயிலும், கட்டடங்களும்

கிராண்ட் பேலஸ் & வாட் பிரா கேவ், எமரால்டு புத்தர் கோயில் (Grand Palace & Wat Phra Kaew)

கட்டடக்கலை அதிசயங்களில் ஒன்றான எமரால்டு புத்தர் கோயிலின் நிலத்தில் அமைந்துள்ள முன்னாள் அரசர்களின் பிரம்மாண்டமான அரண்மனையை கண்டுகளிக்கலாம். அந்த நிலத்தைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் அமைந்திருக்கின்றன. தாய்லாந்தில் அமைந்துள்ள முக்கிய புத்த கோயில்களில் ஒன்றாக இருக்கும் எமரால்டு புத்தர் கோயிலுக்கு ஆசியாவில் இருக்கும் அத்தனை புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வந்து செல்வார்கள். இக்கோயிலைப் பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள நிச்சயம் சுற்றுலா வழிகாட்டியை அழைத்துச் செல்வது அவசியம். மேலும் இக்கோயிலுக்கு உள்ளே சென்று வருவதற்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். தவிர, கோயிலுக்குள் அணிய வேண்டிய உடைகளுக்கும் விதிகள் உண்டு. மேலும் அந்தப் பகுதியைச் சுற்றி ஏராளமான ரசிக்கவைக்கக்கூடிய இடங்களும் நம்மைக் கவர காத்திருக்கின்றன.

சைனா டவுன் (China Town)

முதல் நாளின் மாலைப் பொழுதில்... சாவோ பிராயா நதியின் எதிர்புறத்தில் அமைந்துள்ள சைனாடவுனை ரசிக்கலாம். இது பாங்காக்கின் மிகவும் பழமையான பகுதிகள் கொண்ட இடம். சூரியன் மறையும் நேரம் பாங்காக்கின் சாலை உணவுகளின் வாசம் மூக்கை துளைக்க ஆரம்பிக்கும். மிகவும் சுவையான சாலை உணவுகளை தரக்கூடிய பகுதி இது. இங்கு கிடைக்கும் உணவுகளை தாய்லாந்தில் வேறெங்கும் பார்க்க முடியாது. பரபரப்பான சந்தை, பழமையான கோயில்கள் அமைந்திருக்கும் இவ்விடத்தை சுற்றிப்பார்த்து ரசிக்கலாம்.

கோடைக்கால விடுமுறையை எங்கு, எப்படி கொண்டாடுவது..?!

இரண்டாம் நாள் - ஷாப்பிங்...

ஃபுளோட்டிங் மார்க்கெட் 

பாங்காக்கின் கலாச்சார உலகை பார்த்து ரசித்த அனுபவங்களுக்குப் பின் உள்ளூர் வாழ்க்கைக்கு திரும்பியாக வேண்டும். பாங்காக்கில் இரண்டாம் நாளின் பகல் பொழுதில் Damnoen Saduak என்னும் மிகப்பெரிய மற்றும் பிரபலமான ஃபுளோட்டிங் மார்க்கெட்டை ரசித்தப்படி நமக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். உள்ளூர் சுவைகளை அதிகம் தரக்கூடிய க்ஹா, அம்பவா போன்ற சிறிய மார்க்கெட்களையும் அங்கு காணலாம். வெளிப்புற மார்க்கெட் மற்றும் சாலையோர ஷாப்பிங்கை விரும்புவோருக்கு பாங்காக்கை சுற்றியுள்ள ஃபுளோட்டிங் மார்க்கெட்டை வலம் வருவது மிகுந்தளவில் மகிழ்வைத் தரும்.

சட்டுச்சாக் மார்க்கெட் (Chatuchak Market)

இரண்டாம் நாள்மாலையில் பாங்காக்கில் அமைந்துள்ள மிகப்பெரிய சட்டுச்சாக் மார்க்கெட்டிற்கு சென்று நேரத்தை செலவிடலாம். சுமார் 15,000 அங்காடிகளைக் கொண்ட சட்டுச்சாக் மார்க்கெட்டுக்கு மக்கள் கூட்டம் அலைமோதும். பழம்பெரும் பொருட்கள், செடிகள், அழகுசாதனப் பொருள்கள், செல்லப் பிராணிகள், நாவூறும் உணவுகள், வீட்டுக்குத் தேவையானவை, உடைகள், புத்தகங்கள், மது என மார்க்கெட்டே களைகட்டும். பாங்காக்கிற்கு சென்றால் சட்டுச்சாக் மார்க்கெட்டிற்கு செல்லாமல் ஷாப்பிங் திருப்திகரமாக நிறைவடையாது.

கோடைக்கால விடுமுறையை எங்கு, எப்படி கொண்டாடுவது..?!

பாங்காக்கிற்கு எப்படிச் செல்வது?

பாங்காக்கிற்கு உங்கள் பட்ஜெட்டில் பயணம் செய்ய 'ஏர் ஏசியா' (Air Asia) நிறுவனத்தின் விமான சேவை சரியான முடிவாக இருக்கும். மற்ற விமான சேவைகளை ஒப்பிடுகையில், ஏர் ஏசியா நிறுவனத்தின் டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவு. www.airasia.com அல்லது AirAsia மொபைல் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்வதன்மூலம் மிகக்குறைவான கட்டணத்தைப் பெறலாம். இந்தியாவிலிருந்து பாங்காக்கிற்கு  தினசரி விமான சேவையை வழங்கிவருகிறது ஏர் ஏசியா, இதனால் நாம் பயணப்பட நினைக்கும் காலத்தில் சுலபமாக டிக்கெட் பெறமுடிகிறது. பாங்காக் தவிர, பிற வெளிநாடுகளுக்கும் சிறப்பான விமான சேவையை வழங்குகிறது ஏர் ஏசியா நிறுவனம். தாய்லாந்து நாட்டில், இந்தியர்களுக்கு 'இலவச விசா ஆன் அரைவல்' வசதியை ஏப்ரல் 30, 2019 வரை வழங்குகிறது அந்நாட்டு அரசு. எனவே குடும்பத்துடன் கோடைக்கால விடுமுறையை கழிக்க பாங்காக்கிற்கு செல்லலாமே...!