வருமானம் ரூ.145 கோடி! - யூஸ்டு கார் விற்பனையில் அசத்திய நிறுவனம் | Cardekho gained 145 crore income in used car sales

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (17/04/2019)

கடைசி தொடர்பு:17:00 (17/04/2019)

வருமானம் ரூ.145 கோடி! - யூஸ்டு கார் விற்பனையில் அசத்திய நிறுவனம்

இந்தியாவில், கடந்த சில மாதங்களாகப் புதிய கார்களின் விற்பனை குறைந்துவருகிறது  அதே சமயத்தில், யூஸ்டு கார்களின் விற்பனை அதிகரித்துவருகிறது. கார் சந்தையின் இந்த மாற்றத்தைப் பயன்படுத்தி, 'CarDekho' இணையதளம், கடந்த நிதி ஆண்டில் 21 மில்லியன் டாலர் (தோராயமாக 145 கோடி ரூபாய்) வருமானம் ஈட்டியுள்ளது. இந்த வருமானம், முந்தைய ஆண்டைவிட 140 சதவிகிதம் அதிகம்.

'CarDekho' யூஸ்டு கார் நிறுவனம்

2019 ஜனவரி முதல் மார்ச் வரை பழைய கார்களின் விற்பனை உச்சத்தைத் தொட்டுள்ளதாகச் சொல்கிறது. இந்தக் காலகட்டத்தில், புதிய கார்களின் விற்பனை 70 சதவிகிதமும், பழைய கார்களின் விற்பனை 340 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். கூர்கானைச் சேர்ந்த கிர்னார் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் இணையதளமான CarDekho புதிய கார் விற்பனையில் 43 சதவிகிதமும், பழைய கார், இன்ஷூரன்ஸ் மற்றும் கடன் சேவைகள்மூலம் மொத்தமாக 62 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளது.  

பழைய கார் விற்பனை

புதிய கார்களின் விற்பனை குறைந்த நிலையிலும் CarDekho 26.4 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ.182 கோடி) வருமானத்தை ஈட்டியது. இணையத்தை அடிப்படையாக வைத்து உருவான புதிய தொழில் முறைகள் (ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்) வளர்ச்சியடைந்து வரும் இவ்வேளையில், டிஜிட்டல் முறையின் விற்பனை அபரிமிதமானது. "யூஸ்டு காருக்கான OEM ஆக வளர்வதே எங்கள் குறிக்கோள்" என்கிறார், இந்நிறுவனத்தின் தலைவர் அமித் ஜெயின்.