'அட, சுந்தர் பிச்சைலாம் வரலைங்க!' - வைரல் போட்டோவின் பின்னணி | Sundar didn't vote in this Lok sabha elections, Story behind the viral photo

வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:53 (19/04/2019)

'அட, சுந்தர் பிச்சைலாம் வரலைங்க!' - வைரல் போட்டோவின் பின்னணி

தமிழகத்தில், இன்று மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. முதல்முறை வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருந்தனர். இன்று, சமூக வலைதளங்கள் முழுவதும் வாக்களித்த விரல்களையே பார்க்கமுடிந்தது. மேலும் விஜய், அஜித், சூர்யா போன்ற தங்களது அபிமான நட்சத்திரங்கள் எளிமையாக வந்து வாக்களிக்கும் படங்களையும், வீடியோக்களையும் பெருமிதத்துடன் ஷேர் செய்தனர், அவர்களது ரசிகர்கள். இதற்கு நடுவில், 'சர்கார்' திரைப்படத்தில் வருவதுபோல் கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்களித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

சுந்தர்

மக்களை வாக்களிக்க வர வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே செய்யப்பட்டிருந்தாலும், அது தவறான செய்திதான். சுந்தர் பிச்சை இப்போது அமெரிக்கா குடிமகன். இந்தியாவில் இரட்டைக் குடியுரிமையும் கிடையாது, இதனால், அவர் இங்கு வாக்களிக்கும் உரிமையே கிடையாது என்பதுதான் உண்மை. 

சுந்தர்

அப்போ வைரலான போட்டோ?

அது, 2017-ல்  23 வருடங்களுக்குப் பிறகு அவர் படித்த கராக்புர் ஐஐடி-க்கு வந்தபோது எடுக்கப்பட்ட படம். இதைப் பற்றி அப்போது ட்வீட் ஒன்றையும் பதிவிட்டிருந்தார் அவர். அதுதான், இப்போது இந்தப் பொய்யான செய்தியைப் பரப்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறது

நீங்க எப்படி பீல் பண்றீங்க