இன்று `பிங்க்’ நிலாவைப் பார்க்கலாம்... இதில் என்ன ஸ்பெஷல்? #PinkMoon | Pink moon can be seen today, What is that?

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (19/04/2019)

கடைசி தொடர்பு:13:30 (19/04/2019)

இன்று `பிங்க்’ நிலாவைப் பார்க்கலாம்... இதில் என்ன ஸ்பெஷல்? #PinkMoon

எப்போதும் வரும் பௌர்ணமியை விடவும் ஏப்ரல் மாதம் தெரியும் பௌர்ணமி நிலா மிகவும் பெரியதாகவும், சற்றே பிரகாசமாகவும் இருக்கும். இந்த நிலாவை `பிங்க் நிலா' (Pink moon) என்று அழைக்கின்றனர். இந்தப் பெயரை வைத்து இன்று நிலா பிங்க் நிறத்தில் இருக்கும் என்று எண்ணி ஏமாறவேண்டாம். இந்தப் பெயர் வந்ததற்கு மற்றொரு காரணம் உண்டு. இந்த வசந்த காலத்தில் 'wild ground phlox' என்ற பிங்க் நிற பூக்கள் முதல் முதலில் பூக்கத் தொடங்கும் காலம் என்பதால் அமெரிக்க பழங்குடியினர் அப்படி அழைக்கின்றனர்.

பிங்க் நிலா

தனது சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிகவும் அருகில் வரும் காலம் என்பதால் நிலை இப்படி பெரிதாகத் தெரியும். நம் வாயு மண்டலத்தில் தூசு, புகை எதுவும் இல்லாமல் இருந்தால் நிறத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. இதை வெறும் கண்களிலேயே பார்க்கமுடியும்.

wild ground phlox

இந்திய நேரப்படி இன்று மாலை 4.40 மணியில் தொடங்கி இதைப் பார்க்கலாம். இதனால் இன்ஸ்டா, ஃபேஸ்புக் எனச் சமூக வலைதளங்களில் இன்று இந்தப் படங்களை அதிகமாகப் பார்க்கலாம். இன்று சித்ரா பௌர்ணமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க