``குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!" #SummerTips | you should do when you are travel with your kids

வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (20/04/2019)

கடைசி தொடர்பு:14:48 (20/04/2019)

``குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!" #SummerTips

கோடைக்காலம் என்றாலே குழந்தைகளுக்குக் குதூகலம்தான். விடுமுறை தினத்தை இப்படியெல்லாம் கழிக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் குழந்தைகளும் பக்காவாகப் பிளான் போடுவார்கள். அந்தப் பிளானில் முதல் இடத்தில் இருப்பது பயணம்! அப்படி, குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்ளும்போது பெற்றோர்கள் எந்தெந்த விஷயங்களிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என டிப்ஸ் கொடுக்கிறார், மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன்.

டிராவல்

பயணம் செய்யப்போகிறீர்கள் என்றால் அதைக் கடைசி நிமிடத்தில் முடிவு செய்யாமல் ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுங்கள். எங்கே செல்லப்போகிறோம், எப்போது செல்லப்போகிறோம் என்று முடிவுசெய்து, பயணப்படும் இடங்களில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன, என்ன மாதிரியான வாகனத்தில் பயணம் செய்யப்போகிறீர்கள் என்பதையும் முடிவு செய்துகொள்ளுங்கள். 

கோடைக்காலத்தில் பகல் நேர பயணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. 12 மணி முதல் 2 மணி வரையில் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

பொதுவாகக் கோடைக்காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது குடிநீரைச் சுட வைத்துக் கொடுக்க வேண்டும். பயணத்தின்போது அதிகளவு தண்ணீர் தேவைப்படும் என்பதால் கடைகளில் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றில்லாமல், தேவையான அளவு தண்ணீரைக் கொண்டு கார்/வேனில் வைத்து எடுத்துச் செல்லவும். சுடுநீர் குடிப்பதால் டயரியா இன்ஃபெக்‌ஷன் ஏற்படாமல் தடுக்கலாம்.

குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன்கோடைக்காலம் முழுவதும் குழந்தைகளுக்குக் காட்டன் உடைகளைப் பயன்படுத்துவது நல்லது. பயணத்தின்போதும் காட்டன் உடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்குக் காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகள் இருப்பின் முன்னெச்சரிக்கையாகத் தேவையான மாத்திரைகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், சில இடங்களில் மருத்துவர் அறிவுறுத்தும் மருந்துகள் கிடைக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு. டூர் செல்லும் இடத்தைக் குழந்தையின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு கவனமாக முடிவுசெய்ய வேண்டும். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்கள் குழந்தையின் உடலில் உடனடியாக மாற்றத்தை உண்டாக்கும். சில குழந்தைகளுக்கு அவை உடனடி பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

குழந்தைகளுடன் டூர் செல்லும்போது பெரும்பாலும் அமைதியான சூழலைக்கொண்ட இடங்களைத் தேர்வுசெய்யுங்கள். இயற்கைக் காட்சிகள், நல்ல காற்று, சுகாதாரமான இடங்களாகப் பார்க்கும் வண்ணம் பிளான் செய்வது நல்லது. தீம் பார்க், தியேட்டர் போன்ற இடங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது

டிராவலின்போது குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு செல்லும் உணவுகளையே கொடுப்பது நல்லது. அது தவிர்த்து, சூடான உணவுகளைக் கொடுக்கலாம். ஜங்க் ஃபுட், பேக்கிடு ஃபுட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

டிராவலுக்கு முன்பாகவே குழந்தைகளை பாத்ரூம் போவதற்கு பழக்கப்படுத்தி விட வேண்டும். சின்னக் குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி அதை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். பல மணி நேரங்கள் ஒரே டயப்பரை பயன்படுத்தக் கூடாது.

பயணம்

பயணம் சமயங்களில் புதியதாக எந்த உணவையும் குழந்தைகளுக்குக் கொடுத்து ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.

அதே போன்று டிராவலின்போது பைகளில் எப்போதும் பழ வகைகளை வைத்துக்கொள்வது நல்லது. 

எந்த டூராக இருந்தாலும் செக் லிஸ்ட் மிகவும் அவசியமானது. பரபரப்பில் முக்கியமான பொருள்களைத் தவறவிடுவது இயல்பு. இதைத் தவிர்க்க, செக் லிஸ்ட் ஒன்றைத் தயாரியுங்கள். ஒவ்வோர் இடத்தைவிட்டுக் கிளம்பும் முன்பு அந்த லிஸ்ட்டைப் பார்த்து குழந்தைகளுக்குத் தேவையானவை (டையபர், வாட்டர் பாட்டில், டிஷ்யூ...) உள்ளனவா எனச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்