அபூர்வ கறுப்புப் புலிக்குட்டிகள்...வண்டலூரின் 'க்யூட்' புது வரவுகள்! | New rare black tiger cubs now for display at vandalur zoo

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (21/04/2019)

கடைசி தொடர்பு:15:30 (21/04/2019)

அபூர்வ கறுப்புப் புலிக்குட்டிகள்...வண்டலூரின் 'க்யூட்' புது வரவுகள்!

வண்டலூரில் இருக்கும் நமது அறிஞர் அண்ணா உயிரியில் பூங்காவில் புதிய வரவாக மூன்று புலிக்குட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டு கறுப்பு புலிக்குட்டிகளும், ஒரு வெள்ளை புலிக்குட்டியும் இதில் அடங்கும். உயிரியல் பூங்கா வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி இந்த மூன்றையும் நம்ருதா என்னும் வெள்ளை பெண் புலி கடந்த ஜனவரி 9ம் தேதி பெற்றெடுத்தது. இவற்றுக்குத் தந்தை நகுலா என்னும் ஆண் புலி. இதற்கும் வெள்ளை மரபணுக்கள் உண்டு.

கருப்பு புலி குட்டிகள்

இதில் ஒன்று பெற்றோரை போன்றே வெள்ளை நிறத்தில் இருக்க மற்ற இரண்டும் கறுப்பு நிறத்தில் இருக்கின்றன. அபூர்வமான 'Pseudo-melanism' என்னும் குணத்தில் இவை மற்ற புலிகளை விடப் பெரிய வரிகளைப் பெற்றிருக்கும். இதனால் கறுப்பு நிறம் அதிகம் கொண்டதாக இவை அமையும்.  இப்போது தாயுடன் காட்சிக்கு வந்திருக்கும் இந்த மூன்று அழகிய புலிக்குட்டிகள்தான் இந்த கோடை விடுமுறையில் வண்டலூர் பூங்காவின் முக்கிய ஈர்ப்புகளாக இருக்கும் என நம்புகிறது உயிரியல் பூங்கா நிர்வாகம்.

புலி

மேலும் இந்த விடுமுறையில் பூங்காவிற்கு வருபவர்களைக் கவர மேலும் பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்த மூன்று குட்டிகளுடன் இப்போது வண்டலூரில் மொத்தம் 28 புலிகள் இருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க