Published:Updated:

போலி விமர்சன குழுக்களால் முட்டாளாக்கப்படும் அமேசான் வாடிக்கையாளர்கள்! 

பா. முகிலன்
போலி விமர்சன குழுக்களால் முட்டாளாக்கப்படும் அமேசான் வாடிக்கையாளர்கள்! 
போலி விமர்சன குழுக்களால் முட்டாளாக்கப்படும் அமேசான் வாடிக்கையாளர்கள்! 

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மூலம் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள்,  ஃபேஸ்புக்கில் இயங்கும் போலி விமர்சகர்களால் முட்டாளாக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. 

போலி விமர்சன குழுக்களால் முட்டாளாக்கப்படும் அமேசான் வாடிக்கையாளர்கள்! 

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு பொருளை விற்பதற்கு விளம்பரம் மட்டும் போதுமானதாக இல்லை. குறிப்பிட்ட பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், அந்தப் பொருளின் தரம் குறித்து வெளியிடும் கருத்துகள் அல்லது அவர்களது ரேட்டிங்கைப் பார்த்து மற்றவர்களும், அந்தப் பொருளை வாங்குவதா வேண்டாமா என முடிவு செய்கின்றனர். 

அமெரிக்காவில் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுவதால், பல நிறுவனங்களும் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டன.  பல்வேறு ஃபேஸ்புக் குழுக்களில் இதற்கென்றே இயங்கும் போலி விமர்சன தொழிற்சாலைகளைக் கொண்டு, தங்கள் தயாரிப்பு பொருள்களை `` ஆஹா... அற்புதம்" என்ற ரேஞ்சுக்கு கருத்துகளைப் பதிவிட வைக்கின்றனர். இந்தப் போலி விமர்சனங்களெல்லாம் அமேசான் வாடிக்கையாளர்களைக் குறிவைத்தே பதிவிடப்படுகின்றன. 

அமேசான் நிறுவனத்துக்கு அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் சுமார் 206 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வாடிக்கையாளர்களை மேற்கூறியவாறு கருத்துகளைப் பதிவிட்டு இந்தப் போலி விமர்சகர்கள், அவர்களை முட்டாளாக்கி வருகிறார்கள் எனச் செய்தி வெளியாகி உள்ளது. 

இதில் வாடிக்கையாளர்கள் மட்டும் முட்டாளாகாமல், அமேசான் நிறுவனமும் இதுபோன்ற விமர்சனத்தைப் பதிவிடுபவர்கள் உண்மையான வாடிக்கையாளர்கள் எனக் கருதி ஏமாந்து விடுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இதுபோன்ற, குறிப்பிட்ட நிறுவன பொருளை அமேசானிடமிருந்து வாங்குவதற்கான கட்டணத்துடன், கூடுதலாக ஒரு கமிஷன் தொகையையும் போலி விமர்சகர்களுக்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுத்து விடுகின்றன. 

போலி விமர்சன குழுக்களால் முட்டாளாக்கப்படும் அமேசான் வாடிக்கையாளர்கள்! 

பிரிட்டனைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பு ஒன்று, `nearly all' என்ற போலி ஃபேஸ்புக் விமர்சன குழுக்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகக் கண்டறிந்துள்ளது. பிரபலமே இல்லாத பிராண்டுகளைச் சேர்ந்த பொருள்களுக்கெல்லாம் இந்தப் போலி குழுக்கள் '5 நட்சத்திர' அந்தஸ்து வழங்கி உள்ளன என்றும், இது தொடர்பான பதிவுகள் ஏராளமான எண்ணிக்கையில் குவிந்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. 

எதற்கும் அடுத்த முறை, ரேட்டிங் மற்றும் விமர்சனங்களைப் பார்த்து ஏதாவது ஒரு அறிமுகமில்லா பிராண்டின் பொருளை அமேசானில் வாங்க முடிவு செய்தீர்களென்றால், ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள்!