துப்பாக்கியைவிட பெரிய ஆயுதம் புத்தகம்! #WorldBookDay | World Book Day 2019 what is the purpose of books

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (23/04/2019)

கடைசி தொடர்பு:12:55 (23/04/2019)

துப்பாக்கியைவிட பெரிய ஆயுதம் புத்தகம்! #WorldBookDay

"ஒரு நூலகம் திறக்கப்பட்டால், ஒரு சிறைச்சாலை மூடப்படும்" என்றார் பேரறிஞர் அண்ணா.

world book day.

வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துகளான புத்தகங்களைப் பாதுகாக்கும் வகையிலும், அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் 1995-ம் ஆண்டு, யுனெஸ்கோவின் பொது மாநாட்டில், ஏப்ரல் 23-ம் தேதியை உலகப் புத்தக தினமாக அறிவிக்கப்பட்டது. இந்தநாள், உலகப் புகழ்பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம். இவரின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

புத்தகம்

பல்வேறு நாடகங்களையும் காதல் காவியங்களையும் எழுதிய வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த தினமும் இன்றுதான். இவர் பிறந்தது மட்டுமல்ல, உலகை விட்டு மறைந்ததும் ஏப்ரல் 23-ல் தான்.

"ஆயிரம் புத்தகங்களை வாசித்த ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள். அவனே என்னுடைய வழிகாட்டி" என்று ஜூலியஸ்  சீசர் கூறுவார். காரணம், ஒரு சிறந்த  சமூகத்தைக் கட்டமைப்பதிலும், மிகப்பெரிய மனிதர்களை உருவாக்குவதிலும் நமக்குள் புதுத் தேடலை உருவாக்கும் சக்தி புத்தகங்களுக்கு உண்டு. மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகங்கள்தான். ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்குமான இணைப்பு. தலைமுறைகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான பாலமாகவே அமைகிறது. 

World Book Day

உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. மற்ற நாள்களில் புத்தகங்கள் வாசிப்பை மறந்தாலும், உலகப் புத்தக தினத்தன்று மட்டுமாவது, சிறந்த புத்தகங்களை வாங்கி, நண்பர்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசளிப்பதோடு, நல்ல பல புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொள்வோம். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க