`நாங்களும் போஸ் கொடுப்போம்!'- கொரில்லாக்களின் வைரல் செல்ஃபி | Gorillas posing like human in a selfie goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (23/04/2019)

கடைசி தொடர்பு:19:10 (23/04/2019)

`நாங்களும் போஸ் கொடுப்போம்!'- கொரில்லாக்களின் வைரல் செல்ஃபி

கடந்த சில ஆண்டுகளில் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் நிகழ்ந்திருந்தாலும், போனின் முன்பக்கம் அமைக்கப்பட்ட ஃபிரன்ட் கேமராதான் மனிதர்களாகிய நமது நடவடிக்கைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்து இருக்கிறது. எங்கும், எப்போதும் செல்ஃபி எடுப்பவர்களை நம்மால் பார்க்கமுடிகிறது. இப்போது மனிதர்களுக்கு அடுத்து சில கொரில்லாக்களுக்கும் செல்ஃபி என்றால் என்னவென்று புரிந்துவிட்டது போல! காங்கோ நாட்டின் விருங்கா தேசியப் பூங்காவில் இருக்கும் கொரில்லா காப்பகத்தில் இரண்டு கொரில்லாக்கள் மனிதர்கள் போலவே போஸ் கொடுக்க கற்றுக்கொண்டுள்ளன. 

கொரில்லா செல்ஃபி

Photo credit: RANGER MATHIEU SHAMAVU

செல்ஃபிக்கு பின் இருக்கும் சோகக்கதை

சிறுவயதிலேயே மனித வேட்டையால் பெற்றோரை இழந்த இவை அங்கிருக்கும் வனத்துறை அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டு காப்பகத்தில் வளர்க்கப்பட்டன. அங்கிருக்கும் காப்பாளர்கள் போன்றே சில நடவடிக்கைகளை விளையாட்டாக இவை செய்யுமாம். பிறந்து 2-4 மாதங்களிலேயே காப்பகத்துக்கு வந்துவிட்டதால் அங்கிருக்கும் அதிகாரிகளையே பெற்றோராக அவை நினைத்துக்கொண்டிருக்கிறதாம். அவ்வப்போது மனிதர்களைப்போல இரண்டு கால்களில் நின்று காட்டும் இவை, வனத்துறை அதிகாரி எடுத்த செல்ஃபியில் நின்றுகொண்டே போஸ் கொடுத்திருக்கின்றன. இப்போது இந்த செல்ஃபி உலகமெங்கும் சமூக வலைதளங்களில் செம வைரல்.

இப்படி வனத்துறை அதிகாரிகளுக்கு விலங்குகளிடம் இருந்து அதீத அன்பு கிடைத்தாலும் அங்கிருக்கும் மக்களிடம் இருந்து அது கிடைப்பதில்லை. காங்கோவில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலில் அரசுக்கு எதிராக இயங்கும் வன்முறை அமைப்புகள் பலவும் இந்த பகுதிகளில்தான் இயங்குகின்றன. 1996 தொடங்கி இதுவரை 130 அதிகாரிகள் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களே தீவிர விலங்குகள் வேட்டையிலும் ஈடுபடுகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க