வரப்போகிறது பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160... இதில் என்ன எதிர்பார்க்கலாம்? | Bajaj to launch Avenger Street 160 ABS, all set to replace avenger street 180

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (25/04/2019)

கடைசி தொடர்பு:08:45 (25/04/2019)

வரப்போகிறது பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160... இதில் என்ன எதிர்பார்க்கலாம்?

அளவில் சிறிய இன்ஜினாக இருந்தாலும், செயல்திறனில் முந்தைய அவென்ஜரின் 180சிசி மாடலைவிடப் புதிய ஸ்ட்ரீட் 160சிசி அசத்தும் என நம்பலாம்.

இந்தியாவின் விலை குறைவான க்ரூஸர் பைக்' என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான அவென்ஜர் பைக்கின் 220சிசி மாடல்களில், புதிய விதிமுறைக்கு ஏற்ப சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கைச் சேர்த்திருக்கிறது பஜாஜ் ஆட்டோ. ஆனால், 180சிசி ஸ்ட்ரீட் மாடலில் எந்த அப்டேட்டும் வரவில்லையே எனப் பேச்சுகள் எழுந்த நிலையில், அதை சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனான 160சிசி மாடல் வாயிலாக Replace செய்ய, அந்த நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. இதற்கு அவென்ஜரின் 180சிசி மாடல், விலை விஷயத்தில் 220சிசி மாடலுக்கு நெருக்கத்தில் இருந்ததே காரணம். இதில் ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்திருக்கிறது பஜாஜ்.

 

பஜாஜ்

 

ஆம், அளவில் சிறிய இன்ஜினாக இருந்தாலும், செயல்திறனில் முந்தைய 180சிசி மாடலைவிடப் புதிய 160சிசி அசத்தும் என நம்பலாம். அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக்கில் இருந்த 2 வால்வ் - 178.6சிசி இன்ஜின், 15.5bhp@8,500rpm பவர் மற்றும் 1.37kgm@6,500rpm டார்க்கை வெளிப்படுத்தியது தெரிந்ததே. பல்ஸர் NS160 இருந்து அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 பைக்குக்கு இடம்பெயரவிருக்கும் 160.3சிசி - 4 வால்வ் இன்ஜின், 15.5bhp@8,500rpm பவர் மற்றும் 1.46kgm@6,500rpm டார்க்கைத் தருகிறது. இங்கே கூடுதல் டார்க் கிடைப்பதுடன், மைலேஜும் முன்பைவிட அதிகமாகக் கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. க்ராஃபிக்ஸ் மற்றும் கலர்களைத் தாண்டி, தோற்றம் - சிறப்பம்சங்களில் எந்த மாறுதலும் இருக்காது என்றே தெரிகிறது. 

 

அவென்ஜர்

 

இதனால் 180சிசி மாடலில் இருந்த அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரே, 160சிசி மாடலிலும் தொடரும். இது மைனஸ்தான் என்றாலும், வழக்கம்போல பைக்கின் விலையில் ஜாக்பாட் அடித்திருக்கிறது பஜாஜ் ஆட்டோ. ஏபிஎஸ் இல்லாத அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 மாடலின் புனே எக்ஸ்-ஷோரூம் விலை 86,861 ரூபாய் என்றளவில் இருக்கும்போது, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனான புதிய அவென்ஜர் ஸ்ட்ரீட் 160 மாடலின் புனே எக்ஸ்-ஷோரும் விலை 81,036 ரூபாயாக இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. கார்புரேட்டர் இன்ஜின் - சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் கிடைக்கும் சுஸூகி இன்ட்ரூடர் பைக்கின் புனே எக்ஸ்-ஷோரும் விலையே 1.03 லட்சம் என்பதை வைத்துப் பார்க்கும்போது, புதிதாகச் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் - 4 வால்வ் இன்ஜின் சேர்ந்துமே, முன்பைவிட அவென்ஜரின் விலை 5,800 ரூபாய் குறைவு! எனவே போட்டியாளருடன் ஒப்பிடும்போது, இன்னும் மதிப்புமிக்க பைக்காக இது மாறியிருக்கிறது. மே மாதத்தின் முதல் வாரம் முதலாக, பஜாஜின் ஷோரூம்களில் இந்தப் புதிய ஸ்ட்ரீட் 160 பைக் கிடைக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க