இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு: சென்னைக்கு 4-வது இடம் - சர்வே முடிவுகள் | Only one of five urban Indians has term insurance

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (25/04/2019)

கடைசி தொடர்பு:15:40 (25/04/2019)

இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு: சென்னைக்கு 4-வது இடம் - சர்வே முடிவுகள்

இன்ஷூரன்ஸ்

ன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குக் குறைவாக இருக்கிறது என்பதை, தொடர்ந்து வெளியாகும் சர்வே முடிவுகள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன. தற்போதுகூட மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமும், மார்க்கெட் ஆராய்ச்சி நிறுவனமான கந்தர் ஐ.எம்.ஆர்.பி நிறுவனமும் இணைந்து நடத்திய சர்வேயில், அது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. 

இந்தியாவின் முக்கிய 15 நகரங்களில், 4,566 பேரிடம் இது குறித்த சர்வே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம்,  நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் ஐந்தில் ஒருவர் மட்டுமே டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருக்கிறார் என்கிற விவரம் தெரியவந்துள்ளது. 15 நகரங்களில் மேற்கொண்ட சர்வே அடிப்படையில், இந்தியாவின் மொத்த ஐ.பி.க்யூ (India Protection Quotient) ஸ்கோர் 35-ஆக மட்டுமே இருக்கிறது. இது மிகவும் குறைவு ஆகும். இந்த மதிப்பெண் அடிப்படையில் டெல்லி (45), ஹைதராபாத் (44) மற்றும் அகமதாபாத் (44) ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடத்தைப் பிடித்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் டேர்ம் பாலிசி குறித்த விழிப்புணர்வில் சற்றே முன்னேறியவர்களாக இருக்கிறார்கள். சென்னை 42 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்தைத் தக்க வைத்திருக்கிறது. புனே (27) மற்றும் பெங்களூரு (28) நகரங்களில் பெருவாரியான மக்கள் படித்தவர்களாக இருந்தாலும், அங்குள்ளவர்களுக்கு இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறைந்தே காணப்படுகிறது.

மேலும், 25-35 வயது வரை உள்ளவர்கள், பெரும்பாலும் பயணிப்பதற்கும், ஆடம்பர விஷயங்களுக்குமே அதிகம் செலவு செய்கிறார்கள். இவர்களில் 44% பேருக்கு மட்டுமே இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு இருக்கிறது. அதில் 17% பேர் மட்டுமே லைஃப் கவர் பாலிசிகளை எடுத்திருக்கிறார்கள்.