டிசம்பர் 2019-ல் வருகிறது, MG eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி! | MG Motor India to launch eZS Electric SUV at December 2019

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (26/04/2019)

கடைசி தொடர்பு:17:20 (26/04/2019)

டிசம்பர் 2019-ல் வருகிறது, MG eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி!

இந்த காரின் லித்தியம் ஐயன் பேட்டரிகளுக்காக, உலகளவில் சிறந்துவிளங்கும் Contemporary Amperex Technology Company Limited நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருக்கிறது, MG மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான SAIC.

MG மோட்டார் இந்தியா, இந்தியாவில் ஹெக்டர் எனும் மிட்சைஸ் எஸ்யூவி வாயிலாக டயர் பதிக்கவிருப்பது (ஜூன் 2019-ல் அறிமுகம்) தெரிந்ததே. இந்த நிலையில், டிசம்பர் 2019 மாதத்தில் eZS எனும் எலெக்ட்ரிக் எஸ்யூவியைக் களமிறக்க இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. மெட்ரோ சிட்டிகளில் முதலில் இது விற்பனைக்கு வரும் என்றும், பின்னாளில் மற்ற ஊர்களிலும் வெளிவரும் என எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் Chief Commercial Officer கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார். சிங்கிள் சார்ஜில் 250 கி.மீ-க்கும் அதிக தூரம் eZS செல்லும் எனத் தெரிகிறது.

 

MG eZS

 

சீனாவில் நடைபெற்ற Guangzhou Motor Show 2018-ல், முதன்முறையாக eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட்டது. அந்த மாடலில் 150bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் இருந்ததுடன், NEDC டெஸ்ட்டிங்கின்படி சிங்கிள் சார்ஜில் 335கிமீ தூரம் செல்லக்கூடிய திறனையும் கொண்டிருந்தது. எனவே FAME II விதிமுறைகளைகளுக்கு ஏற்ப கார் இருப்பதால், மத்திய அரசின் ஊக்கத் தொகை மற்றும் மானியம் இதற்குக் கிடைக்கும். ஹெக்டர் போலவே, eZS காரில் iSmart Next-Gen தொழில்நுட்பம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

 

Morris Garages

 

இந்த காரின் லித்தியம் ஐயன் பேட்டரிகளுக்காக, உலகளவில் சிறந்துவிளங்கும் Contemporary Amperex Technology Company Limited நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருக்கிறது, எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான SAIC. எனவே eZS காரின் பேட்டரி அமைப்பை, CATL நிறுவனமே அசெம்பிள் செய்துதரும். தவிர காரின் விலையைக் கட்டுக்குள் வைக்க, CKD முறையில் கார் பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, குஜராத்தில் அமைந்திருக்கும் எம்ஜி மோட்டார் இந்தியாவின் தொழிற்சாலையில் eZS அசெம்பிள் செய்யப்படும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க