அட்சய திரிதியை ஸ்பெஷல்; குறைந்த விலையில் தங்கநகை! | Akshaya Thiruthiyai Special Offer at Brilliant Cut

வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (26/04/2019)

கடைசி தொடர்பு:11:23 (29/04/2019)

அட்சய திரிதியை ஸ்பெஷல்; குறைந்த விலையில் தங்கநகை!

'அட்சய' என்பதற்கு அழியாது பெருகக்கூடியது என்பது பொருளாகும். சித்திரை மாதம் அமாவாசையை அடுத்து வரும் திரிதியை நாளை 'அட்சய திரிதியை' நாளாக கொண்டாடுகிறோம். மனிதர்களின் அறநெறிகளில் ஒன்று தானம். அட்சய திரிதியை நாளில் தான தர்மம் செய்பவர்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். நம்மால் முடிந்த சிறிதளவு தர்மம் செய்தாலும் அதற்கான பலன் பலமடங்காகும். செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் பெருக இந்நாளில் தானம் செய்வது விசேஷம் என்பது நம்பிக்கை. குறிப்பாக அன்னதானம், சொர்ண தானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசேஷம். தங்கத்தை தானமாகத் தர இயலாதவர்கள் தங்களால் முடிந்த பண உதவியை ஏழைகள், முதியோர்கள், ஆதரவு இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு தர்மம் செய்வது சிறப்பு.

தானம் மட்டுமின்றி  அட்சயதிரிதியை அன்று செய்யும் வழிபாடுகளுக்கும் இரட்டிப்பு பலன்கள் உண்டு. இந்தத் தினத்தன்று மகாலக்ஷ்மி தேவியானவள் குபேரன் இருக்கும் இடத்திற்கு சென்று ஆசி புரிவதாக ஐதீகம். தவிர முழுமுதற் தெய்வமான விநாயகரையும், குபேரனையும் வழிபடுதல் சிறப்பாகும். இவர்களின் அருளால் அஷ்ட ஐஸ்வரியங்களும் நம் இல்லத்தில் பொங்கிப் பெருகும். குழந்தைகளுக்கு அன்னப் பிரசன்னம் செய்வது, சங்கீதம், கல்வி, கலைகள் பயில்வது. வளைகாப்பு, மாங்கல்யம் செய்ய, திருமணம், தொட்டிலில் குழந்தையை விட, கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த உகந்த தினம்.

இவற்றைத் தவிர, இந்நாளில் லக்ஷ்மி தேவி குடியிருக்கும் பொருட்களை வாங்குவதும் சிறப்பாகும். லக்ஷ்மி தேவி குடியுள்ள அரிசி, வெல்லம், உப்பு போன்ற பொருட்களை வாங்கலாம். பெரும்பாலும் அட்சய திரிதியை நாளன்று மக்கள் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கி மகிழ்வர். ஆபரணங்கள் மீதான பிரியம் காலாகாலத்துக்கும் நம்மைவிட்டு அகலாது. பலவகை கலெக்ஷன்ஸ், டிசைன்ஸ், போன்றவைகளை எதிர்பார்க்கும் நாம், 916 ஹால்மார்க்குடன், செய்கூலி, சேதாரம் மற்றும் விலை குறைவான தங்க நகைகளை வாங்கவே விரும்புவோம்.

குறைந்த விலையில் சிறந்த தங்கநகைகள்!

புது நகை வாங்கும்போதும், பழைய நகைகளை எக்ஸ்சேஞ் செய்யும்போதும், ஷோரூம்களில் நாம் சந்திக்கும் பிரதான பிரச்னை அதிகப்படியான செய்கூலி மற்றும் சேதாரம். இதைக் குறைத்து, உற்பத்தி விலையில் உயர்தர தங்கம் மற்றும் வைர நகைகளை வழங்குகிறது 'பிரில்லியண்ட் கட்'  நிறுவனம். நகைகளை மெஷின்களில் உற்பத்தி செய்து தருவதால், பிரில்லியன்ட் கட்-ல் 30% சேதாரம் குறைகிறது. இதனால் நமது பணம் மிச்சப்படுகிறது. கைவினை நகைகளைவிட 50% லேசானதாகவும், வலிமையானதாகவும் பிரில்லியண்ட் கட் நகைகள் உள்ளன. 

பிரில்லியண்ட் கட்-ல் நாம் விரும்பிய டிசைன்களை ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். மெஷின்களில் தயாரிக்கப்படும் நகைகள் முழுமை பெறுவதில் குறையேதும் இருப்பதில்லை என்பதால் மனநிறைவோடு நகைகளை பெற்றுச்செல்லலாம்.

விகடன் வாசகர்களுக்கு சிறப்பு ஆஃபராக பழைய நகைகளை விற்கும்போதும்/எக்ஸ்சேஞ் செய்யும்போதும்,பிடித்தம் ஏதுமின்றி பழைய நகைகளை அன்றைய தினத்திற்குரிய விலையிலேயே பிரில்லியண்ட் கட் வாங்கிக்கொள்கிறது.

இந்த அட்சய திரிதியையில் இல்லத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைய பிரில்லியண்ட் கட் நகைகளை வாங்கிக் கொண்டாடலாம்! மேலும் விவரங்களுக்கு +91 98402 29990 

நீங்க எப்படி பீல் பண்றீங்க