`இந்த போட்டோவுல அப்டி என்னதான்யா இருக்கு?' - ட்விட்டர்வாசிகளை அலறவிடும் ஒரு ட்வீட் | "What's in this photo"-twitter explodes

வெளியிடப்பட்ட நேரம்: 21:59 (26/04/2019)

கடைசி தொடர்பு:12:40 (29/04/2019)

`இந்த போட்டோவுல அப்டி என்னதான்யா இருக்கு?' - ட்விட்டர்வாசிகளை அலறவிடும் ஒரு ட்வீட்

மனிதர்களுக்கு மர்மமாக இருக்கும் ஒரு விஷயத்தை ஆராய்வதில் எப்போதும் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். அதன் பின்புலத்தைப் பற்றி தெரிந்து ஒரு பயனும் இல்லையென்றாலும்கூட அதனால் எந்த ஆர்வத்துக்குக் குறைவிருக்காது. சமூக வலைதளங்களில் அடிக்கடி இதுபோன்ற விவாதங்கள் நடப்பது வழக்கமான ஒரு விஷயம்தான். அதேபோல் ட்விட்டர்வாசிகளின் தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்திருக்கிறது ஒரு போட்டோ. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னால் @melip0ne என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து ஒருவர் போட்டோ ஒன்றை அப்லோட் செய்திருந்தார். மேலும், அந்தப் போட்டோவில் இருக்கும் ஒரே ஒரு பொருளின் பெயரைக் கூறுங்கள் பார்க்கலாம் என்றும் அந்த ட்வீட்டின் மூலமாகச் சவால் விட்டிருந்தார்.

வைரல் ட்விட்டர் போட்டோ

பார்ப்பவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டிருந்த அந்த போட்டோவில் இருக்கும் பொருள்களை யாராலும் சரியாக அடையாளம் காண முடியவில்லை. எனவே, அது பலரும் அதற்குக் கீழே பதிலளித்தது மட்டுமின்றி, அதை ரீட்வீட்டும் செய்தார்கள். அதனால் இந்தப் போட்டோ வைரலாகப் பரவியது. ஒரு சிலர் இந்தப் போட்டோவில் இருக்கும் பொருள்கள் என்னவாக இருக்கலாம் என்பதைக் கனித்திருக்கிறார்கள், அதே நேரம் பலரும் இதனால் தாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு பொருளை அடையாளம் கண்டுபிடிக்க முடியுதா மக்களே?.