கரியர் பிரேக் அப்... எளிதாக வேலையில் சேர 5 யோசனைகள்! | How to focus on your career after a break?

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (27/04/2019)

கடைசி தொடர்பு:17:44 (27/04/2019)

கரியர் பிரேக் அப்... எளிதாக வேலையில் சேர 5 யோசனைகள்!

வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதில் எந்த சமரசமும் செய்துகொள்ளத் தேவையில்லை. ஆனால் சிறிது இடைவெளிக்குப் பின்னர் கரியரைத் தொடர நேர்ந்தால் பதவி மற்றும் சம்பளத்தில் சமரசம் செய்துகொள்ளலாம்.

கரியர் பிரேக் அப்... எளிதாக வேலையில் சேர 5 யோசனைகள்!

தாவது ஒரு காரணத்தினால், கரியரில் இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது என்றால், வாழ்க்கையே முடிந்துவிட்டது என மனமுடைந்து போய்விடாதீர்கள். ஆண்களைவிட, திருமணத்துக்குப் பின் பெண்கள்தான் இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இந்த `கரியர் பிரேக்' இடைவெளியைச் சரியான முறையில் அணுகினால், இடைவெளிக்குப் பிறகும் எளிதில் பணியில் சேரமுடியும். அதற்கு அடிப்படையாக நீங்கள் சில விஷயங்களில் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் திறமை உள்ளவர் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு முழு நம்பிக்கையுடன் வேலை தேடத் தொடங்க வேண்டும். உங்கள் லட்சியத்தில் எந்த சமரசமும் இன்றி பிடித்தமான வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஓர் இடைவெளிக்குப் பிறகு வேலைக்கு மீண்டும் செல்வது என்பது சுயமரியாதை சார்ந்த விஷயம் என்பதால், மனிதர்களைத் தைரியமுடன் எதிர்கொள்ள வேண்டும். 

1. அப்டேட் அவசியம்

உங்களின் சிந்தனை எப்போதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். இடைவெளி ஏற்படும் காலத்தில் விருப்பமான கோர்ஸில் சேர்ந்து படிக்கலாம். அதன் பின்னர் அவற்றை ரெஸ்யூமில் அப்டேட் செய்து கல்லூரி சான்றிதழ்களுடன் சேர்த்து பயோ-டேட்டாவை தயாராக வைத்திருக்க வேண்டும். இடைவெளியின்போது ஏதாவது புதிய கோர்ஸ் படித்திருந்தீர்கள் என்றால், நிறுவனங்களுக்கு இன்டர்வியூ செல்லும்போது அது உங்களின் ஆர்வத்தை உயர்த்திக் காண்பிக்கும்.

கரியர் பிரேக் அப்

2. நண்பர்களின் தொடர்பு

வேலை விஷயத்தில் லிங்கிடுஇன் (LinkedIn) இணைய தளத்திலும் மற்றும் பிற சோஷியல் மீடியா போன்றவற்றிலும் அலுவலக நண்பர்கள் தொடர்பிலேயேதான் இருப்பார்கள். இடைவெளிக்குப் பிறகு வேலை தேடும் விஷயத்தை முதலில் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வேலை தேடும் விஷயத்தை எவரிடமும் மறைக்கத் தேவையில்லை. உங்களின் பயோ-டேட்டாவை மாற்றம் செய்து, இடைவெளி ஏற்பட்டதற்கான காரணத்தை குறிப்பிட்டு Naukri போன்ற வலைதளங்களில் பதிவேற்றுங்கள். சமூக வலைதளங்களில் வேலை தேடும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, உங்களைப் போன்றே பிரேக் எடுத்து வேலை தேடுகிறவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் ஆலோசனைகள் பெறும் வாய்ப்பும் கிடைக்கும். மேலும், உங்களை ரெஃபர் செய்வதற்கும், உங்கள் தகுதிக்கேற்ற வேலை தரும் நிறுவனங்கள் உங்களைக் கண்டறிவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. 

3. சமரசம் செய்துகொள்ளுங்கள்

வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதில் எந்த சமரசமும் செய்துகொள்ளத் தேவையில்லை. ஆனால், சிறிது இடைவெளிக்குப் பின்னர் கரியரைத் தொடர இருப்பதால் பதவி மற்றும் சம்பளத்தில் சமரசம் செய்துகொள்ளலாம். குறைந்த சம்பளமாக இருந்தாலும் வேலைக்குச் சேர்ந்துவிட்ட பின்னர் உங்கள் திறமையை நிரூபித்து அதே நிறுவனத்தில் சம்பள உயர்வும், பதவி உயர்வும் பெறலாம். அல்லது சில மாதங்கள் அனுபவத்துக்குப் பிறகு வேறு நிறுவனத்துக்குக்கூட மாறலாம்.

4. ரீ-என்ட்ரி வேலைவாய்ப்புகள்

கரியர் பிரேக் அப்

சில நிறுவனங்கள் கரியர் பிரேக்கிற்குப் பிறகு மீண்டும் வேலைக்குச் சேரும் பெண்களுக்காகவே, பிரத்தியேகமான சலுகைகளை வழங்குகின்றன. பகுதி நேர வேலை, வீட்டிலிருந்த படியே நிறுவனங்களின் பிராஜெக்ட்களைச் செய்து தருவது, செய்ய முடிகிற வேலைப் பளுவை மட்டும் ஏற்றுக்கொள்ளுதல் எனப் பல சாய்ஸ்களை நிறுவனங்கள் வழங்குகின்றன. இதுபோன்ற வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக்கொண்டால், நமது திறமையை நிரூபித்து கரியரில் அடுத்தகட்ட நிலையை அடையலாம். 

5. தொழில்முனைவோர் ஆகும் வாய்ப்பு

கரியர் பிரேக் அப்

தங்களுக்கு வசதியான வேலை நேரம், பொருளாதார ரீதியாகத் தனித்து இயங்கும் வாய்ப்பு எனச் சொந்தமாக தொழில் செய்வதில் சில அனுகூலங்கள் இருப்பதைப் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். கரியர் பிரேக்கிற்குப் பிறகு, தொழில்முனைவோர் ஆவது பற்றி யோசிக்கிறார்கள். இதில் தவறேதும் இல்லை. தங்களின் வேலை சார்ந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு தன்னம்பிக்கையுடன் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளைத் தேடலாம் அல்லது புதிதாக தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்களில் தங்களது வேலை அனுபவத்தைக் கொண்டு ஆலோசகராக பணிபுரியலாம். 


டிரெண்டிங் @ விகடன்