தேங்காய் எண்ணெய், கற்றாழை மூலம் வீட்டிலேயே தயாரிக்கலாம் ஹேண்ட்மேட் சோப்! #HandMadeSoap | easy steps for natural homemade soap preparation

வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (30/04/2019)

கடைசி தொடர்பு:14:43 (30/04/2019)

தேங்காய் எண்ணெய், கற்றாழை மூலம் வீட்டிலேயே தயாரிக்கலாம் ஹேண்ட்மேட் சோப்! #HandMadeSoap

உங்கள் வீட்டில் சோப்மோல்ட் இல்லையெனில் வீட்டில் உள்ள குழிவான பொருள்களில் பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது சோப் பேஸ்ஸினை ஊற்றவும். காய்ந்த பின் எடுத்துப் பயன்படுத்த முடியும்.

தேங்காய் எண்ணெய், கற்றாழை மூலம் வீட்டிலேயே தயாரிக்கலாம் ஹேண்ட்மேட் சோப்! #HandMadeSoap

செக்கு எண்ணெய், வீட்டிலேயே தயாரிக்கும் குளியல் பொடி என்று முடிந்தளவு வீட்டில் தயாரிக்கும் பொருள்களை உபயோகிக்கப் பழகியிருக்கிறோம். அந்த வகையில், வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி இயற்கையான ஹேண்ட்மேட் சோப் தயாரிக்கக் கற்றுத்தருகிறார் பெங்களூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா.

தேவையானவை :

ஹேண்ட்மேட் சோப்

 

தேங்காய் எண்ணெய் - 470 மில்லி ( வாசனை திரவியங்கள் சேர்க்காதது ) 

கற்றாழையின் சதைப்பகுதி - 25 கிராம்

தண்ணீர் - 130 மில்லி

காஸ்டிக் சோடா - 68 கிராம் ( ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும் ) 

பிளாஸ்டிக் ஸ்பூன் - 1

பௌல் - 2

பிளெண்டர்  - 1

சோப் மோல்ட் - 1

( கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் 100 கிராம் அளவுள்ள ஆறு சோப்புகள் செய்ய முடியும் )

 செய்முறை :

ஸ்டெப்- 1:

 கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி உள் இருக்கும் சதைப்பகுதியை மட்டும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் - 2 :

தேங்காய் எண்ணெயுடன் கற்றாழையின் சதைப்பகுதியைச் சேர்த்து ப்ளெண்டர் பயன்படுத்தி கட்டிகள் இல்லாமல் நன்கு அடித்துக்கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் கற்றாழை சேர்த்து நன்கு கலந்ததும் எண்ணெயின் நிறம் வெள்ளையாக மாறும். இதுவே சரியான பதம். ப்ளெண்டர் இல்லாதவர்கள் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.சோப்புக்கான பேஸ் தயார்.

ஸ்டெப் - 3 :

கண்ணாடி பௌலில் சுத்தமான தண்ணீர் எடுத்து அத்துடன் காஸ்டிக் சோடா சேர்த்துக் கலக்கவும். தண்ணீரில் காஸ்டிக் சோடா கலந்ததும் தண்ணீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டு, தண்ணீர் சூடாக ஆரம்பிக்கும். சூடான தண்ணீரை 10 நிமிடம் குளிரவிடவும்.

ஸ்டெப் - 4 :

ஆறிய காஸ்டிக் சோடா கலந்த தண்ணீரை கற்றாழை, தேங்காய் எண்ணெய் கலவையில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும். கலவையின் பதம் சிறிது கெட்டியானதும் சோப் மோல்டில் ஊற்றி 24 மணிநேரம் காயவிடவும்.

ஸ்டெப் - 5 :

சோப் காய்ந்ததும் மோல்டிலிருந்து சோப்பைத் தனியாக எடுத்து நான்கு வாரம் நிழலில் காயவைத்து பிறகு, பயன்படுத்தவும்.

சோப்

 

டிப்ஸ் :

உங்களுடையது சென்சிடிவ் ஸ்கின் எனில், வண்ணங்கள் எதுவும் சேர்க்காமல் இப்படியே பயன்படுத்தலாம்.சோப்பில் நிறம் வேண்டும் என நினைப்பவர்கள் தக்காளி, பீட்ரூட், கேரட், மாதுளை போன்ற இயற்கையான பொருள்களிலிருந்து சாறுகள் எடுத்து சோப்புக்கான பேஸில் கலந்துகொண்டால் நீங்கள் விரும்பும் நிறம் கிடைக்கும்.

குழந்தைகளுக்கான சோப் எனில் துளசி, வேப்பயிலை, பாசிப்பயறு போன்றவற்றைக் காயவைத்துப் பொடித்து சோப் பேஸ் தயாரிக்கும் போது சேர்த்துக்கொள்ளலாம்.

சோப்பில் நறுமணம் வேண்டும் என நினைப்பவர்கள் ரோஸ்வாட்டர், சந்தன எண்ணெய், லாவண்டர் ஆயில் போன்றவற்றை சோப் பேஸில் சில துளிகள் சேர்த்துக்கொள்ளவும்.

உங்கள் வீட்டில் சோப்மோல்ட் இல்லையெனில் வீட்டில் உள்ள குழிவான பொருள்களில் பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது சோப் பேஸை ஊற்றவும். காய்ந்த பின். எடுத்துப் பயன்படுத்தவும். 

வறட்சியான சருமம் கொண்டவர்கள் எனில், சோப் தயாரிக்கும்போது 100 கிராம் ஆலிவ் ஆயில் சேர்த்துக்கொள்ளலாம்.

சோப்பு பயன்படுத்தும்போது அதிக நுரை வர வேண்டும் எனில் சிறிது நல்லெண்ணய் சேர்த்துப் பயன்படுத்தவும்.

சருமத்தைப் பாதுகாக்கும் இயற்கையான ஹேண்ட்மேட் சோப் தயார்.


டிரெண்டிங் @ விகடன்